பள்ளியில் போதையில் தள்ளாடிய தலைமை ஆசிரியர்.. கிராம மக்கள் ஆத்திரம்!

பள்ளியில் போதையில் தள்ளாடிய தலைமை ஆசிரியர்.. கிராம மக்கள் ஆத்திரம்!
 | 

பள்ளியில் போதையில் தள்ளாடிய தலைமை ஆசிரியர்.. கிராம மக்கள் ஆத்திரம்!

நவீனமயமாகிவிட்ட இக்காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் சிலரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையிலேயே உள்ளது. கடந்த வாரம் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பள்ளி மாணவர், மாணவிக்கு செயின் அணிவித்து வீடியோ பதிவிட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் போதிக்க வேண்டிய தலையாய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது.

பள்ளியில் போதையில் தள்ளாடிய தலைமை ஆசிரியர்.. கிராம மக்கள் ஆத்திரம்!

ஆனால் ஆசிரியர்களே ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டால் என்ன செய்து என்பது தான் இப்போது எழுந்துள்ள கேள்வி. அப்படி ஒரு சம்பவம் மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்துள்ளது. வலைச்சேரிப்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 23 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்த பள்ளியில், கொட்டாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.

பள்ளியில் போதையில் தள்ளாடிய தலைமை ஆசிரியர்.. கிராம மக்கள் ஆத்திரம்!

3 ஆண்டுகளாக, இந்த பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் சரவணன், அடிக்கடி பள்ளிக் கூடத்திற்கு மதுபோதையில் வருவதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த கிராம மக்கள், சரவணனை பலமுறை கண்டித்துள்ளனர். எனினும் அதனை கண்டுக்கொள்ளாத தலைமை ஆசிரியர், மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தலைக்கேறிய போதையில் தள்ளாடியபடியே அவர் வகுப்பறைக்கு வந்துள்ளார்.

பள்ளியில் போதையில் தள்ளாடிய தலைமை ஆசிரியர்.. கிராம மக்கள் ஆத்திரம்!

இந்த தகவல் கிராமத்திற்குள் பரவியதும், பொதுமக்கள் ஏராளமானோர் பள்ளிக்கு வந்து அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த பொறுப்பற்ற ஆசிரியரை கிராமத்தினர் வீட்டிற்கு அனுப்பி வைத்து, வட்டார கல்வி அதிகாரியிடமும் புகார் அளித்தனர். இதையடுத்து போதை தலைமையாசிரியரை மாவட்ட கல்வி அலுவலர் மீனாவதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP