பாபாவின் பக்தன் எல்லா ஜென்மத்திலும் புண்ணியம் செய்தவனே..

பாபா.. இந்த ஒற்றை வார்த்தை தான் பலரையும் பக்குவமாக வாழவைத்துகொண்டிருக்கிறது. அப்படி என்ன தான் இருக்கும் இந்த இரண்டெழுத்து மந்திரத்தில்.. கேட்பவர்களும் குறையவில்லை. கேள்விக்கு பதில் அளிப்பவர்களும் சலிக்கவில்லை. பதில்களு கேட்கும் நேரத்துக்கேற்ப மாறிகொண்டு தான் இருக்கிறது.
 | 

பாபாவின் பக்தன் எல்லா ஜென்மத்திலும் புண்ணியம் செய்தவனே..

பாபா.. இந்த ஒற்றை வார்த்தை தான் பலரையும் பக்குவமாக வாழவைத்துகொண்டிருக்கிறது. அப்படி என்ன தான் இருக்கும் இந்த இரண்டெழுத்து மந்திரத்தில்.. கேட்பவர்களும் குறையவில்லை. கேள்விக்கு பதில் அளிப்பவர்களும் சலிக்கவில்லை. பதில்களு கேட்கும் நேரத்துக்கேற்ப மாறிகொண்டு தான் இருக்கிறது. 
காலங்காலமாக சிவம், வைணவம் என்று  தங்களுக்குள் ஒரு பிரிவை மட்டும் நேசித்தவர்களாகட்டும், எல்லா கடவுளையும் வணங்கியவர்களாகட்டும் அனைவரையும் நீக்கமற  ஈர்த்துவிட்டது என்னவோ பக்கிரி  தான். கடவுளிடம் இதை கொடு, எனக்கு இதெல்லாம் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பெறுவதெல்லாம் பாபாவிடம் நடக்காது. எப்போது யாருக்கு என்ன தரவேண்டும் என்பதை  கேட்பவர்களை விட கொடுப்பவருக்கு நன்றாகவே தெரியும். 

                                                        பாபாவின் பக்தன் எல்லா ஜென்மத்திலும் புண்ணியம் செய்தவனே..

பாபாவோடு வாழ்க்கையை கழித்தவர்கள்  பாக்கியசாலிகள். எப்போதும் அவருடன் இருப்பதுதான் இந்த பிறப்புக்கு உரிய வாழ்க்கை என்பதை பக்தியோடும் ஆத்ம திருப்தியோடும் உணர்ந்தார்கள். அவர்கள்  துளிகணமும் பாபாவை விட்டு விலகவே இல்லை. விலக நினைத்ததும் இல்லை. ஆனால் பாபாவாக அழைத்து கொடுக்கும் பணிக்காக தொலைதூரம் சென்றாலும் அவர்கள் கலங்கியதில்லை. எப்போதும் பாபாவின் கரம் பிடித்தே பாதையை கடப்பதாக நினைத்தார்கள். உணர்ந்தார்கள். 

இதைதாண்டி பாபாவை காணவே அவ்வபோது பெருங்கூட்டம் படையெடுப்பது உண்டு. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பக்தனும் பாபாவை மட்டுமே நினைத்து பாபா தான் எல்லாம் என்னும் நினைப்பில் வருவார்கள். ஒருமுறை  ஷீர்சாகர் என்னும் பக்தர் பாபாவை காண வந்திருந்தார். பக்தனாய் வரிசையில் நின்று பாபா அருகில் வந்தபோது பாபா அவரை உற்று நோக்கினார். பிறகு உன் தந்தை தீவிர விஷ்ணு பகவானின் பக்தர், அதனால் தான் உனக்கு அந்த ஷீர்சாகரைன் பெயரை வைத்தார். தினமும் வீட்டில் அவருக்கு பூஜையும் நைவேத்யமும் நடந்தது. ஆனால் இப்போது நீ என்னையே நினைத்து அவரை பட்டினி போட்டுவிடுகிறாய். பகவானை பட்டினியில் விடலாமா? இனிமேல் பகவானுக்கு நைவேத்யம் செய்யும் பலகாரங்களை மட்டும் சாப்பிடு என்றார்.

                                                                பாபாவின் பக்தன் எல்லா ஜென்மத்திலும் புண்ணியம் செய்தவனே..

ஷீர்சாகர் சற்று நேரம் எதுவும் பேசாமல் பாபவையே பார்த்தார். பிறகு எனக்கு எல்லாமே நீங்கள் மட்டும் தானே. உங்களை விட வேறு எந்த பகவானும் எனக்கு தெரிவதில்லை. அதையும்  விட பார்க்கும் கிருஷ்ணராக இருக்கட்டும், விஷ்ணுவாக இருக்கட்டும், பரமனாக இருக்கட்டும் எல்லாரையும் உங்களிடமே காண்கிறேன். அப்படியிருக்க தனி வழிபாடும், பூஜைகளும், புனஸ்காரங்களும் நான் செய்ய வேண்டுமா என்றார்.

பாபா மென்மையாக புன்னகைத்தார். தரித்தரத்தால் நொடிந்து போனவர்கள் புகலிடம்  தேடி செல்லும் இடம் ஆலயம் தான். அந்த ஆலயத்தில் அவர்களை வரவேற்கவும், அவர்களுக்கு அன்னதானம் இடவும், அந்த இடத்தை பராமரிக்கவும்  வசதியான உன்னை போன்றவர்கள் உதவி புரிய வேண்டாமா? இதுவும் உங்கள் கடமைதானே என்றார்.  ஷீர் சாகருக்கு தன்னுடைய தவறு புரிந்தது. உண்மைதான் பாபா. இனி நீங்கள் சொன்னபடியே நடந்துகொள்கிறேன் என்றார். ஷீர் சாகருக்கு மட்டும் கூறியதில்லை, நம் ஒவ்வொருவருக்கும் தான் உணர்த்தியிருக்கிறார். உங்களிடம் அதிகம் இருப்பதை பகிர்ந்து உண்ணுங்கள். நானும் அந்த ஒருவரில் இருப்பேன் என்று சொல்லும் பாபாவின் பக்தன் உண்மையில் எல்லா ஜென்மத்திலும் புண்ணியம் செய்தவனே.. 

சாய்ராம்...

newstm.in  
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP