ஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்!

ஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்!
 | 

ஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்!

குஜாத்தில் ஆரவல்லி மாவட்டம் சரியா என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தன் சகோதரியுடன் மொடாசா என்ற நகருக்கு சென்றார். சகோதரி மட்டும் வீடு திரும்பிய நிலையில், அதிக நேரமாகியும் அந்த பெண் மட்டும் வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் 2019ஆம் ஆண்டின் கடைசி நாளான கடந்த 31ஆம் தேதி நடந்தது. குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் பெண் கிடைக்கவில்லை. அதனால் விடிந்ததும் ஜனவரி 1-ம் தேதி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர். அதனடிப்படையில் போலீசார் விசாரித்தபோது, பிமல் பர்வாட் என்பவர் காரில் கடத்தி சென்றதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்து.

ஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்!

இதன்பிறகு, ஜனவரி 3ஆம் தேதி பெண்ணின் பெற்றோரை அழைத்த காவல்துறையினர், பிமலும் உங்க பொண்ணும் திருமணம் செய்துகொண்டிருப்பார்கள்.. சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஜனவரி 5ஆம் தேதி இந்த கிராமத்தில் உள்ள ஒரு ஆலமரத்தில் ஒரு பெண்ணின் சடலம் தொங்குகிறது என்ற தகவல் கிடைத்து. பெற்றோர், காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தப்போதுதான் தெரிந்தது அது காணாமல் போன இளம்பெண்ணின் சடலம் என்பது.

ஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்!

இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை முடிந்தபின்னர் தான் தெரியவந்தது அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்தது கொல்லப்பட்டது. அதன்பிறகு அப்பெண்ணை கடத்திய பிமலை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கார் மட்டும் தன்னுடையது, ஆனால் பெண்ணை கடத்தியது என் நண்பர்கள் தர்ஷன் பர்வாட், சதீஷ் பர்வாட், ஜிகார், இந்த 3 பேர்தான் என்றார். இதை கேட்டு கிராம மக்களே கொந்தளித்துவிட்டனர்.. தர்ணா, மறியல், முற்றுகை என அகமதாபாத் ஆஸ்பத்திரி முன்பு ஆவேசத்துடன் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த குஜராத் துணை டிஜிபி சமாதானம் பேசினார்.. குற்றவாளிகள் கைதாவார்கள் என்று உறுதி அளித்தார். இளம் பெண்ணை கடத்தி, பலாத்காரம் செய்து, கொன்று தூக்கிலும் தொங்க விட்டுள்ள இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை மக்களுக்கு தந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP