நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.! தூக்கத்திலே நிகழ்ந்த சோகம்!!

நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.! தூக்கத்திலே நிகழ்ந்த சோகம்!!
 | 

நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.! தூக்கத்திலே நிகழ்ந்த சோகம்!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ரயில்வே போலீசாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில் இன்று விடியற்காலை சண்முகமும் அவரது மனைவி வெற்றிச்செல்வியும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் பெட்ரூமில் இருந்த ஏசி வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில், சண்முகமும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர்.

நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.! தூக்கத்திலே நிகழ்ந்த சோகம்!!அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 90 சதவிகித காயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகம் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.! தூக்கத்திலே நிகழ்ந்த சோகம்!!அவரது மனைவி வெற்றிச்செல்வி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP