சினிமாக்காரர்களின் அலட்சியப் போக்கு! இனி இங்கேயெல்லாம் ஷூட்டிங் கிடையாது!

சினிமாக்காரர்களின் அலட்சியப் போக்கு! இனி இங்கேயெல்லாம் ஷூட்டிங் கிடையாது!
 | 

சினிமாக்காரர்களின் அலட்சியப் போக்கு! இனி இங்கேயெல்லாம் ஷூட்டிங் கிடையாது!

சிறப்பு பள்ளிகளில் ஷூட்டிங் நடத்த அனுமதி இல்லை!

தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்காக 20 அரசு சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. விழித்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்ட இந்த மாதிரியான பள்ளிகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்பட்டு கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த பள்ளிகளில் திரைத்துறையினர் படப்பிடிப்பு நடத்துவதால், மாணவ, மாணவிககளும், ஆசிரியர்களும் மிகுந்த  சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் அரங்கராஜா  இது குறித்து பேசுகையில் சிறப்புப் பள்ளிகளில் படப்பிடிப்புகள் நடத்தப்படும் போது தாங்கள் உபயோகித்த  பொருட்களை அந்தந்த இடத்தில் அப்படி அப்படியே விட்டுச் செல்கிறார்கள்.

குப்பைகளை அதிகம்  சேர்கிறது. மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர்கள் இதைக் கையாள்வது மிகவும் சிரமமான காரியம். வார இறுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்படும் போது அந்நாட்களில் வேலைக்கு வருகிற ஆசிரியர்களும், விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவ  மாணவியர்களும் உடலளவிலும், மனதளவிலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் சிறப்பு பள்ளிகளில் இனிமேல் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை என்று சங்கத்துணை தலைவர் கூறியுள்ளார்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP