முகிலன் நாடகத்தின் முக்கிய பாத்திரம் யார்?

இந்த பின்னணியை உணர்ந்து கொண்டால், நம் புரட்சியாளர்கள் எப்போதும் ஒரு பெண்ணுடன் (பெரும்பாலும் உதவியாளர்கள்) என்று அழைக்கப்படுவார்கள். இருப்பதை அறிந்து கொள்ளலாம். மதம் என்பதே போலி என்ற சித்தாந்தம் கொண்டவர்கள், உடல் உறவில் மட்டும் கருப்பு, வெளுப்பு என்றெல்லாம் பார்ப்பது முட்டாள் தனம்.
 | 

முகிலன் நாடகத்தின் முக்கிய பாத்திரம் யார்?

வாழ்க்கையின் அடித்தட்டில் இருந்து பல தடைகளைத் தாண்டித்தான் மேலே வர வேண்டும். அதிலும் பெரும்பாலும் விவசாய கூலி பெற்றோர், போதிய வருவாய் இழப்பு, கிராமப்புறங்களில் போதிய வசதியில்லாத வாழ்க்கை என்ற சூழ்நிலையில் இருந்து, படிப்படியாக மேலே ஏறும் போது, கோபம் ஏற்படுவது இயல்புதான். 

எனக்கு மட்டும் ஏன் இப்படி நேருகிறது என்று மனதில் பயம் கொண்டவன், விதியை நம்பி அடங்கி போகிறான். மனதில் தைரியம் இருப்பவன், புரட்சியாளனாக மாறுகிறான். தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கையை உற்றுநோக்கினால், அதின் பின்னால் எவ்வளவு புத்திசாலிகள் இருக்கிறார்கள், மிகச்சிறந்த கல்வியாளர்கள் அதில் இருக்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடியும். 

இவர்களை ஒரு குழுவாக மாற்றி அதற்கு அறிவையும், தன் பேச்சுவியாபாரத்தையும் முதலீடாக கொண்டவர் தலைவராக மாறிவிடுகிறார். அவர்கள் விரல் அசைவிற்கு ஆடும் அப்பாவிக் கூட்டம் தான் களம் இறக்கப்படுகிறது. அங்கே தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது என்று ஒற்றை வரிச் செய்தியை படித்துவிட்டு கடந்து செல்கிறோம். 

மனைவி, குழந்தைக ளை வெளியூருக்கு கூட அனுப்பாத சமுதாயத்தில் இருந்து வந்தவன், இடுப்பில் குண்டுகளை கட்டிக் கொண்டு தன் உயிரையே போக்கி கொள்ள முன் வரும் நிலை எப்படி ஏற்பட்டது என்பதை, யாரும் சிந்தனை செய்து அதற்கு தீர்வு காண்பதில்லை. உயிருக்கே உத்திரவாதம் இல்லை என்ற நிலையில் உறவு, கற்பு போன்றவை பூர்ஷ்வாக்களின் அடிமை சங்கிலியாகத்தான் இருக்கும்.

கடந்த காலத்தில் புரட்சி வெடிக்க வேண்டிய பகுதியில், சாதாரணமாகதான் இயக்கவாதிகள் வாழ்க்கை நடத்துவார்கள். அவர்கள் காவல்துறையில் சிக்குவதற்கு ஒரே காரணம், பாலியல் உறவு. இதில் இருந்து கூட, அவர்கள் தப்பிக் வேண்டும் என்று நினைத்த கட்சித் தலைமை, இதற்காக போலி குடும்பம் என்ற முறையை அனுமதித்தது. இயக்கத்தில் இருக்கும் ஆண் உறுப்பினரும், பெண் உறுப்பினரும் இணைந்து களத்திற்கு சென்று, கணவன் மனைவியாகவே வாழ்வார்கள். அவர்கள் திட்டம் முடிந்த பின்னர், 2 பேரும் பிரிந்து விடுவார்கள்.

இந்த பின்னணியை உணர்ந்து கொண்டால், நம் புரட்சியாளர்கள் எப்போதும் ஒரு பெண்ணுடன் (பெரும்பாலும் உதவியாளர்கள்) என்று அழைக்கப்படுவார்கள்.  இருப்பதை அறிந்து கொள்ளலாம். மதம் என்பதே போலி என்ற சித்தாந்தம் கொண்டவர்கள், உடல் உறவில் மட்டும் கருப்பு, வெளுப்பு என்றெல்லாம் பார்ப்பது முட்டாள் தனம்.

சரி முகிலன் விவகாரத்திற்கு வருவோம்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன். பாவனி, நொய்யல் ஆறுகள் சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்டதும், அதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர். அதில் கிடைத்த வெற்றி    நெடுவாசல், ஸ்டெர்லைட் போராட்டம், 8 வழிச்சாலை என்று அவரின் போராட்டம் தொடர்ந்தது. கடந்த 2017 ஆண்டில் 17 வழக்குகளில்  கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

 சிறையில் என்ன என்ன கொடுமைகள் நடக்கும் என்று முகிலனே பேட்டி அளித்துள்ளார். அவர் எத்தகு போராளி என்று பல பேட்டிகள் அவரே வெளியிட்டுள்ளார்.இதையெல்லாம் பார்கும் போது 22 ஆண்டு போராட்டத்தை காவல்துறை அனுமதித்தே இருக்கிறது என்பது தெரியவருகிறது. 

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் உட்பட நுாற்றுக்கணக்கான கைதிகள் பல்வேறு முறையில் சிறைக்குளேயே இறந்து இருக்கிறார்கள். திருவெறும்பூரில் ரோந்து சென்ற ஏட்டை வெட்டிய குற்றவாளியை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர் பாலத்தில் இருந்து விழுந்து 2 கைகள் மட்டும் முறிந்து விட்டது. இது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன.இவை எதுவுமே முகிலன் விஷயத்தில் நடக்கவி்லலை.

இந்த நிலையில் தான் முகிலனோடு போராட்ட களத்தில் இருந்த இசை என்ற ராஜேஸ்வரி குளித்தலை போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.

அதற்கு முன்பாகவே கவுசல்யா, சக்தி மறுமணத்தின் போது ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக பஞ்சாயத்து பேசியதை போல இவர்கள் விவகாரத்திலும் நடந்ததாக கூறப்படுகிறது. அது முறியவே ராஜேஸ்வரியிடம் காவல்துறையிடம் புகார் கொடுக்க போவது முகிலன் உள்ளிட்ட சிலருக்கு முன்பே தெரியும். 

இந்த சூழ்நிலையில் தன்னைப்பற்றிய பாலியல் பலாத்கார விவகாரம் வெளியாகி அதுவிவாதப் பொருளாகிவிடக் கூடாது என திட்டமிட்டு  திசை திருப்பும்  நோக்கத்தில் முகிலன் ஸ்டெர்லைட் துாப்பாக்கி சூடு பற்றிய விடியோ ஆதாரங்களை வெளியிட்டுவிட்டு தலைமறைவாகினார். அதன் பின்னர் ராஜேஸ்வரி புகார் கொடுக்கிறார். முகிலன் எங்கே என்று தேடிய சமூகம் மீ டூ ராஜேஸ்வரியை கண்டு கொள்ளாமல் விட்டது.

இந்நிலையில் மீண்டும் சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் முகிலன் வெளிப்படுகிறார். அதுவும் மன்னார்குடி ரயில் முன்பு போராட்டம் நடத்தினார்.  போலீசார் அவரை விடுவித்தார்கள் என்றால் ஏதாவது ஒரு காட்டில் இறக்கி விட்டு விட்டு இருப்பார்கள். ஆனால் திருப்பதி ரயில்வே ஸ்டேஷனி்ல் சென்று போராட்டம் நடத்த அனுமதித்திருப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. 

யாரோ ஒருவர் ரயில் முன்னே போராட்டம் நடத்தினார், எதிர்பாராமல் ரயில் முன்னே நகர்ந்து வந்தது. அதன் சக்கரத்தில் சிக்கி இறந்தார் என்று கதையை முடித்து இருக்கலாம். ஆனால் அமைதியாக அழைத்து வந்து கைது செய்து தமிழக போலீசில் ஒப்படைத்து இருக்கிறார். தற்போது அவர் சிறையில் இருக்கிறார்.

இவை அனைத்தையும் நேர் கோட்டில் வைத்து சிந்தித்தால், இந்த நாடகத்தின் முக்கிய சூத்திரதாரி முகிலன் என்பது நன்கு விளங்கும். அவர் எதையோ மறைக்க, அல்லது எதிர்பார்த்து இந்த நாடகத்தை நடத்தி உள்ளார். வழக்கமாக காவல்துறை மீது மக்களுக்கு மரியாதை இல்லாத நிலை இந்த நாடகத்திற்கு உதவியாக இருக்கிறது. இதில் ஏமாற்றப்படுவது என்னவோ மக்கள் தான். அவர்களுக்கு மற்றொரு பிரச்னை எழந்த உடன் முகிலன் மறந்து போய்விடுவார் என்பது மட்டும் நிச்சயம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP