திருவள்ளுவர் காவியில் இருந்தால் என்ற  வெள்ளையாக இருந்தால் என்ன ??

திருவள்ளுவர் காவியில் இருந்தால் என்ன? கதரில் இருந்தால் என்ன ஆள்பவர்கள் நெஞ்சில் திருக்குறள் பதிந்து இருக்கிறதா. அவர்களின் ஆட்சியும், மக்களும் திருக்குறள் வழியில் நடக்கிறார்களா என்பதே முக்கியது. இதை நம்மவர்கள் விவாதம் ஆக்கினால் நல்லது.
 | 

திருவள்ளுவர் காவியில் இருந்தால் என்ற  வெள்ளையாக இருந்தால் என்ன ??

திருவள்ளுவர் காவியில் இருந்தால் என்ற 
வெள்ளையாக இருந்தால் என்ன ??
 
அரேபிய தேசத்தில் இருப்பவர்களிடம் கூட வாதிட்டு அவர்களை இந்துக்களாக மாற்றுவது எளிதாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள இந்துக்களிடம் தான் அது கஷ்டமாக இருக்கிறது என்பது இஸ்கான் அமைப்பை சேர்ந்த துறவி ஒருவரின் வேதனை. பகவத் கீதை இப்படி கூறியிருக்கிறது என்றால் ராமாயணம் இப்படி கூறியிருக்கிறதே என்று கூறுகிறார்கள்.

ஆனால் அவர்களோ எதையுமே கடைபிடிப்பது இல்லை என்று வேதனைப்படுகிறார் அந்த துறவி. திருவள்ளுவர் காவியா, வெள்ளையா என்ற விவகாரமும் இப்படிப்பட்டது தான்.  ஒரு நிறுவனத்தை தோற்றுவித்த முதலாளிக்கும், அதை தொடர்ந்து நடத்தும் முதலாளிக்கும் நிறைய வேறு பாடு இருக்கும்.

தொழிலை நிலை நிறுத்துவதற்கு முன்பாகவே அதை நிறுவிய முதலாளியின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும். பின்னவருக்கோ நிறுவனத்தை வழிநடத்தினால் போதும். அதனால் அவர் வேறு பல விஷயங்களிலும் தன் கவனத்தை செலுத்துவார். இதற்கு வாழும் உதாரணம் வேண்டுமானால் நல்லி சில்க்ஸ் உரிமையாளரை கூறலாம்.

இப்படி சுதந்திரத்திற்கு பின்னர் தமிழகத்திற்கு வந்து அமர்ந்த காங்கிரஸ் முதலாளிகளுக்கு மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதிலேயே ஆட்சி காலம் நிறைவு பெற்றது. அடுத்து வந்த திமுகவிற்கு இது போன்ற தொல்லைகள் அதிகம் இல்லை.

நீதிக்கட்சி தொடங்கியதில் இருந்து திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் வரை தங்கள் இலட்சியமாக கூறிக் கொண்டிருந்தவற்றை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது. முக்கியமான வேலைகளை  காங்கிரஸ் கட்சி செய்துவிட்டதால், திமுக கலை, இலக்கியம் போன்றவற்றை வளர்த்தது . 

மெரினா கடற்கரையில் சென்று பார்த்தால் தலைவர்கள் சிலைகள் வரிசை கட்டி நிற்கிறது. அந்த வகையில் திருவள்ளுவர் உருவமும் மீண்டும் உருவானது. ஆதி கால திருவள்ளுவர் உருவம் குறித்து பல செவி வழி செய்திகள் உலா வருகின்றன. 

அவற்றில் இதுவும் ஒன்று.1800 களில் மிண்ட் தலைவராக இருந்த எல்லிஸ் பிரபு வள்ளுவருக்கு முதல் வடிவம் தந்தார். தங்க நாணயத்தில் அவர் உருவம் பொரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்து சன்யாசி வடிவத்தில் வள்ளுவர் வாழ்ந்துவந்தார். 1959ம் ஆண்டு கே.ஆர். வேணு கோபால் சர்மா திருவள்ளுவரின் நவீன உருவத்தை வரைந்தார். அது தான் இன்றளவும் தொடர்கிறது.

கடந்த 22.08.2018 வெளியான துக்ளக்கில்  காங்கிரஸ் கட்சி பிரமுகர் பீட்டர் அல்ஃபோன்ஸ்  பேட்டி வெளியானது. அதில் அவர் வேணுகோபால் சர்மா திருவள்ளுவருக்கு பூணுல் வரைந்து இருந்தார். பின்னர் கருணாநிதி தான் அவரை அழைத்து பூணுலுக்கு பதிலாக துண்டு வரைய சொன்னார்.

திருவள்ளுவர் காவியில் இருந்தால் என்ற  வெள்ளையாக இருந்தால் என்ன ??

மதம் சார்ந்த அடையாளம் இருக்க கூடாது என்று கருணாநிதி இந்த முடிவை எடுத்தாக அவர் கூறினார். ஆனால் அது போன்ற சம்பவமே நடக்கவில்லை. வேணுகோபால் சர்மாவே துண்டு வரைந்தார் என்று அப்போதே 
சர்ச்சை எழுந்தது. இதில் வேணுகோபால் சர்மா பிராமணர் என்பதும், இந்த படம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் உருவானதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மீண்டும் பாஜக உபயத்தால் திருவள்ளுவர் சர்ச்சையை கிளம்பி இருக்கிறது. முத்துராமலிங்கதேவர், 
அம்பேத்கர் வரிசையில் தஞ்சை பிள்ளையார் பட்டியில் திருவள்ளுவரையும் சில கூமுட்டைகள் இழிவு படுத்தி உள்ளன. திருவள்ளுவர் காவியா? வெள்ளையா என்று விவாதம் நடத்தும் தமிழகத்தில் திருக்குறளை கடைபிடிக்கிறோமா இல்லையா என்று விவாதம் நடத்தினால் வாழ்க்கையில் பலன் கிடைக்கும்.

திருவள்ளுவர் ஆடையை பற்றி கவலைப்படும் அரசியல்வாதிகள் அவர் கள்ளுண்ணாமை, குடிமை செயல்வகை, செங்கோண்மை, கொடுங்கோன்மை என்றெல்லாம் ஆட்சிக்கும், குடும்பத்தி்ற்கும் ஏற்ப பல அதிகாரங்ளை படைத்துள்ளார் என்பதை மறந்து விட்டனர் போலும்.அவற்றில் ஒரு குறளையாவது அவர்கள் கடைபிடித்தால் நல்லது.  

திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் என்று இருந்த காலத்தில் பஸ்சிலாவது ஒரு குறள் இருந்தது. இப்போது அதுவும் இல்லை. கடந்த சில நாட்களாக திருவள்ளுவருக்காக பொங்கி எழுபவர்களை பார்ததால் நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்து விட்டால் என்று தமிழ் அறிஞர்கள் குமுறுகிறார்கள். ஆனால், கோழி எப்படி இருந்தால் என்ன குருமா ருசியாக இருந்தால் போதும் என்கின்றனர் சாதாரண மக்கள். 

திருவள்ளுவர் காவியில் இருந்தால் என்ன? கதரில் இருந்தால் என்ன ஆள்பவர்கள் நெஞ்சில் திருக்குறள் பதிந்து இருக்கிறதா. அவர்களின் ஆட்சியும், மக்களும் திருக்குறள் வழியில் நடக்கிறார்களா என்பதே முக்கியது. இதை நம்மவர்கள் விவாதம் ஆக்கினால் நல்லது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP