சமன் இல்லாமல் ஆஜராக வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின்? 

அனைத்து கட்சி குழுவை காஷ்மீர் அனுப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கூட்டத்தை முடித்திருக்கிறார் ஸ்டாலின். இவர் கூட்டிய அனைத்து கட்சிகளும் அங்கே சென்று சில நாட்கள் ஆய்வு செய்திருக்கலாமே, அதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற முயற்சி செய்யலாம். அதை விடுத்து இப்படி அனைத்து கட்சி கூட்டத்தை கூடி தன் வலிமை உணர்ந்து கொண்டது, சமன் இல்லாமல் ஆஜராகுவதற்கு சமம். அதை எந்த நீதிமன்றமும் அனுமதிப்பது இல்லை. மக்கள் மன்றத்திலும் அதுதான் கதி.
 | 

சமன் இல்லாமல் ஆஜராக வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின்? 

பாரதி பித்தன்

உங்கள்  வீட்டில் யார் முடிவுகளை எடுப்பார்கள் என்று தன் நண்பரை ஒருவர் கேட்டார். அதற்கு அவர்  டிரம்ப்  என்ன முடிவு எடுக்க வேண்டும், பெட்ரோல் விலையை எப்படி நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற மிகப் பெரிய விஷயங்ளை எல்லாம் நான் முடிவு எடுப்பேன். வீட்டில் என்ன சமைக்க வேண்டும், எந்த கடையில் என்ன வாங்க வேண்டும் என்பது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் என் மனைவி முடிவு எடுப்பாளாம் என்றாராம் அந்த  நண்பர். 

அதைப் போல தமிழகத்தில் நதிநீர் பிரச்னை, நியூட்ரினோ, மீத்தேன் எரிவாவு பிரச்னை, குறுவை, சம்பா சாகுபடி கையை விட்டுப் போகும் அபாயம் என்று பிரச்னைகளுக்கு நடுவில் தமிழகம் வாழும் நிலையில் அதையெல்லாம் கண்டு கொள்ளாத திமுக, காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் சட்டப்பிரிவு 370வது சரத்தையும். 35 ஏ பிரிவை நீக்கியதையும் எதிர்த்து அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். 

ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல திமுகவின் ஜால்ரா கட்சிகள் ஒன்றாக கூடி கலைந்து இருக்கிறார்கள். இரு அவைகளிலும் இந்த தீர்மனம் நிறைவேறி விட்டது. காங்கிரஸ் கட்சியில் உள்ள பல தலைவர்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் அனைத்து கட்சி கூட்டம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்.  

இதன் முடிவில் அனைத்து கட்சி குழுவினரை காஷ்மீர் மாநிலத்திற்கு அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கூட்டம் முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ காஷ்மீர் விவகாரத்திற்கு காரணம் காங்கிரஸ், பாஜக என்று வெளுத்து வாங்குகிறார். கனிமொழியே அரசின் தீர்மானத்தையே வரவேற்கிறார். இந்த சூழ்நிலையில் அனைத்து கட்சி கூட்டம் என்பது நம்ம கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று சோதித்து பார்க்க வேண்டும் என்பதற்காக உதவி செய்யுமே தவிர்த்து வேறு எதற்கும் பயன்படப் போவதில்லை. 

காஷ்மீர் மாநிலத்தை பிரிந்ததை லடாக் மக்கள் வரவேற்கிறார்கள். அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் கூட லடாக் மாநிலத்தை பிரிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். லடாக், காஷ்மீர் பிரச்னை குறித்து மற்றவர்கள் புரிதல் குறித்து லடாக் மாநில எம்பி ஜம்யாங் செரிங் நம்க்யால் வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார்.  

சமன் இல்லாமல் ஆஜராக வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின்? 

இதுவரை ஊரடங்கு உத்தரவின் போது 41,500 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த முறை அவ்வாறு நடக்க வில்லை என்கிற போதே சம்பவத்தின் வித்தியாசத்தை உணர முடியும். செரிங் கூறியதைப் போல லடாக் பற்றி உணர ஒரு முறையாவது அங்கு சென்று வாழ்ந்திருக்க வேண்டும். அதைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில் அப்படி செய்து இருக்கலாம் இப்படி செய்து இருக்கலாம் என கருத்துக் சொல்வது பெயரை பெற்றுத்தரலாமே தவிர்த்து எந்த வகையிலும் பலன் தரப் போவது இல்லை.

கடைசியாக அனைத்து கட்சி குழுவை காஷ்மீர் அனுப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கூட்டத்தை முடித்திருக்கிறார் ஸ்டாலின். இவர் கூட்டிய அனைத்து கட்சிகளும் அங்கே சென்று சில நாட்கள் ஆய்வு செய்திருக்கலாமே, அதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற முயற்சி செய்யலாம். அதை விடுத்து இப்படி அனைத்து கட்சி கூட்டத்தை கூடி தன் வலிமை உணர்ந்து கொண்டது, சமன் இல்லாமல் ஆஜராகுவதற்கு சமம். அதை எந்த நீதிமன்றமும் அனுமதிப்பது இல்லை. மக்கள் மன்றத்திலும் அதுதான் கதி.

newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP