செல்போனில் ஆபாசமாக பேசி மாணவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு வலைவீச்சு

செல்போனில் ஆபாசமாக பேசி மாணவிக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு வலைவீச்சு
 | 

10ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச வீடியோ! சென்னை இளைஞருக்கு வலைவீச்சு!

செல்போனில் ஆபாசமாக பேசியும், ஆபாச படங்களை அனுப்பியும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பாரிமுனை மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (30). இவர், அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியின் செல்போன் எண்ணுக்கு அடிக்கடி ஆபாச படங்களை அனுப்பியும், பாலியல் ரீதியாக ஆபசமாக பேசியும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச வீடியோ! சென்னை இளைஞருக்கு வலைவீச்சு!

இதனையடுத்து சதாம் உசேன் மீது வடக்கு கடற்கரை போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சதாம் உசேனை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP