இரட்டையர்கள் நிறைந்திருக்கும் அதிசய கிராமம்!

சாதாரணமாகவே இரட்டையர்கள் என்றால், எல்லோரும் ஆச்சரியமாக அவர்களை திரும்பிப் பார்ப்பார்கள். ஒரு சிறிய கிராமத்தில் திரும்பிய இடமெல்லாம் இரட்டையர்கள் என்றால் ஆச்சரியமகத்தானே இருக்கும். அப்படிப்பட்ட அதிசய கிராமம் எது தெரியுமா?
 | 

இரட்டையர்கள் நிறைந்திருக்கும் அதிசய கிராமம்!

சாதாரணமாகவே இரட்டையர்கள் என்றால், எல்லோரும் ஆச்சரியமாக அவர்களை திரும்பிப் பார்ப்பார்கள். ஒரு சிறிய கிராமத்தில் திரும்பிய இடமெல்லாம் இரட்டையர்கள் என்றால் ஆச்சரியமகத்தானே இருக்கும். அப்படிப்பட்ட அதிசய கிராமம் எது தெரியுமா? கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடிண்ணி கிராமம் தான்.

உலகிலேயே இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ள கிராமம் கேரளாவில் உள்ள கொடிண்ணி. இந்த கிராமத்தில் தற்போது சுமார் இரண்டாயிரம் பேர் வாழ்கின்றனர். அவர்களில் 220 இரட்டையர் ஜோடிகள் உள்ளனர். அதாவது 440 பேர் இரட்டையர்கள். இக்கிராமத்தில் ஆண்டுக்கு சராசரியாக 15 ஜோடி இரட்டையர்கள் பிறக்கின்றனர்.

இரட்டையர்கள் நிறைந்திருக்கும் அதிசய கிராமம்!

உலக அளவில் பிறக்கும் இரட்டையர் சராசரியைவிட இது 6 மடங்கு அதிகம். அதிலும், உலகிலேயே இரட்டையர்கள் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ள நாடான இந்தியாவில்தான், அதிக அளவில் இரட்டையர்கள் பிறக்கும் இந்தக் கிராமம் அமைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இரட்டையர்களின் பிறப்பு விகிதம் சராசரியாக ஆண்டுக்கு பூஜ்யம் புள்ளி 4 சதவீதம் மட்டுமே. ஆனால் கொடிண்ணி கிராமத்திலோ இரட்டையர்கள் பிறப்பு விகிதம் சராசரியாக ஆண்டுக்கு 4 புள்ளி 5 சதவீதம்.

மூன்று புறமும் உப்பங்கழி எனப்படும் ஏரி நீரால் சூழப்பட்டுள்ள இந்தக் கிராமம், தரை வழியாக பரப்பனங்காடி என்ற சிறிய நகரத்தின் மூலம் நாட்டின் மற்ற பாகங்களோடு தொடர்பு கொண்டுள்ளது. கொடிண்ணி கிராமத்தில் இரட்டையர் பிறப்பு என்பது கடந்த 1949-ஆம் ஆண்டில்தான் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு ஆண்டுக்காண்டு இரட்டையர் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

தற்போது 10 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் ஜோடிகளின் எண்ணிக்கை 80 என அண்மைக்கால ஆய்வு தெரிவிக்கிறது. மற்றொரு ஆய்வில் இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 2000 குடும்பங்கள் என்று இருக்கும் நிலையில் இங்கு சுமார் 400 இரட்டையர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 

இரட்டையர்கள் நிறைந்திருக்கும் அதிசய கிராமம்!

கடந்த 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 280 இரட்டையர்கள் இருந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் இரட்டையர்கள் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் சராசரியாக வருடம் ஒன்றுக்கு 1000 இரட்டை குழந்தைகள் தான் பிறக்கின்றன. அவற்றில் 45 பேர் இந்த கிராமத்தில் பிறக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதுள்ள இரட்டையர்களில் ஆண்களுக்கு வெளியூர்களில் பெண்  பார்த்து திருமணம் செய்து வைத்தால்கூட அவர்களுக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றனர். இதே போல் இக்கிராமத்தில் உள்ள பெண்களை வெளியூரில் இருக்கும் ஆண்களுக்கு திருமணம் செய்துவைத்தால் கூட பெரும்பாலும் இரட்டை குழந்தைகள் தான் பிறக்கின்றன.

இக்கிராமத்தில் மட்டும் இரட்டையர் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதற்கு இதுவரையில் சரியான விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை. கொடிண்ணி கிராமத்தில் கிடைக்கும் நீரில் உள்ள சில ரசாயனங்கள் காரணமாக இரட்டையர்கள் பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இரட்டையர்கள் நிறைந்திருக்கும் அதிசய கிராமம்!

ஆனாலும், மரபணு சோதனை, உடற்கூறு சோதனை, ரசாயன சோதனை என பலவகை ஆய்வுகளுக்குப் பிறகும் இதுதான் காரணம் என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் இந்த கிராமத்தில் மட்டும் எப்படி அதிகளவில் இரட்டைக்குழந்தைகள் பிறக்கின்றன என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. இந்த ஆய்வில் வெளிநாட்டினர்களும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை இந்த ஆச்சரியத்திற்கு விடை கிடைக்கவில்லை.

வியட்நாம், கனடா, நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் இங்கு வருகை தந்து இரட்டையர்களின் டி.என்.ஏக்களை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்பகுதி மருத்துவர்கள் சிலர் தொடர்ந்து தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரட்டையர்கள் நிறைந்திருக்கும் அதிசய கிராமம்!

நைஜீரியா நாட்டில் உள்ள இக்போ ஓரா என்ற நகரத்தில் இதேபோல் இரட்டையர்கள் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இதற்கு அங்குள்ள பெண்களின் உணவுப் பழக்கம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், லாகோஸ் என்ற பல்கலைக்கழம் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், உணவுப் பழக்கத்தோடு இதற்கு நேரடித் தொடர்பு இல்லை என்றபோதிலும், இக்போ ஓரா நகரப் பெண்களின் உடலில் ஒருவித ரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. 

ஆனால், இக்கிராமத்தில் இரட்டையர் அதிகளவில் இருப்பதற்கு காரணம் என்ன? என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. பெரிய அளவில் இதுபற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பலரும் கோருகின்றனர். உள்ளூர் மக்கள்தொகையில் சுமார் 20  சதவீதம் பேரை இரட்டையர்களாக கொண்டுள்ள கொடிண்ணி கிராமம், தற்போது கேரள சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP