நலிந்து வரும் அட்டைப் பெட்டி தொழிலும்... தவிக்கும் தொழிலாளர்களும்...!

கரூர் மாவட்டத்தில் மட்டும் 20லிருந்து 25 அட்டைப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் நேரிடையாக சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுவதோடு, மறைமுகமாக சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்
 | 

நலிந்து வரும் அட்டைப் பெட்டி தொழிலும்... தவிக்கும் தொழிலாளர்களும்...!

வணிகத்தில் குறிப்பாக, ஜவுளி தொழில், வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் பெரும்பாலான தொழில்கள் உலக அளவில் திரும்பி பார்க்க வைப்பது பெரும்பாலும் கரூர் மாட்டத்தை  சொல்லலாம்.  ஏனெனில் ஜவுளி பொருட்கள் மட்டுமில்லாமல் வீட்டு உபயோக ஜவுளிப்பொருட்களான, முகப்பு திரைச்சீலை, சன்னல் திரைச்சீலை, தலையணை உறை, தலையணை, படுக்கை விரிப்பு, சொகுசு நாற்காலி மெத்தைகள் என்று பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து அதை ஏற்றுமதி செய்வதற்கோ, அல்லது விற்பதற்கோ, அட்டைப்பெட்டிகள் தான் அவசியமாக உள்ளது. 

நலிந்து வரும் அட்டைப் பெட்டி தொழிலும்... தவிக்கும் தொழிலாளர்களும்...!

அதனால் கரூர் மாவட்டத்தில் மட்டும் 20லிருந்து 25 அட்டைப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.  இந்த தொழிற்சாலைகளில் நேரிடையாக சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுவதோடு, மறைமுகமாக சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். இது குறித்து நாம் ஒரு அடைப் பெட்டி தொழிலாளரிடம் கெட்டோம், அப்போது அவர் நம்மிடம் பல குறைகளை முன்வைத்தார்.  

நலிந்து வரும் அட்டைப் பெட்டி தொழிலும்... தவிக்கும் தொழிலாளர்களும்...!

ஒரு டன் அட்டைப் பெட்டிகளுக்கு முன்பு ஆயிரம் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை லாபம் கிடைத்தது.  ஆனால் தற்போது 500 ரூபாய்தான் கிடைக்கின்றது . இதை வைத்து நாங்கள் ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதா, லாபம் பாப்பதா என்று அட்டைபெட்டி தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிகின்றனர்.  இதனால் அட்டைப்பெட்டி தயாரிப்பு நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே 3 அட்டைப்பெட்டி நிறுவனங்கள் மூடுவிழா கண்ட நிலையில், அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றார்கள். 

நலிந்து வரும் அட்டைப் பெட்டி தொழிலும்... தவிக்கும் தொழிலாளர்களும்...!

எங்களுக்கு வேறு வேலை அந்த அளவிற்கு தெரியாது என்றும் கூறுகின்றனர். இதனால் அட்டைப் பெட்டிகள் தயாரிப்பு தொழில் முழுமையாக அழியும் முன், அதனைக் காக்க மத்திய, மாநில அரசுகள் அதனை பாதுகாக்க மின்வர வேண்டும் என்று கூறுகின்றனர்.  அதுமட்டுமல்லாமல் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், இல்லை என்றால் அட்டைப்பெட்டி தயாரிப்பாளர்கள் தன் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு செல்லவேண்டி இருக்கும் என்கின்றனர். 

நலிந்து வரும் அட்டைப் பெட்டி தொழிலும்... தவிக்கும் தொழிலாளர்களும்...!

தயாரித்த அட்டைப் பெட்டிகளை மிக குறைந்த விலைக்கு அதாவது அடிமாட்டு விலைக்கு வாங்குகின்றார்கள் என அட்டைபெட்டி தொழிலாளர்கள் வருத்ததத்துடன் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நம் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் மூலப்பொருட்கள் விலை உயர்ந்த நிலையிலும் அட்டைப்பெட்டிகளின் விலை மட்டும் உயர்ந்தபாடில்லை.  கரூர் மாவட்டத்தில் உள்ள அட்டைபெட்டி தயாரிக்கும் தொழிச்சாலையும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு முன்வரவேண்டும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP