திருடியது ரூ.5 லட்சம்.. சிக்கியது ரூ.5 ஆயிரம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வேலைக்காரி கைவரிசை!!

திருடியது ரூ.5 லட்சம்.. சிக்கியது ரூ.5 ஆயிரம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வேலைக்காரி கைவரிசை!!
 | 

திருடியது ரூ.5 லட்சம்.. சிக்கியது ரூ.5 ஆயிரம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வேலைக்காரி கைவரிசை!!

சென்னையில் வேலை செய்த வீட்டில் இருந்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து ரூ.5 லட்சத்தை திருடிய பெண் சிக்கினார். 
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் லட்சுமி (40). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை விட்டு பிரிந்து கோவிந்த் என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை பாடியில் வாடகை வீடு எடுத்து ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி அண்ணாநகரில் உள்ள புஜ்ஜியம்மாள் (49) என்பவர் வீட்டுக்கு தினமும் வேலைக்கு செல்வது வழக்கம். கடந்த ஜனவரி மாதம் புஜ்ஜியம்மாள் 5 லட்சத்தை துணியில் சுற்றி பீரோவில் வைப்பதை லட்சுமி நோட்டமிட்டுள்ளார்.  திருடியது ரூ.5 லட்சம்.. சிக்கியது ரூ.5 ஆயிரம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வேலைக்காரி கைவரிசை!!

இந்நிலையில் புஜ்ஜியம்மாள் நேற்று அந்த பணத்தை எடுக்க தேடியபோது பணம் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், வீட்டு வேலை செய்யும் லட்சுமி மீது சந்தேகம் உள்ளதாக கூறி இருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வீட்டு பணிப்பெண் லட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் கோவிந்த் ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

திருடியது ரூ.5 லட்சம்.. சிக்கியது ரூ.5 ஆயிரம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வேலைக்காரி கைவரிசை!!

அப்போது, ரூ.5 லட்சத்தை திருடி மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைத்ததாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து 5 ஆயிரம் ரூபாயை மட்டுமே பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP