புகை என்றும் பகை: இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்...!

சிகரெட் பிடிக்கத் தூண்டும் லைட்டர் உள்ளிட்ட பொருட்களைத் தூர வீசுங்கள். சிகரெட் பிடிக்காத நண்பர்களுடன் வெளியே செல்லுங்கள். இது உங்களுக்கு அவர்கள் மத்தியில் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீக்கும்.
 | 

புகை என்றும் பகை: இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்...!

சோறு தண்ணி இல்லாமல் கூட முடிந்தளவு நாட்களைக் கடத்தும் பல ஆண்களால் ஒரு நாள் கூட சிகரெட் இல்லாமல் இருக்க முடியாத அவல நிலை உருவாகியிருக்கிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை எண்ணிக்கையில் அடங்கும் சிகரெட்களைப் புகைப்பவர்கள் இங்கே மிகக் குறைவு. டீ குடிக்கும் போது, சாப்பிட்டு முடித்ததும், வேலை பளு, டென்ஷன், பிரச்னைகள், போரடிக்கிறது என காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் அதன் நோக்கம் ஒன்று தான். இன்று புகையிலை ஒழிப்பு தினம். வருடம் முழுவதும் விடுமுறை விடாமல் புகையிலை மற்றும் சிகரெட்டைப் பயன்படுத்துபவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்களை சொல்கிறோம்... 

புகையிலையில் உள்ள நிகோட்டின் என்ற ரசாயனம் கூட ஒரு வகை போதை மருந்து தான். அதனால் தான் அதைப் பயன்படுத்துபவர்களை அந்தப் பழக்கத்துக்கு அடிமையாக்கிவிடுகிறது. புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் போது அதில் உள்ள நிகோட்டின் மிக விரைவாக மூளைக்குச் சென்றதும், 'அப்பாடா’ என்ற முழுமை பெறும் உணர்வு ஏற்படுகிறது.

பான், மூக்குப்பொடி, பீடி, சிகரெட், வெறும் புகையிலை, வெற்றிலையுடன் சேர்த்து என பல வகைகளில் இந்த புகையிலை பயன் படுத்தப்படுகிறது. சிகரெட் பிடிப்பது உங்களை பாதிப்பதுடன், உங்களைச் சுற்றியுள்ள உறவுகள், நண்பர்களையும் பாதிக்கிறது. 90 சதவிகிதம் நுரையீரல் புற்றுநோய் வருவதற்குக் காரணம் சிகரெட் பழக்கம் தான். இது தவிர, வாய், உதடு, தொண்டை, குரல் பெட்டி, உணவுக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம் என உடல் உள் உறுப்புக்களையும் இது பதம் பார்க்கிறது. எதிர்காலத்தில் இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கும் அடிப்படையாக விளங்குவது இந்த சிகரெட் பழக்கம் தான். 

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால், எத்தனை வருடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. அவரவரின் உடல் அமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைப் பொருத்து ஒரு சில வருடங்களில் இருந்து, 20-25 ஆண்டுகள் கழித்துக் கூட பாதிப்பு ஏற்படலாம். ஆனால், புகையிலையை நிறுத்தும் சில நிமிடங்களில் இருந்தே உங்களுக்கான பலன் கிடைக்கத் தொடங்கும். 

அதனால் உயிரைக் குடிக்கும் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதை விட்டொழிப்பது ஒன்றே நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது.

புகை என்றும் பகை: இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்...!

சிலர் இதில் தீவிரமாக மூழ்கியிருப்பார்கள், கொஞ்ச நேரம் சிகரெட் பிடிக்காமல் இருந்தாலும், கைகள் உதற ஆரம்பிக்கும். கூடவே ஒரு வித பதற்றமும் தொற்றிக் கொள்ளும். 

ஆனால் அதற்காக இதை விடாமல் தொடர வேண்டும் என்ற விதியெல்லாம் கிடையாது. இதன் தீமையை உணர்ந்து சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என நினைக்கிறீர்களா? நாட்களைக் கடத்தாமல் இன்றே அந்தப் பழக்கத்தை நிறுத்துங்கள். முடியாதவர்கள் கூடிய விரைவில் ஒரு நாளை தேர்வு செய்து, அதிலிருந்து சிகரெட் குடிக்கப் போவதில்லை என்ற திட்டத்தை செயல் படுத்தத் தொடங்குங்கள். 

தற்போதைய நிலவரத்தின் படி புகைப் பிடிப்பதால் தான் அதிகளவு குழந்தையின்மை பிரச்னை ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு சிகரெட்டால் உங்கள் தலைமுறையே அழிந்து விடும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள். 

உங்கள் குடும்ப மருத்துவரிடம் அவ்வப்போது ஆலோசனை பெறுங்கள். அவர் நிகோட்டின் ரீபிளேஸ்மென்ட் தெரப்பி உள்ளிட்ட சில சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.
அதோடு, சிகரெட் மற்றும் புகையிலை கலந்த பொருட்களின் மீதான வரியை அரசு அதிகப் படுத்த வேண்டும், அதனால் அதை நிறுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் வாய்ப்பு உள்ளது. புகை நமக்கு எப்போதுமே பகை என்பதை மனதில் வைத்துக் கொண்டாலே புகையிலை இல்லாத ஓர் ஆரோக்கிய சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP