எப்போது எழுவோமோ?

கஜா புயலால் அனைவரும் இழந்த ஒன்று உள்ளது என்றால் அது கேபிள் டிவி. ஒவ்வொரு இல்லங்கள், குறிப்பாக இல்லத்தரசிகளின் செலவு குறைந்த மன அழுத்தத்திற்கான தீர்வாக அமைந்தது கேபிள் டிவி. இன்னும் சில நாட்களில் இதன் பாதிப்பு வெளியே தெரியும்.
 | 

எப்போது எழுவோமோ?

கஜா புயல் மரங்களை சாய்த்தது, வீடுகளை இடித்தது என்று அனைத்து வித ஊடங்களிலும் நாள்தோறும் செய்திகள் இடம் பிடித்துக் கொண்டுக்கிறது. இந்த புயலால் வெளியே தெரியாமல் மிச்சம மீதி இல்லாமல் தங்களின் தொழிலை இழந்து விட்டு நடுத்தெருவில் எதிர்காலம் எப்படி என்று ஏங்கி நிற்பவர்கள் பலர். 

இந்த புயலால் அனைவரும் இழந்த ஒன்று உள்ளது என்றால் அது கேபிள் டிவி. ஒவ்வொரு இல்லங்கள், குறிப்பாக இல்லத்தரசிகளின் செலவு குறைந்த மன அழுத்தத்திற்கான தீர்வாக அமைந்தது கேபிள் டிவி.  இன்னும் சில நாட்களில் புயல் பாதித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு  சீரியல்களின் சோகத்தை விட அதிகம். இதனால் இந்த இழப்பின் தாக்கம் வெளியே தெரியவில்லை. இன்னும் சில நாட்களில் இதன் பாதிப்பு வெளியே தெரியும்.

எப்போது எழுவோமோ?  

இப்படி மவுனமாக பாதிப்பை ஏற்பட்டுள்ள கேபிள் டிவி ஒளிப்பரப்பு பற்றி புதுக்கோட்டை மாவட்டம் கீரனுாரில் கேபிள் டிவி ஒளிப்பரப்பை செய்யும் கருப்பையாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

கீரனுாரில் 25 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறோம். இப்பகுதியில் 1500 இணைப்புகள் வைத்துள்ளோம். நவ. 15ம் தேதி இரவு வரை ஒளிபரப்பு சென்று கொண்டிருந்தது. கீரனுாரி்ல் அன்று நள்ளிரவுக்கு மேல் புயல் வீசியது. வெளியே செல்லவே முடியவில்லை. மறுநாள் 11 மணிக்கு மேல் ஏரியாவை பார்த்த போது எதுவுமே மிச்சம் இல்லை டிஷ், நோட், வயர் என்று அனைத்துமே சிதைந்து சின்னாபின்னமாகி இருந்தது. மீண்டும் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்பது போல நிலைமை மாறிவிட்டது. சுமார் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 

எப்போது எழுவோமோ?

குன்றாண்டார்கோயில் ஒன்றியத்தில் உப்பிலியக்குடி, வாழ மங்கலம், காவேரி நகர் என்று15 இடங்களில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டருக்கும் இது தான் கதி. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தளவு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  தற்போது மின்சார விநியோகம் தொடர்ந்து கிடைக்காத காரணத்தால் இதன் பாதிப்பு தெரியவில்லை. இயல்பு வாழ்க்கை தொடங்கிய பிறகு தான் மக்களுக்கு முழுமையாக தெரியும். நாங்கள் அதற்குள் இதற்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

எப்போது எழுவோமோ?

எங்கள் சுமையை தீர்க்கும் வகையில் அரசு கேபிள் டிவி நிறுவனம் இயல்பு வாழ்க்கை திரும்பும் வகையில் சில காலம் சந்தா தொகையை ரத்து செய்து உதவி செய்யலாம். அதே போல வங்கிகள் வட்டியில்லா கடன் வழங்க முன்வர வேண்டும். இது கேபிள் தொழில் என்று இல்லாமல் புயல்பாதித்த பகுதிகளில் நிலை குலைந்த அனைத்து தொழில்களையும் மீட்டு எடுக்க உதவி செய்யும். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் எங்கள் தொழிலுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். இது எங்களை விட அவர்களின் வளர்ச்சிக்கு தான் உதவி செய்யும். 

 

இவை எல்லாம் நடந்து நாங்கள் மீண்டு எழுவது எப்போது என்பது தான் எங்கள் மனதில் உள்ள கேள்வி. இவ்வாறு கருப்பையா கூறினார். அரசும் இது போன்றவற்களையும் மனதில் எடுத்து திட்டம் தீட்ட வேண்டும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP