எங்கிருந்தோ வந்தார்... அ.தி.மு.க., நான் என்றார்...!

அது தினகரனுக்கு சாதகமாக முடிந்தால், அதிமுக என்ற கட்சி இல்லாவிட்டாலும், திமுக ஸ்டாலினுக்கு நேரடியான மாற்றாக அவர் தான் உருவெடுப்பார். அப்படியில்லாமல், திமுக தரப்போ அல்லதும் ஆளும் அதிமுக தரப்போ பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று, தினகரன் தரப்பினர் படுதோல்வி அடைந்தால், அவரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க, முன்பை காட்டிலும் மிக பலமான முயற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
 | 

எங்கிருந்தோ வந்தார்... அ.தி.மு.க., நான் என்றார்...!

தொடர்ந்து பல ஆண்டுகளாக திராவிடம் பேசியும், மொழிப்பற்று குறித்த பல கூட்டங்கள் கூட்டியும், தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்து, அதன் மூலம், ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்தது தி.மு.க., ஆனால், அத்தகைய கட்சியையே, கட்சி துவங்கிய பின் அறிவிக்கப்பட்ட முதல் பொதுத் தேர்தலிலேயே வீட்டிற்கு அனுப்பி, ஆட்சியை கைப்பற்றினார், அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர். அவரின் மறைவுக்குப் பின், தமிழக அரசியலிலும், அந்த கட்சியிலும் ஏற்பட்ட மிகப் பெரிய வெற்றிடத்தை நிரப்பியர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றால் அது மிகையாகாது.

எங்கிருந்தோ வந்தார்... அ.தி.மு.க., நான் என்றார்...!

ஜெ., மறைவுக்கு பின், அவரது இடத்தை அவரோடு வாழ்ந்த சசிகலா பிடிப்பார்  என்று எதிர்பார்த்த நேரத்தில், சொத்து வழக்கு தீர்ப்பின் காரணமாக, சசிகலாவால்   அடையாளம் காட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமி  முதல்வர் பொறுப்பேற்றார். 

பின்  அவர்,  சசிகலா, தினகரன் ஆகியோரை வெளியேற்றி,  அ.தி.மு.க., கட்சியையும், ஆட்சியையும் தன் வசப்படுத்தினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியும் வருகிறார். 

எங்கிருந்தோ வந்தார்... அ.தி.மு.க., நான் என்றார்...!

அதிமுகவில் இயக்கம் இணைந்தாலும், இதயங்கள் இணையவில்லை. லோக்சபா துணை சபாநாயகர்  தம்பித்துரை வெளிப்படையாக தனி ஆவர்த்தனம் செய்கிறார். தேர்தல் நேரத்தில் இன்னும் பல ஆவர்த்தனங்கள் வெளியே தெரியும் என எதிர்பார்க்கலாம். 

அதை நம்பியே, தினகரன் இன்னும் அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். அவர் கனவு நனவாகுமா? அப்படி நடந்தால் அவரால், அ.தி.மு.க.,வை சிறப்பாக வழிநடத்த முடியுமா? என்பது அவர் அரசியலில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் தெரியும்.  அதில் தான் எத்தனை ஏற்றங்கள், எவ்வளவு ஏமாற்றங்கள்!

ஜெயலலிதாவிற்கு உதவியாக, சசிகலா இணைந்ததும், சசிலாவின் அக்கா வனிதாமணியின் மகனான தினகரனும், அந்த வட்டத்திற்குள் இணைந்தார். 

ஜெயலலிதாவின் பாதுகாப்பை கவனித்துக் கொள்வதே திகரனுக்கு வழங்கப்பட்ட முக்கிய பணி. 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்ததால், அ.தி.மு.க., மீது மக்கள் கோபத்தில் இருந்தனர். ஆனால் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட தினகரன், அப்போது பெரியகுளம் நகராட்சி தலைவராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் தலைமையில், உள்ளூர் அதிமுகவினர் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்றார்.

 அதன் பின்னர் அந்த கட்சியில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். தினகரனை எதிர்த்த சேடப்பட்டி முத்தையா, முத்துவெங்கட்ராமன், முன்னாள் எம்எல்ஏகள் கோடி பன்னீர் செல்வம், தேனி ஜெயராமன், டாக்டர் சலிம் என்று பெரியகுளம், தேனி பகுதி அதிமுகவினர் ஓரங்கட்டப்பட்டனர். அந்த இடத்தில் தினகரன் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டனர். 

இதனால், தினகரன் கடைக்கண் பார்வைபட பலர் காத்திருந்தனர். 1991ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் எம்எல்ஏவாக பன்னீர் செல்வம் வெற்றி பெற்றதும், அவர் முதல்வர் குட்புக்கில் இடம் பெற்றார்.

 டான்சி ஊழல் வழக்கில் ஜெயலலிதா முதல்வர் பதவி வகிக்க இயலாத சூழ்நிலையில், யாரும் எதிர்பாராத பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் அமர்ந்ததும், தினகரன் பின்னணி தான் என அதிமுகவை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

இன்னொருபுறம், அதிமுக பொருளாளர், ராஜ்யசபா எம்பி, ‛நமது எம்ஜிஆர்’ பங்குதாரர், ஜெயா டிவி நிர்வாகி  என்று படிப்படியாக அதிமுகவின் உச்சத்திற்கு சென்றார் தினகரன். அதே நேரத்தில், அன்னியசெலாவணி மோசடி வழக்கு அவர் மீது பாய்ந்தது. அதில் இருந்து தப்ப தான், தினகரன் சிங்கப்பூர் பிரஜை என்று அறிவித்தார். 

2011 டிசம்பர்ம மாதம், தினகரன் உட்பட சசிகலா குடும்பத்தினர் அனைவரும் கட்சியை விட்டு துாக்கி வீசப்பட்டனர். அதன்பின்னர், தினகரன் அதிமுகவின் பக்கம் தலைவைத்து  கூட படுக்கவில்லை. 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மீண்டும் தினகரன் கட்சியில் தலைகாட்ட தொடங்கினார். 

ஜெயலலிதாவின் இறுதி சடங்குகள் முடிந்து சில மாதங்கள் கழித்து 2017 பிப்ரவரி மாதம், தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார் சசிகலா. 18–02–2017 அன்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவி ஏற்றதில் தினகரனின் பங்கு முக்கியமானது.  அதன் பின்னர், தினகரன் பின்னணியில் கூவத்துார் விடுதியில் நடந்த கூத்துக்களால் தான், எடப்பாடி பழனிசாமி முதல்வராக மாற முடிந்தது. 

எங்கிருந்தோ வந்தார்... அ.தி.மு.க., நான் என்றார்...!

இரட்டை இலை சின்னத்திற்காக பணம் கொடுத்த வழக்கில், தினகரன் கைது செயப்பட்டதும். பன்னீர் செல்வம், பழனிசாமி அணிகள் இணையும் எண்ணம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இணைந்து தங்களை ஏற்றி விட்ட ஏணியான தினகரனை துாக்கி எறிந்தனர். 

இப்படி ஏற்ற இறக்கங்களுடன் தினகரன் அரசியல்பாதையை கடந்து வந்தால் கூட, தன்னிலை மறக்கவில்லை. பத்திரிகையாளர்களின் அனைத்து கேள்விகளையும் எதிர்கொள்கிறார். ஆர்கே நகரில் திமுக, அதிமுக இரண்டு ஜாம்பவான்களையும் மண்ணை கவ்வ வைத்து வெற்றி பெற்றார். 

எங்கிருந்தோ வந்தார்... அ.தி.மு.க., நான் என்றார்...!

இப்படி தமிழகம் அறியாத புதிய அரசியல்வாதியாக தினகரன் பரிணமிக்கிறார். அவரை, பணம் கொடுத்தார், தொண்டர்களை காசு கொடுத்து அழைத்து வருகிறார் என்று எல்லாம் அதிமுக உட்பட அனைவரும் சொன்னால் கூட, அது எந்த அளவிற்கு சாத்தியம் என்ற கேள்வி எழாமல் இல்லை. 

கனிசமான அதிமுக தொண்டர்கள், ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோரை நம்பாமல் இன்னமும் தினகரன் கட்சியை வழிநடத்துவார் என்று காத்திருக்கிறார்கள். 

அதனால் தான் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடுகிறது. 
தினகரனின் கவர்ச்சியை, பாமக உணர்ந்து கொண்டதால்தான், 20:20 சீட்டு அடிப்படையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர் தான், அதிமுக தொண்டர்கள் யாரை தலைவராக ஏற்கிறார்கள் என்று சொல்ல முடியும். 

அது தினகரனுக்கு சாதகமாக முடிந்தால், அதிமுக என்ற கட்சி இல்லாவிட்டாலும், திமுக ஸ்டாலினுக்கு நேரடியான மாற்றாக அவர் தான் உருவெடுப்பார். அப்படியில்லாமல், திமுக தரப்போ அல்லதும் ஆளும் அதிமுக தரப்போ பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று, தினகரன் தரப்பினர் படுதோல்வி அடைந்தால், அவரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க, முன்பை காட்டிலும் மிக பலமான முயற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டியிருக்கும். 

(இந்த கட்டுரையில் வரும் அனைத்து கருத்துக்களும், கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே).

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP