எந்த கட்சி வெற்றி பெற்றாலும் தி.மு.க.,வுக்கு மந்திரி பதவி: ஸ்டாலின் போடும் புது கணக்கு

முழுமையான பெரும்பான்மையுடன், பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றால் திமுக கொஞ்ச காலம் எதிர்ப்பு காட்டுவது போல நடித்து, பின்னர் சேரும். தொங்கு லோக்சபா என்றால், நேரடியாக ஆதரிக்காவிட்டால் கூட வெளிநடப்பு செய்து, பாஜக ஆட்சி உருவாக உதவி செய்யும். அதற்கு பதிலாக, தமிழக அரசை காவு கேட்கும். அதை பாஜக செய்யுமா என்பது தேர்தல் முடிவில் தான் தெரியும்.
 | 

எந்த கட்சி வெற்றி பெற்றாலும் தி.மு.க.,வுக்கு மந்திரி பதவி: ஸ்டாலின் போடும் புது கணக்கு

திமுக தலைவராக இருந்த கருணாநிதி இல்லாமல், லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டியதால் ஏற்பட்ட பதற்றம், அது வரையில் கண்டு கொள்ளத ராகுல், கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு வந்த மகிழ்ச்சி, தான் பிரதமர் பதவியை ஏற்க விரும்ப வில்லை என்ற காரணம் ஆகியவை  இணைந்து, காங்கிரஸ் கட்சிக்காரர்களே எதிர்பார்க்காத நிலையில் ராகுல் தான் பிரதமர் என்று அறிவிப்பு வெளியிட்டவர் திமுக தலைவர் ஸ்டாலின்.

மனம் திறந்து அவர் அதை கூறியிருப்பார் என்றால், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் போல ஸ்டாலின் தன் கருத்துக்காக லாபி செய்து இருக்க வேண்டும். அவரோ, அவரது கட்சி பிரமுகர்களோ அதை செய்யவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஓட்டுகளை கைபற்ற வேண்டும் என்ற நினைப்பில்தான் அவர் அவ்வாறு கூறினார். 

ஒரு வேளை காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தால், அமைச்சர்கள் பட்டியலில் இடம் பிடிக்க தான், கனிமொழி, ராசா, தயாநிதி, டிஆர் பாலு என்று மத்திய அரசியலுக்கு பரிச்சயமானவர்கள் களம் கண்டனர். ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு ஸ்டாலின் எண்ணத்தை மாற்றியதுடன், அவர் எவ்வளவு அவசரக்குடுக்கை என்பதையும் வெளிப்படுத்தியது.

கடைசி கட்ட தேர்தல் முடிவதற்கு முன்பாகவே, ஓட்டு எண்ணிக்கை நாள் அன்று காங்கிரஸ் கட்சி டெல்லியில் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதாவது, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டதால், தங்கள் கட்சியை யார் ஆதரிப்பார்கள் என்று நாடி பார்க்க தான் இந்த கூட்டத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு, காங்கிரஸ் கட்சியை நிலை குலையச் செய்ததும், கூட்டம் பற்றிய அறிவிப்பும் நீர்த்துப் போனது.சோனியாவை சந்தித்து, அடுத்து கட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனை செய்ய திட்டமிட்ட மாயாவதி, அந்த சந்திப்பை ரத்து செய்தார். 

தேர்தலுக்கு பிந்தய கருத்துக் கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருந்த அதே நேரத்தில் கோபாலபுரம் வீ்ட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளி்த்தார். அப்போது நிருபர் ஒருவர், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், திமுக அதில் இடம் பெறுமா என்று கேட்கிறார். 

அதற்கு ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தால் மட்டுமே அரசில் இடம் பெறுவது பற்றி திமுக சிந்திக்கும் என்று கூறியிருக்க வேண்டும். அதற்கு பதிலாக, தேர்தல் முடிவு வந்ததற்கு பின்னால் ஆட்சியில் இடம் பிடிப்பது பற்றி யோசிக்கப்படும் என்றார். 

வரும் 23ம் தேதி காங்கிரஸ் கட்சி கூட்டியுள்ள கூட்டதில், திமுக பங்கு பெறுமா என்ற கேள்விக்கு அது போன்ற கூட்டத்தை காங்கிரஸ் ஏற்பாடு செய்யவே இல்லை ஊடங்கள் கிளப்பிட்ட பொய் தகவல் என்று ஸ்டாலின் மிகக் கூலாக கூறினார்.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அழகிரியிடம், டெல்லி கூட்டம் பற்றி கேட்ட போது, திமுக எங்கள் பிரதான கூட்டணி கட்சி. நிச்சயம் கூட்டத்தில் கலந்து கொள்ளும் என்றார்.

தேர்தல் முடிவுகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகள், காங்கிரஸ் கட்சி. போட்டியிட்டதாக இருந்தால், தேவையற்ற சுமையாக அந்த கட்சியை திமுக கருதும். அது போன்ற சூழ்நிலையில் பாஜவின் கூட்டணிக்கு திமுக ரகசிய துாது விடும். 

முழுமையான பெரும்பான்மையுடன், பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றால் திமுக கொஞ்ச காலம் எதிர்ப்பு காட்டுவது போல நடித்து, பின்னர் சேரும். தொங்கு லோக்சபா என்றால், நேரடியாக ஆதரிக்காவிட்டால் கூட  வெளிநடப்பு செய்து, பாஜக ஆட்சி உருவாக உதவி செய்யும். அதற்கு பதிலாக, தமிழக அரசை காவு கேட்கும். அதை பாஜக செய்யுமா என்பது தேர்தல் முடிவில் தான் தெரியும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP