சிறுமியை 20 பேர் சேர்ந்து சீரழித்த கொடூரம்! ஒரு வருடமாக தொடர்ந்த அவலம்!!

உறவினர்கள் 20 பேரால் ஓராண்டாக சீரழிக்கப்பட்ட சிறுமி பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்..!
 | 

சிறுமியை 20 பேர் சேர்ந்து சீரழித்த கொடூரம்! ஒரு வருடமாக தொடர்ந்த அவலம்!!

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 7 வயது சிறுமி, தனது தாய் வீட்டிற்கு மருத்துவ சிகிச்சைக்கு வந்தபோது திடீரென உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பிரம்மதேசத்தை சேர்ந்தவருக்கு 10 மற்றும் 7 வயதில் இரண்டு மகள்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த அப்பெண், இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டு சென்னை சென்னையில் குடியேறினார். இவரது இரண்டு மகள்களையும் தனது தாய் வீட்டில் சொந்த கிராமத்திலேயே விட்டுவிட்டு சென்றார். இந்நிலையில், பாட்டி வீட்டில் வசித்து வந்த இரண்டு மகள்களையும், உறவினர்கள் சிலர் மிரட்டி கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து வெளியில் சொன்னால் இருவரையும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியும் வந்துள்ளனர்.

சிறுமியை 20 பேர் சேர்ந்து சீரழித்த கொடூரம்! ஒரு வருடமாக தொடர்ந்த அவலம்!!

இதற்கிடையே மகள்களை பார்க்க அப்பெண் ஊருக்கு சென்றப்போது, மகள்களுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இரண்டு மகள்களையும் புதுச்சேரிக்கு அழைத்து சென்று அங்குள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். அங்கு, பள்ளி சென்ற மூத்த மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததை பார்த்த பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவியிடம் விசாரணை நடத்தினார். அப்போது, மாணவி நடந்த சம்பவங்களை கூறி அழுதுள்ளார். அதை கேட்ட பள்ளி ஆசிரியை உடனே சைல்டு லைனில் புகார் அளித்தார். அதன்படி, சைல்டு லைன் அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை நடத்தினர். பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட 2 சிறுமிகளையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்தனர். 

சிறுமியை 20 பேர் சேர்ந்து சீரழித்த கொடூரம்! ஒரு வருடமாக தொடர்ந்த அவலம்!!

பின்னர் சம்பவம் குறித்து சைல்டு லைன் அதிகாரிகள் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இரண்டு மகள்களையும் 20க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 20க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 16 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட இரண்டாவது மகளான 7 வயது சிறுமியை மட்டும் அவர் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வந்தார்.

சிறுமியை 20 பேர் சேர்ந்து சீரழித்த கொடூரம்! ஒரு வருடமாக தொடர்ந்த அவலம்!!

நேற்று முன்தினம் இரவு கடுமையாக வயிறு வலிப்பதாக கூறி கழிவறைக்கு சென்ற சிறுமி, வெகு நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த தாயார் கழிவறைக்கு சென்று பார்த்தபோது, மகள் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமி இறப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகளை பலர் பாலியல் பலாத்காரம் செய்ததால் தான், உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு  உயிரிழந்தார் என்று, சிறுமியின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP