முறுக்குன்னு சொன்னாலே மணப்பாறை முறுக்கு தான்... பேஷ் பேஷ் !

முறுக்குன்ன சொன்ன உடனே நம்ம எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மணப்பாறை முறுக்கு தான். இந்த மணப்பாறை முறுக்கு மட்டும் எப்படி இவ்வளவு ருசியாக இருக்கு? அதன் பல ரகசியங்களை அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்...
 | 

முறுக்குன்னு சொன்னாலே மணப்பாறை முறுக்கு தான்... பேஷ் பேஷ் !

முறுக்குன்ன சொன்ன உடனே நம்ம எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மணப்பாறை முறுக்கு தான். நம் நாட்டில் இருக்கும் மக்கள் வயிறு முட்ட என்னத்தான் வட பாயாசத்துடன் சாப்பிட்டாலும்,  நொறுக்குத் தீனி   இல்லாமல் இருக்கமாட்டார்கள். நம் நாட்டில் என்னத்தான் பல வடிவங்களில், பல வண்ணங்களில், விதவிதமான நொருக்கு தீனி வந்தாலும் நொறுக்குத் தீனிகளில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது முறுக்குதான். நாம் பள்ளி பருவத்தில் யாருக்கும் தெரியாம முறுக்கை மறைத்து வைத்து கொண்டு சாப்பிட்டிருப்போம். இப்படி பலருக்கு முறுக்கு சாப்பிட்ட நாபகம் ஒவ்வோருவருக்கும் நினைவிருக்கும்.  முறுக்கு என்ற உடனே மொரு மொரு என்றும் அதன் மனமும் சுவையும் அனைவருக்கும் நினைவு வந்துவிடும். ஏன்னென்றால் முறுக்கு என்பது மக்களின் ஒரு பாரம்பரியநொறுக்கு தீனி என்பதை யாராலும் மறுக்க இயலாது.   

முறுக்குன்னு சொன்னாலே மணப்பாறை முறுக்கு தான்... பேஷ் பேஷ் !

முறுக்கு பல வடிவங்களில் உள்ளது. ஆந்திர ரிங் முறுக்கு, கேரளா அரிமுறுக்கு, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில்  சக்ரி அல்லது சக்லி.  தமிழகத்தில் கை முறுக்கு, கல்யாண முறுக்கு,  தேங்காய் பால் முறுக்கு,  தேன்குழல்,  பட்டர் முறுக்கு, பூண்டு  முறுக்கு என்று  கணக்கில்லா வகைகளில் முறுக்கு இருந்தாலும், தமிழகமே முறுக்கின் தாய் வீடு என்பார்கள். எங்கெல்லாம் தமிழர்  சென்றார்களோ, அங்கெல்லாம் புதுப்புது வடிவங்களில் முறுக்கு உதயமானது.

முறுக்குன்னு சொன்னாலே மணப்பாறை முறுக்கு தான்... பேஷ் பேஷ் !முறுக்குன்னு சொன்னாலே மணப்பாறை முறுக்கு தான்... பேஷ் பேஷ் !

இத்தகைய சிறப்பை பெற்ற முறுக்கு பல ஊர்களில் பலவிதமாகவும் பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்டாலும் திண்டுகல் மாவட்டத்தில் உள்ள மணப்பாறை முறுக்கு உலக அளவில் இன்றும் பிரபலமாக உள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம்  மணப்பாறை என்றாலே, மணப்பாறை முருக்கு தாங்க ஞாபகத்திற்கு வரும். மணப்பாறை முறுக்கு எனபது ஒரு குடிசைத் தொழிலாக உள்ளது. 

முறுக்குன்னு சொன்னாலே மணப்பாறை முறுக்கு தான்... பேஷ் பேஷ் !

1930 - 1935 ஆம் ஆண்டு காலத்தில்  பிரபலமான மணப்பாறை முறுக்கு இன்று வரை புகழ்பெற்றதாக விளங்கி வருகிறது.  இந்த மணப்பாறை முறுக்கு மட்டும் எப்படி இவ்வளவு ருசியாக இருக்கு. மணப்பாறை முறுக்கு அதிக ருசியாக இருப்பதன் காரணம் என்னவென்றால் மணப்பாறை நீரின் உப்பு தன்மையே தான் என்றும் பலர் தெரிவிகிறார்கள். மணப்பாறை ஊரின் நீர் இயற்கையாக உப்பு தன்மையை கொண்டது.  இந்த உப்பு தன்மையை கொண்ட நீர்கொண்டு இங்கு முறுக்கு தயாரிக்கப்படுவதால் இது மிகவும் ருசியாக இருப்பதாகவே பலர் நம்புகிறார்கள். இந்த ஊரில் மட்டும்முறுக்கை இரண்டு முறை எண்ணையில் பொறித்து எடுப்பதினால் இதுவும் இதன் ருசிக்கு ஒரு காரணம் என்கின்றார்கள். இன்றும் பல குடும்பங்கள் இதை பிரதான குடிசை தொழிலாக செய்து வருகிறார்கள். 

முறுக்குன்னு சொன்னாலே மணப்பாறை முறுக்கு தான்... பேஷ் பேஷ் !

அந்தக் காலத்தில் பெரும்பாலான ரயில்கள் மணப்பாறையில் நின்று தண்ணீர் பிடித்து நகரும். கிருஷ்ண ஐயர் என்பவர் இந்த வாய்ப்பை உபயோகப்படுத்தி, முறுக்கு சுட்டு விற்பனை செய்ய ஆரம்பித்தாராம். இந்த முறுக்கு  இன்னும் பிரபலமாக காரணம் மணி ஐயர் என்று சொல்லப்படுகிறது. இன்றும் மணி ஐயரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரது வழியைக்  கடைப்பிடிக்கிறார்கள். மணி ஐயர் காலத்து முறுக்கு  பல்வேறு பரிணாம வளர்ச்சி கண்டு, இப்போதைய முறுக்காக மாறியுள்ளது.  இன்றும் மணி ஐயர் குடும்பங்கள் முறுக்கு தொழிலை செய்து வருகின்றனர். 

முறுக்குன்னு சொன்னாலே மணப்பாறை முறுக்கு தான்... பேஷ் பேஷ் !

ஆனால் முன்பு எல்லாம் முறுக்கு செய்வதற்கு கல்மலையான் அரிசி பயன்படுத்தப்பட்டது. தற்போது ஆந்திரா பச்சை அரிசி மாவில் முறுக்கு தயாரிக்கப்படுகிறது. இந்த பச்சை அரிசி மாவோடு எள்ளு, ஓமம், சேர்க்கப்பட்டு சுத்தமான கடலை எண்ணையில் பொறித்து எடுக்கப்படுவதால் முறுக்குக்க தனி ருசி கிடைக்கிறது. மணப்பாறையில் தயாராகும் முறுக்கு உலக அளவில் பல விதமான நாடுகளுக்கு தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மணப்பாறை முறுக்கிற்கு தமிழக அரசு அங்கீகாரம் மற்றும் வங்கி கடன் உதவி வழங்கினால் தங்களின் வாழ்க்கை மேம்படும் என்கின்றனர் முறுக்கு தயாரிக்கும் தொழிலாளர்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP