மத்திய அமைச்சரை தாக்க முயன்ற தமிழக எம்.பி.? மக்களவையில் பரபரப்பு!!

ராகுல் குறித்து பேச்சு..மத்திய அமைச்சரை தாக்க முயன்ற தமிழக எம்.பி.? மக்களவையில் பரபரப்பு
 | 

மத்திய அமைச்சரை தாக்க முயன்ற தமிழக எம்.பி.? மக்களவையில் பரபரப்பு!!

ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில், தமிழக எம்.பி மாணிக் தாகூர் அவரை நெருங்கிச் சென்று எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய இளைஞர்கள் இன்னும் ஆறு மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தடி கொண்டு அடிப்பார்கள் என்றார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், ராகுல்காந்தியின் பேச்சுக்கு கண்டனத்தை பதிவு செய்வதாக குறிப்பிட்டார். மேலும் தனது பேச்சில் ராகுலை வெளிநாட்டவர் என்றார். அப்போது, எதிர்த்தரப்பில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமைச்சருக்கு எதிராக கூச்சலிட்டனர்.

மத்திய அமைச்சரை தாக்க முயன்ற தமிழக எம்.பி.? மக்களவையில் பரபரப்பு!!

சபாநாயகர் குறுக்கிட்டு அமைச்சரை நோக்கி கேள்விக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனினும், அமைச்சரின் கருத்துக்கு எதிர்த்தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்போது விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர் அமைச்சர் இருக்கையின் அருகே விரைந்து சென்றார். அவரை பாஜக எம்பி ஒருவர் தடுத்தார். இதனை அடுத்து, பாஜக உறுப்பினர்கள் அங்கே கூடினர். எதிர்தரப்பில் காங்கிரஸ் எம்.பி.க்களும் அங்கு வர மோதல் சூழல் உருவானது.

மத்திய அமைச்சரை தாக்க முயன்ற தமிழக எம்.பி.? மக்களவையில் பரபரப்பு!!இதனால், கடும் அமளி ஏற்பட அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா. இதனிடையே காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் தன்னை தாக்க முயன்றதாக அமைச்சர் ஹர்ஷவர்தன் புகார் அளித்தார். இதற்கு விளக்கம் அளித்த எம்பி மாணிக் தாகூர், நான் அவரை தாக்க முயற்சிக்கவில்லை என்றும் மாறாக ராகுல்காந்தி குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என கூறியதாக தெரிவித்தார். மேலும் பாஜகவினர் என்னை பிடித்து மிரட்டியதாகவும் இது தொடர்பாக சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP