தர்பார் பட ரிலிஸில் திடீர் சிக்கல்! திட்டமிட்டப்படி படம் வெளியாகுமா?!

தர்பார் பட ரிலிஸில் திடீர் சிக்கல்! திட்டமிட்டப்படி படம் வெளியாகுமா?!
 | 

தர்பார் பட ரிலிஸில் திடீர் சிக்கல்! திட்டமிட்டப்படி படம் வெளியாகுமா?!

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 9ம் தேதி வெளியாகவுள்ளது தர்பார் திரைப்படம். இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தர்பார் திரைப்படத்தின் பிரீமியர் காட்சி நாளை காலை அமெரிக்காவில் வெளியாகவுள்ள நிலையில், தர்பார் படத்தின் ரிலீஸில்  புது பிரச்சனை எழுந்துள்ளது. 

தர்பார் பட ரிலிஸில் திடீர் சிக்கல்! திட்டமிட்டப்படி படம் வெளியாகுமா?!

தர்பார் பட விவகாரத்தில் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. தமிழகத்தில் தர்பார் படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க சொல்லி விநியோகஸ்தர்கள் அழுத்தம் கொடுப்பதால், தமிழகம் முழுவதும் 75 சதவிகிதத்திற்கும் மேலான திரையரங்க உரிமையாளர்கள் இந்த நிமிடம் வரையில் தர்பார் படத்தை வாங்கவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

தர்பார் பட ரிலிஸில் திடீர் சிக்கல்! திட்டமிட்டப்படி படம் வெளியாகுமா?!

டிக்கெட் விலையில் அதிகளவில் விநியோகஸ்தர்கள் பங்கு கேட்பதால் தர்பார் பட ரிலீஸில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. ரஜினி நடித்த கபாலி படத்தின் வெளியீட்டின் போதும் இதே போல் பிரச்சினை உருவானது குறிப்பிடத்தக்கது.

தர்பார் பட ரிலிஸில் திடீர் சிக்கல்! திட்டமிட்டப்படி படம் வெளியாகுமா?!

இந்த திடீர் சிக்கலினால், திட்டமிட்டப்படி தர்பார் படம் திரையரங்குகளில் இம்மாதம் 9ம் தேதி ரிலீஸாகுமா என்கிற அச்சம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP