தந்தை இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மாணவி - மனதை உருக்கும் நிகழ்வு!!

தந்தை இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மாணவி - மனதை உருக்கும் நிகழ்வு!!
 | 

தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி!! நெகிழ வைத்த நிகழ்வு!!

சாலை விபத்தில் மரணமடைந்த நடத்துநர் குடும்பம் குறித்து ஒரு உருக்கமான சம்பவம் இப்போது வெளியாகியுள்ளது. ஒரு தந்தை, மகளுக்கு இடையேயான உறவை ஒற்றை வினாடியில் சிதைத்துள்ளது அந்த விபத்து. திருப்பூர் மாவட்டம் அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற சொகுசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம்  நாட்டையே உலுக்கியது.

தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி!! நெகிழ வைத்த நிகழ்வு!!

இதில் பேருந்தின் நடத்துனர் பைஜும் உயிரிழந்தார். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ளது வெளியநாடு என்ற ஒரு கிராமத்தில் அழகான குடும்பத்துடன் வசித்து வந்தார் அந்த நடத்துனர். இவருக்கு பவித்ரா பைஜு என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி உள்ளார். மாணவி பவித்ராவுக்கு மறுநாள் தேர்வு என்பதால், முந்தைய நாள் இரவில் தந்தையிடம் கூறியுள்ளார். காலையில் வீட்டிற்கு வந்துவிடுவேன் நன்றாக தேர்வு எழுது என தந்தை பைஜு, தனது மகளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி!! நெகிழ வைத்த நிகழ்வு!!

எனினும் தந்தை காலையில் வராத நிலையில் எதுவும் அறியாத மாணவி தேர்வு எழுத சென்றுவிட்டார். அந்த பொழுதில் நிகழ்ந்த அவிநாசி அருகே நிகழ்ந்த விபத்தில் தான் பைஜு உயிரிழந்துவிட்டார். மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றப்போது தான் தனது தந்தையின் நிலை குறித்து அறிந்தார். இதனைக் கேட்ட அவர் மிகுந்த அதிர்ச்சியாகி, அழுக தொடங்கிட்டார். இது அவரது உறவினர்கள், அங்கிருந்த மக்கள் மனத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தந்தை இறந்தது தெரியாமலேயே தேர்வு எழுதிய மாணவி!! நெகிழ வைத்த நிகழ்வு!!

2018 மற்றும் 2019 கேரள வெள்ளத்தின் போது நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பைஜு தீவிரமாக செயல்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இங்கே பைஜூவின் நண்பர்கள் குழு உள்ளது, அவர்கள் அனைவரும் 10 ஆம் வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள். பஞ்சாயத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவர்கள் முன்னணியில் இருந்தனர். வெள்ளத்தின் போது, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதை அவர்கள்தான் ஒருங்கிணைத்து வந்தனர். பைஜுதான் அவர்களை வழிநடத்தினார் என்றும் கண்ணீருடன் நினைவு கூறுகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP