கோவில் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை.. போலீசார் மீதே மக்கள் குற்றச்சாட்டு

கோவில் பூட்டை உடைத்து அடுத்தடுத்து தொடர் கொள்ளை.. போலீசார் மீதே மக்கள் குற்றச்சாட்டு
 | 

கோவில் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை.. போலீசார் மீதே மக்கள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது தோப்பூர் அங்காள பரமேஸ்வரி சின்ன கருப்பசாமி கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவில் தோப்பூர் அருகே உள்ள காட்டுப் பகுதியில் உள்ளது. இந்நிலையில் மர்மநபர் இக்கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த குத்துவிளக்கு,  எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். கோவிலுக்கு வந்த பூசாரி, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைகண்டு அதிர்ச்சியுற்றுள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார்.

கோவில் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை.. போலீசார் மீதே மக்கள் குற்றச்சாட்டு

தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்தனர். இந்நிலையில், சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த கிராம மக்கள் இதே கோவிலில் தொடர்ந்து மூன்று முறை கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

கோவில் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை.. போலீசார் மீதே மக்கள் குற்றச்சாட்டு

கோவிலில் தொடர்ந்து மூன்று முறை கொள்ளை சம்பவம் நடைபெற்றதில் 2 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP