‘தர்பார்’ படத்தின் கருத்து நல்ல கருத்து தான்! அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு!

‘தர்பார்’ படத்தின் கருத்து நல்ல கருத்து தான்! அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு!
 | 

‘தர்பார்’ படத்தின் கருத்து நல்ல கருத்து தான்! அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு!

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று ராயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார்.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பொங்கல் பரிசுத் தொகுப்பினை வாங்குவதற்காக பொது மக்கள் காலையிலேயே வர வேண்டாம் என்றும், தினந்தோறும் இரவு 7 மணி வரை இந்த பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுவதால் பொதுமக்கள் பொறுமையாக வந்து வாங்கி செல்ல வேண்டும் என்றும் கூறினார். 

‘தர்பார்’ படத்தின் கருத்து நல்ல கருத்து தான்! அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு!

‘தர்பார்’ படத்தில் சசிகலாவைப் பற்றிய வசனங்களைப் பற்றிய நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ‘தர்பார்’ படத்தில் உள்ள கருத்துக்களைப் பற்றி நானும் கேள்விப்பட்டேன். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் படம் சிறைச்சாலை வரை பாய்வதாக தர்பார் படத்தில் கருத்து உள்ளது. இந்த கருத்து நல்ல கருத்து தான். இது சசிகலாவை பற்றிய கருத்தாக இருக்கும் என எண்ணுகிறேன். இது நல்ல கருத்து.

‘தர்பார்’ படத்தின் கருத்து நல்ல கருத்து தான்! அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு!

இதற்கு மேல் இதை பற்றி கூற விரும்பவில்லை. பொது மக்கள் வரவேற்கக்கூடிய கருத்து தான். ‘தர்பார்’ படத்தையும் பிகில் படத்தையும் நாங்கள் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம். அந்த சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பு காட்சிகள் திரையிட அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர். எங்களுக்கு இரண்டும் ஒன்று தான் என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP