பலாத்காரம் செய்த சொந்தக்காரன்! அதிர்ந்து உயிரைவிட்ட பேராசிரியை!

தனது சகோதரி கணவரின் தம்பி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்தினால் மனமுடைந்த ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒடிசாவில் நடந்தேறியுள்ளது.
 | 

ஒடிசாவை சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவர் பெண்கள் விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று, சகோதரியின் வீட்டிற்கு பேராசிரியை சென்ற போது, சகோதரி கணவரின் தம்பி குடிபோதையில் இருந்துள்ளார். அவர் மட்டுமே தனியாக இருந்ததால், போதை தலைக்கு ஏறி பேராசிரியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து, விடுதிக்கு திரும்பிய அந்த பேராசிரியை, மனமுடைந்து தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன்பின், குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேராசிரியை பாலியால் பலாத்காரம் செய்த நபர், இதற்கு முன்பாகவே இது மாதிரி செய்து, அது தொடர்பாக பேராசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், அந்த நபர் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP