பெண்களை துரத்தும் கொடூரர்கள்.. பெட்ரோல் பங்கில் ஆபாச வீடியோ எடுத்த கொடுமை

பெண்களை துரத்தும் கொடுமை.. பெட்ரோல் பங்கில் ஆபாச வீடியோ எடுத்த கொடுமை
 | 

பெண்களை துரத்தும் கொடூரர்கள்.. பெட்ரோல் பங்கில் ஆபாச வீடியோ எடுத்த கொடுமை

பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் உடை மாற்றும் அறையில் கேமரா பொருத்தப்பட்டு, அதில் பதிவான வீடியோ வெளியானதால் பரபரப்பு உருவாகியுள்ளது. 
கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபாகாலனி பகுதியில் ரூட்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள பெட்ரோல் பங்கில் கணவர், மனைவி பணிபுரிந்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பெண் பெட்ரோல்  பங்கில் உள்ள அறையில் உடை  மாற்றிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த  அறையில் ரகசியமாக கேமரா  பொருத்தி வீடியோ  எடுப்பதை அறிந்த அவர், அதே பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் தனது கணவரிடம்  தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் ரகசியமாக கண்காணித்து, கேமரா பொருத்திய  சூபர்வைசரை கையும், களவுமாக பிடித்தார்.

பெண்களை துரத்தும் கொடூரர்கள்.. பெட்ரோல் பங்கில் ஆபாச வீடியோ எடுத்த கொடுமை

சில வீடியோ பதிவுகளை சூபர்வைசரிடமிருந்து கைப்பற்றி வைத்துக்கொண்டார். இதுபற்றி பெட்ரோல் பங்க் நிர்வாக அதிகாரிகளிடம்  புகார் செய்தார். இதையடுத்து, நிர்வாக அதிகாரிகள் இரு தரப்பையும் அழைத்து  பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினரும்,  வீடியோ காட்சிகளை அழித்துவிட்டதாக அதற்குரிய ஆவணங்களை காண்பித்தனர்.

பெண்களை துரத்தும் கொடூரர்கள்.. பெட்ரோல் பங்கில் ஆபாச வீடியோ எடுத்த கொடுமை

இதன்பின்னர், அவர்கள்  சமாதானமாக சென்றதாக தெரிகிறது. ஆனாலும்,  வீடியோ ஆதாரம் மூலம் சூபர்வைசரை போலீசில் சிக்கவைக்க வேண்டும் எனக்கருதிய அந்த பெண்ணின் கணவர் சில வீடியோ காட்சிகளை அழிக்காமல் செல்போனில் பாதுகாத்து  வைத்துள்ளார். அந்த காட்சிகள் சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் மீது பெட்ரோல் திருடியதாக கூறி பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஊழியர்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக இரு தரப்பிலும் காவல்நிலையத்தில் புகார் அளிக்ககப்பட்டது. இதனிடையே தாக்குதலில் காயமடைந்த பெண்ணின் கணவர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP