மதுபோதையில் தகராறு செய்த தந்தை.. ஆத்திரத்தில் வெட்டிக் கொன்ற சிறுவன்..

மதுபோதையில் தகராறு செய்த தந்தை.. ஆத்திரத்தில் வெட்டிக் கொன்ற சிறுவன்..
 | 

மதுபோதையில் தகராறு செய்த தந்தை.. ஆத்திரத்தில் வெட்டிக் கொன்ற சிறுவன்..

கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள சிராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (48). இவர் ஒரு முன்னாள் ராணுவீரர். இவருக்கு அமுதவள்ளி (42) என்ற மனைவியும் சச்சின்குமார் (17) என்ற மகனும் உள்ளனர். கருப்புசாமி மதுவுக்கு அடிமையாகி வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி அமுதவள்ளியும் மகன் சச்சின்குமாரும் கடந்த 6 ஆண்டுகளாக தனியே வாழ்ந்து வருகின்றனர். மகன் காரமடையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

மதுபோதையில் தகராறு செய்த தந்தை.. ஆத்திரத்தில் வெட்டிக் கொன்ற சிறுவன்..

இந்நிலையில் கருப்புசாமி தன் மனைவிக்கு போன் செய்து பேச வேண்டும் என வீட்டிற்கு வரச்சொல்லி உள்ளார். இதனையடுத்து அமுதவள்ளி மற்றும் சச்சின்குமார் கருப்புசாமியின் வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது அங்கு குடிப்போதையிலிருந்த கருப்புசாமி இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. ஆத்திரத்தில் கருப்புசாமி அரிவாள் எடுத்து மகனை வெட்ட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

மதுபோதையில் தகராறு செய்த தந்தை.. ஆத்திரத்தில் வெட்டிக் கொன்ற சிறுவன்..

அப்போது அவரது கையில் இருந்த அரிவாளை பிடிங்கிய மகன், அவரது அப்பாவை சரமரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கருப்புசாமியின் உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் உடல்கூராய்விற்காக கொண்டு சென்றனர். மேலும் தந்தையை கொன்ற மகன் சச்சின்குமாரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP