கட்டிடத்திற்கு தீவைத்த மனநலம் பாதித்தவர்! 7 பேர் உடல்கருகி பலி

கட்டிடத்திற்கு தீவைத்த மனநலம் பாதித்தவர் - 7 பேர் உடல்கருகி பலி
 | 

கட்டிடத்திற்கு தீவைத்த மனநலம் பாதித்தவர்! 7 பேர் உடல்கருகி பலி

தைவான் நாட்டில் உள்ள தைனான் நகரில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அதிகாலை நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீயில் சிக்கி 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கட்டிடத்தின் ஜன்னல் வழியாக வெளியே குதித்த 2 பேர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 37 பேரை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக 21 வயது வாலிபர் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்தனர். 10 லிட்டர் பெட்ரோலை ஊற்றி கட்டிடத்துக்கு தீ வைத்ததாக அந்த நபர் ஒப்புக்கொண்டார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. தீ வைத்ததற் கான காரணம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP