தமிழகத்தை இருளில் மூழ்கவிடாமல் காப்பது யார் கடமை?

புதிய திட்டங்களை செயல்படுத்தாவிட்டாலும், மின்சாரத்தில் சேமிப்பும் கூட உற்பத்திக்கு இணையானது; அதே நேரத்தில் எளிதானது. இதன் காரணமாக வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்கள், சாலைகளில் மின்சார பயன்பாட்டை 25 முதல் 30 சதவீதம் வரை குறைத்தாலே போதும். தனியார் நிறுவனங்களின் வெளியே அழகுக்காக சரம் சரமாக மின்விளக்குள் தொடங்கவிடப்படுகின்றன.
 | 

தமிழகத்தை இருளில் மூழ்கவிடாமல் காப்பது யார் கடமை?

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அகற்றப்பவதற்கு முக்கிய காரணமாக இருந்தது மின்வெட்டு. அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் கையால் ஆகாததனத்தால், அறிவிக்கப்படாத மின் வெட்டி அமலில் இருந்ததோடு, இந்தந்த நேரங்களில் மின்வெட்டு இருக்கும் என அறிவிப்பதற்கு பதில், இந்த நேரங்களில் தான் மின் சப்ளை இருக்கும் என அறிவிக்கும் நிலை ஏற்பட்டது. 

அந்த அளவுக்கு கடும் மின் தட்டுப்பாடு நிலவியது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல், கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்ட பிறகே, மின் உற்பத்திக்கான வழிகள், மின்சார கொள்முதல் என நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்குள் சட்டசபை தேர்தல் வந்துவிட்டதால், மின் வெட்டால், மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்த திமுக ஆட்சியையும் பறிகொடுத்தது.

தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும், மின் உற்பத்தி திட்டங்களை தொடங்கினார். இதன் விளைவாக, தமிீழகம்,  மின் மிகை மாநிலமாக மாறியது. 
அதன் பின்னர் மின் வெட்டு இல்லாத சூழ்நிலை உருவானது.ஜெயலிதாவின் மறைவுக்கு பிறகு வந்த ஆட்சிகளில் புதிதாக மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கியதாக எவ்விதமான அறிவிப்பும் இல்லை. அதே நேரத்தில் மின்சாரத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்று, 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. மின் உற்பத்தி நிலையங்கள் தனது உச்சபட்ச உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நிலைமையை சமாளிக்க முடிந்தால் கூட, ஆங்காங்கே மின்வெட்டுக்கள் தலை துாக்க தொடங்கி உள்ளன. 

வழக்கமாக அக்னிநட்சத்திர காலத்தில் தான் மின்தேவை அதிகம் இருக்கும்.  ஆனால், கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததாலும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கோடை மழை இன்னும் துவங்காததாலும், இந்த ஆண்டு மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. காற்றாலை மின்சார உற்பத்திக்கு, சீசன் இல்லாத காரணத்தால் அதிக பட்சம் 800 மெகாவாட் வரை உற்பத்தி செய்கிறது. 

இதில் ஏதேனும் ஒன்று குறைந்தால் கூட, மின்வெட்டு தவிர்க்கமமுடியாத நிலை ஏற்படும். மின்சாரத் தேவையை திட்டமிட்டு மின் உற்பத்தி நிலையங்களை தொடங்க வேண்டிய தமிழக அரசு, அதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஓரிரு மாதங்களில் அதிமுக அரசு கவிழ்ந்துவிடும் என, திமுக உட்பட பல அரசியல் தலைவர்கள் ஆரூடம் கூறிய நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து, சுமுகமாக, இரண்டு ஆண்டுகளை கழித்துள்ளது. 

இயற்கையாக நடைபெற வேண்டிய சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. தற்போது, பழைய மாதிரி மின்வெட்டு பிரச்னை வராமல் பார்த்துக்கொண்டாலே, மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதிக்காமல் இருந்துவிடலாம்


புதிய திட்டங்களை செயல்படுத்தாவிட்டாலும், மின்சாரத்தில் சேமிப்பும் கூட உற்பத்திக்கு இணையானது; அதே நேரத்தில் எளிதானது. இதன் காரணமாக வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்கள், சாலைகளில் மின்சார பயன்பாட்டை 25 முதல் 30 சதவீதம் வரை குறைத்தாலே போதும். தனியார் நிறுவனங்களின் வெளியே அழகுக்காக சரம் சரமாக மின்விளக்குள் தொடங்கவிடப்படுகின்றன. 

சாலைகளின் நடுவே, செய்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு, அதில் ஒளி விளையாடுகிறது. ரயில் நிலையங்கள் போன்றவற்றில் நடைமேடை,விளம்பர பலகைகள் என்று எங்கெங்கு காணினும் ஒளி வெள்ளம் தான். இதனால் பல கோடி யூனிட் மின்சாரம் வீணாகிறது. 

இவற்றை நிறுத்தினாலே, மின்சாரத்தின் தேவை கனிசமாக குறையும். உதாரணமாக ஒரே வரிசையில் 10 விளக்குகள் ஒளிரும் இடத்தில் 1,3,5 என்று ஒளிர செய்தால் வெளிச்சமும் இருக்கும், தேவையும் குறையும். இதே போன்று ஒவ்வொரு சாதனத்தையும் பயன்படுத்த மக்களை பழக்க வேண்டும். 

இது தற்போதைய மின்தட்டுப்பாட்டை சமாளிக்க உதவி செய்வதுடன், வருங்காலத்தில் மின்தட்டுப்பாடு இல்லால் இருக்க உதவும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை முன்னெடுக்க வர வேண்டும். அத்துடன், பொதுமக்களும் அந்த திட்டங்களை செயல்படுத்த ஒத்துழைப்பு அளித்தால், தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமாெத்த தேசமுமே இருளில் மூழ்காமல் ஒளிர்வது சாத்தியமே!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP