பங்குச் சந்தையில் அதிரடி மாற்றம்!

பங்குச் சந்தையில் அதிரடி மாற்றம்!
 | 

பங்குச் சந்தையில் அதிரடி மாற்றம்!


பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய வர்த்தகத்தில் சவூதி அரேபியாவின் அரசு நிறுவனமான சவூதி அராம்கோ செயல்பட்டு வருகிறது.  தற்போது பங்குச் சந்தைகளில் இதன் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று அதன் பங்கு மதிப்பு தொடர்ந்து உச்சம் பெற்று 8 %, இன்று அதைவிட 10.5 உயர்ந்தது. இதன் மொத்த சந்தை மதிப்பு 2 லட்சம் டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இதுவரை இல்லாத அளவில், அதிக சந்தை மதிப்பை உலகில் முதல் நிறுவனம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது.


உலக அளவில் பிரசித்தி பெற்ற ஆப்பிள் நிறுவனம் தான் இதுவரை 1.19 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக இருந்தது.இப்போது,கடந்த இரண்டு நாட்களில் அராம்கோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. பங்குச் சந்தை வர்த்தகத்தில் இது பெரும் சாதனையாக உணரப்படுகிறது.

மேலும், இந்நிறுவனத்தை ஒரு நாடாக கணக்கிட்டால் இது `ஜிடிபி' உலகில் ஒட்டு மொத்த அளவில் உலகில் 8வது பெரிய நாடாக இருக்கும். சீனா நாட்டைச் சேர்ந்த 'அலிபாபா குழுமம்'தான்   2014 ஆம் ஆண்டில் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக இருந்தது.

ஆனால், தற்போதைய அராம்கோ நிறுவனம் 25.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியிருக்கிறது. ரூ. 141 லட்சம் கோடி ரூபாய்கள் (இந்திய மதிப்பின் படி) சந்தை மதிப்பு கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP