உருவாகுமா திராவிட தேசம்...?

தமிழத்தில் திராவிடம் பேசும் கட்சியினர் நதி நீர் இணைப்பை முன்னெடுத்து இதர மாநிலங்களையும் ஒப்புக் கொள்ள செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தமிழர்களுடன் மற்றவர்களையும் சேர்த்து திராவிடர்கள் என்று கூறுவதில் அர்த்தம் இருக்கும்.
 | 

உருவாகுமா திராவிட தேசம்...?

தமிழகத்தை கடந்த மாதம் புரட்டிப் போட்ட கஜாபுயலின் தாக்கத்தில் இருந்து இன்னமும் மீள முடியவில்லை. அதற்கு சற்று முன்பாக கேரளாவில்  பாய்ந்த வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து சமீபத்தில் தான் அந்த மாநிலம் வெளியே வந்ததுள்ளது. கடந்த ஆண்டுகளில் ஆந்திரா , கர்நாடகா நிலையும் இது தான். வெள்ளத்தை போலவே வறட்சியும் இந்த மாநிலங்களை விட்டு வைப்பதில்லை.

இதே நிலைதான் வடமாநிலங்களிலும், இதன் காரணமாக கடந்த 1972ம் ஆண்டு மத்திய நீர்பாசன துறை அமைச்சராக இருந்த டாக்டர் கே.எல். ராவ்,  நாட்டில் உள்ள ஆறுகளை ஆய்வு செய்து முதன் முதலில் கங்கை – காவிரி இணைப்பு திட்டத்தை முன்வைத்தார்.
உருவாகுமா திராவிட தேசம்...?
அதனைத் தொடர்ந்து, தேசிய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் கடந்த பல ஆண்டுகளாக தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை ஆய்வு செய்கிறது.

வற்றாத ஜீவநதிகளாக உள்ள கங்கை, பிரம்மபுத்ரா ஆகியவற்றை இணைத்து அத்துடன் மகாநதியை இணைப்பது. பின்னர் மகாநதி மற்றும் கோதாவரி ஆறுகளை தென்மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா, காவிரி ஆறுகளை இணைப்பது. மேலும் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை இணைத்து அரபிக்கடலில் கலக்கும் உபரி நீரை தடுப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.  ஆனால் இந்த திட்டம் அறிவிப்போடு நிற்கிறது. எவ்விதமான முன்னேற்றம் இல்லை.  இதற்கு பணம் இல்லை என்பதையும்விட யாதார்த்தத்தில் சாத்தியம்  இல்லை என்பது நிபுணர்கள் கருத்து.

ஆனால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நதிகளை இணைக்க சம்பந்தப்பட்ட மாநிலங்கள் முயற்சியை தொடங்கி அதன் மூலம் வெற்றியும் கண்டுள்ளது. தமிழகத்திலேயே தொடங்கி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் தாமிரபரணியை தவிர்த்து வேறு ஆறுகள் இல்லை என்பது சாபக் கேடு. இதன் காரணமாக நதிநீர் இணைப்பு என்றாலே அண்டை மாநிலங்களின் உதவி அவசியம்.

இந்நிலையில் நதிகள் இணைப்பிற்காக மத்திய அரசின் நிபுணர் குழுவில் உறுப்பினராக உள்ள மதுரையை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் தேசிய நீர்வழி போக்குவரத்து என்ற மாற்று திட்டத்தை பல ஆண்டு ஆய்வுகளுக்கு பின்னர் அறிமுகம் செய்தார்.

உருவாகுமா திராவிட தேசம்...?

இது குறித்து அவர்  அளித்த பேட்டியில் கூறியதாவது: நதிகள் இணைப்பு திட்டத்தால்  3.5 கோடி எக்டேர் நிலம் மட்டுமே பாசன வசதி பெறும். ஆனால் இந்த திட்டத்தில் ஆறு கோடி எக்டேர் நிலமும், 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும்.

நீர் வழிப் போக்குரவத்து திட்டத்தில் இரு திசை நோக்கியும் தண்ணீர் சென்று வரும். மேலும் ஆயிரத்து 1500 டிஎம்சி நீரை சேமிக்கலாம். ஆண்டு தோறும் கோதாவரியில் மட்டும் 3,000 டிஎம்சி கடலில் கலந்து வீணாகிறது. ஆனால் ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் தண்ணீர் தேவை வெறும் 750 டிஎம்சி தான். மேலும் நதிநீர் போக்குவரத்து மூலம் சாலை போக்குவரத்து நெரிசலையும், பெட்ரோல், டீசல் தேவையையும் கணிசமாக குறைத்து சுறறுச்சூழலை பாதுகாக்க முடியும்.  இவ்வாறு அவர் கூறினார்.

நதிகள் இணைப்பு குறித்து பேராசிரியர் பொன்ராஜ் கூறுகையில், தற்போது தமிழகத்தில் உள்ள 6 அணைகளில் பாதி அளவுதான் நிரம்புகிறது. ஆனால் ஆண்டு தோறும் 1500 டிசிஎம் நீர் கடலுக்கு செல்கிறது. நதி நீரை இணைத்தால் இது குறையும். ஆனால் நீர்வழிச்சாலை திட்டத்தில் 600 முதல் 900 டிஎம்சி தண்ணீர் தேங்கி நிற்கும். அதை, தேவை உள்ள மாநிலத்திற்கு திறந்து விட முடியும். ஒரே மட்டத்தில் தண்ணீர் தேக்கி வைப்பதால் தேவையான இடத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு அணையில் தேக்கி வைக்க முடியும். மீண்டும் வெள்ள காலத்தில் இதனை மீட்டு எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற கோஷத்திற்கு ஏற்ப இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வடமாநிலங்கள் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் குஜராத் மாநிலம் தாகேஜ்– கோகா நகரங்கள் இடையே பிரதமர் மோடி படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
உருவாகுமா திராவிட தேசம்...?
கடந்த மாதம் 13ம் தேதி உபி மாநிலம் வாரணாசியில் இருந்து மேற்கு வங்காளம் மாநிலம் ஹல்டியா இடையே கங்கை ஆற்றில் படகு போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். 

மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் பாஜ அரசே ஆட்சி செய்வதால் இது போன்ற திட்டங்கள் விரைவில் அமலுக்கு வருகிறது.மேலும் மாநிலங்கள் முயற்சி எடுத்தால் மத்திய அரசில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும் அதற்கு தடை போடுவதில்லை. கடந்த 2012ம் ஆண்டில் குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி தொடங்கிய தாகேஜ்-கோகா திட்டம், அவர் பிரதமராக மாறியபின்னர் தொடங்கி வைக்கும் வரை தொடர்ந்ததே இதற்கு ஆதாரம்.

ஆனால் இது போன்ற திட்டத்தால்  பலன் பெறும் மாநிலங்கள் தான்  இணைப்பு திட்டத்தை எதிர்க்கின்றன. உதாரணமாக வைப்பாற்றுடன் கேரளமாநிலத்தில் பம்பை, அச்சன் கோயில் ஆறுகளை  இணைப்பதை கேரள மாநிலம் எதிர்க்கிறது. கோதாவரி– காவிரி இணைப்புக்கு மத்திய அரசு தயாராக இருந்தும், உலக வங்கி கடன் வழங்க முன்வந்த நிலையிலும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் சில நிபந்தனை விதித்து அதை நிறைவேற்றினால் மட்டுமே நதி நீர் இணைப்பை ஏற்போம் என்று கூறகிறது.

இது போன்ற சூழ்நிலையில் தமிழத்தில் திராவிடம் பேசும் கட்சியினர் நதி நீர் இணைப்பை முன்னெடுத்து இதர மாநிலங்களையும் ஒப்புக் கொள்ள செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தமிழர்களுடன் மற்றவர்களையும் சேர்த்து திராவிடர்கள் என்று கூறுவதில் அர்த்தம் இருக்கும்.

அதை விடுத்து நாம் எல்லாம் திராவிடர்கள், அவர்கள் ஆரியர்கள் என்று வெற்றுக் கூச்சல் இடுவதில் எந்த வகையிலும் பிரயோஜனம் இல்லை.

நதி நீர் இணைப்பில் திராவிடம் மலர்வது அனைவருக்கும் நல்லது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP