Logo

உழைத்த பணம் வீணாகாது!

ஒரு கடையின் முதலாளியே தோன்றி எங்க கடைக்கு வாங்க, நகை பாருங்கள் எஸ்டிமேட் சிலிப் வாங்கி கொள்ளுங்கள் எங்கே விலை குறைவாக இருக்கோ அங்கு வாங்கி கொள்ளுங்கள் என்று தன் கடைக்கு விளம்பரம் செய்ய தனி கெட்ஸ் வேண்டும். அதை செய்தவர் கிரண்குமார் ஜெயின்.
 | 

உழைத்த பணம் வீணாகாது!

தமிழக தொலைத் தொடர்பு துறையில் செல்போனை அறிமுகம் செய்தது ஏர்செல், பிபிஎல் நிறுவனங்கள்.இந்த நிறுவனங்கள் தான் டவர் அமைப்பது முதல் செல்போன் நிறுவனங்களின் உட்கட்டமைப்பை ஏற்படுத்த மிக அதிகமாக செலவு செய்தது. 

செல்போன் டவர்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற விதிமுறை அமல்படுத்த பின்னர், வந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடித்தது என்றே கூறும் அளவிற்கு கட்டணம் வசூலித்தன. எங்கிருதோ வந்தான் என்கிற அளவில் ஜியோ நுழைந்ததும் தலைகீழாக மாற்றியது.

அதே தங்க நகை வியாபாரத்தை தலைகீழாக புரட்டிப் போட்டது லலிதா ஜூவல்லரி நிறுவனம். தங்க விற்பனையின் மிகப் பெரிய சூழ்ச்சி கூலி, சேதாரத்தில் அடங்கி உள்ளது. தங்க கட்டியை ஆபரணமாக மாற்ற கட்டாயமாக கூலி தேவை. ஆனால் சேதாரம் என்பது மோசடி .  

வெளிநாடுகளில் சேதாரம் என்பதை வாடிக்கையாளர்கள் வசம் கொடுப்பார்கள் என கூறப்படுகிறது. ஆனால் இங்கே சேதாரம் அவர்கள் இடம் தான் இருக்கிறது. அதற்கான ஒரு அளவும் கிடையாது. அவர்கள் சொல்லுவதை நாம் கொடுக்க வேண்டும். 

இப்படி இந்த நிலை மாற்றியது லலிதா ஜுவல்லரி என்றால் மிகையாகாது.ஒரு கடையின் முதலாளியே தோன்றி எங்க கடைக்கு வாங்க, நகை பாருங்கள் எஸ்டிமேட் சிலிப் வாங்கி கொள்ளுங்கள் எங்கே விலை குறைவாக இருக்கோ அங்கு வாங்கி கொள்ளுங்கள் என்று தன் கடைக்கு விளம்பரம் செய்ய தனி கெட்ஸ் வேண்டும்.

 அதை செய்தவர் கிரண்குமார்  ஜெயின். இதன் எதிரொலியாக மற்ற நகைகடைளும் சேதாரத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. இதனால் பெண்ணுக்கு திருமணத்திற்கு நகை எடுக்க வந்த அப்பாக்கள் மனம் கட்டாயம் கிரண் குமாரை வாழ்த்தி இருக்கும். அதன் பலன் தான் சமீபத்தில் தெரிந்தது.

கடந்த 1ம் தேதி இரவு லலிதா ஜூல்லரியில் இரண்டே இரண்டு பேர் புகுந்து மித் திறமையாக கொள்ளையடித்துக் கொண்டு தப்பி செல்கிறார்கள். அவர்கள் கொண்டு சென்ற நகை சுமார் 27 கிலோ, அதன் மதிப்பு ரூ. 13 கோடி.

இந்த கொள்ளை காவல்துறைக்கு மிகவும் சவாலான கொள்ளை. காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து ஆகிய 3 பிரிவுகள் உள்ளன. இதில் சட்டம் ஒழுங்கும், குற்றப்பிரிவும் முக்கியமானது. இந்த இரண்டில் சட்டம் ஒழுங்கு பிரிவு மரியாதை கூடுதலாக இருந்தால் கூட வேலை எளிது. 

காரணம் இதற்கு வரும் எல்லாபுகாருக்கும் எதிரி யார் என்று தெரியும். அதை நோக்கி சென்று எதிரியை மடக்கினால் போதும். ஆனால் குற்றப்பிரிவில் வரும் புகார் எல்லாவற்றுக்குமே எதிரி யார் என்றே .தெரியாது. கண்ணை கட்டி காட்டில் விட்ட கதைதான். எவ்வளவு தான் மிகச் சிறந்த குற்றவாளியாக இருந்தால் கூட சம்பவ இடத்தில் விட்டு செல்வார். அதை காவல்துறையில் விசிட்டிங் கார்டு என்று கூறுவார்கள். 

அதைக் கொண்டுதான் குற்றவாளி சிக்க வைக்கப்படுவார். ஆனால் லலிதா ஜூல்லரியில் அது போன்ற விசிட்டிங் கார்டு எதுவும் இல்லை. இந்த சூழ்நிலையில் குற்றவாளியை பிடிக்க வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் அரசு அதற்கு ஏற்ப செலவுக்கு பணம் கொடுக்காது. 

அதற்கு பாதிக்கப்பட்டவர்கள் உதவி செய்ய வேண்டும். ஆனால் இந்த உதவித் தொகை பல நேரங்களில் திருட்டுப் போனதைவிட அதிகமாகவோ, அல்லது கிட்டத்தட்ட அதற்கு நெருக்கமாகவோ இருக்கும். அதனால் பலர் நீங்கள் கண்டு பிடிக்கவே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுவார்கள். 

லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளை நீங்கள் கண்டு பிடிக்கவே வேண்டாம் என்ற வகையை சேர்ந்தது கிடையாது. அதனால் முதற்கட்டமாக 4 தனிப்படையினர் அமைத்து அவர்கள் விசாரணையை தொடங்குகிறார்கள். ஆனால் உழைத்த பணம் வீண் போகாது என்று நிரூக்கும் வகையில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தாமலேயே குற்றவாளி சிக்கினார்.  

ஒன்றாம் தேதி இரவு சம்பவம் நடக்கிறது. ஒருநாள் கழித்து திருவாரூல் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மணிகண்டன் என்ற குற்றவாளி சிக்குகிறான். அவனிடம் விசாரித்து முக்கிய குற்றவளிவரை கைது செய்து விட்டது. கொள்ளை போன 27 கிலோ நகைகளில் சுமார் 23 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டது. இது எவ்வளவு பெரிய சாதனை  உண்மை என்பதை தங்கள் பொருட்களை இழந்வர்களுக் தான் தெரியும்.. எது எப்படியோ உழைத்த காசு வீண் போது என்று நம் பெரியவர்கள் சும்மாவா சொல்லியிருப்பார்கள். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP