பாகனை கொஞ்சுவதற்காக யானை செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!! 

ஆசையாக வளர்த்து வரும் விலங்குகள், எப்போதுமே தன் எஜமானரை யாரிடமும் விட்டுக் கொடுப்பதில்லை. பணத்திற்கும், சூழலுக்கும் நிறம் மாறும் குணம் மனிதர்களிடம் மட்டுமே காணப்படுகிறது. தன்னைப் பராமரித்து வரும் பாகன் மீது இந்த குட்டி யானை காட்டும் அன்பை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 | 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்யசபா எம்பி பரிமல் நாத்வானி, அவருடைய  ட்விட்டர் பக்கத்தில் குட்டி யானை ஒன்று, பாகனைக் கொஞ்சும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். தாய்லாந்தில் உள்ள மோ சா யானைகள் முகாமில் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில், 20 வயது குட்டி யானை ஒன்று, தன்னை அன்புடன் பராமரித்து வரும் பாகனை கொஞ்சுவதற்கு ஆசைபட்டு, அது அடைக்கப்பட்டு இருக்கும் தடுப்பு கம்பிகளை தாண்ட முயற்சித்து, துதிக்கையை நுழைத்து அவரை அரவணைத்துக் கொள்ள அழைக்கிறது. அவர், யானையின் அழைப்பை கவனிக்காமல், அந்த தடுப்பு வேலிக்கு பெயிண்ட் அடிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.

பின்னர், அந்த யானை, தடுப்பு வேலியின் மீது, தனது முன்னங்கால்களை தூக்கி வைத்து குதிக்க முயற்சிக்கிறது. ஒவ்வொரு முறையும் அவரை அன்பால் அரவணைக்கிறது. யானை பாகனும், யானையின் அன்பை ஏற்று கொஞ்சுகிறார். பலரும் பாசமழை வீடியோவை நெகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகிறார்கள். மனிதனுக்கும் விலங்குக்குமான சிறந்த வாழ்விற்கு இது ஒரு உதாரணம் என்று எம்பி. இதை ஷேர் செய்து கூறியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP