இவர்கள் மரணத்தில் என்ன வேறுபாடு கண்டீர்கள் தலைவர்களே!

இவர்களுக்கு தான் அனிதாவின் மரணத்திற்கும், ரிதுஸ்ரீ, வைஷ்யா, மோனிஷா ஆகியோர் மரணத்திற்கும் வேறுபாடு கண்டுபிடிக்க முடியும். இவர்களுக்கு உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கரை இருந்தால் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கி இருப்பார்கள். அல்லது மருத்துக்கல்லுாரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்றோ, மாற்றுமுறை வைத்தியமான ஆயுர்வேதம், சித்தா, யுனானி போன்றவை படிக்க 5 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக்கல்லுாரிகள் இருந்த அளவிற்கு திறக்க வேண்டும் என்று போராடி இருக்க வேண்டும்.
 | 

இவர்கள் மரணத்தில் என்ன வேறுபாடு கண்டீர்கள் தலைவர்களே!

கண்கண்ட தெய்வங்களாக இருப்பவர்கள் மருத்துவர்கள். அவர்களை நம்பித்தான் மக்கள் உயிரை ஒப்படைக்கிறார்கள். அந்த மக்களை நம்பியாவது மருத்துவக் கல்விக்கு ஏதாவது ஒரு விதத்தில் தேர்வு வைக்க  வேண்டிய கட்டாயம் உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் அடிப்படை என்றால் மாணவர்கள் கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றில் 200க்கு 200 மதிப்பெண் எடுக்கிறார்கள். 

அதிகபட்சம் 190 அல்லது 180 மதிப் பெண் வரை தான் இடம் கிடைக்கிறது. இதிலும் கூட அரசு பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வேறுபாடு அதிகம் உள்ளது. அரசு பள்ளிகள் சேர்க்கை தொடங்கி கற்றல், கற்பித்தல் வரை எந்த விதத்திலும் தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட இயலாது. 

தனியார் நிறுவனங்களின் நேர்மை கூட கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. தற்போது அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பிற்கு தனியார் கல்வி நிறுவனங்கள், குறிப்பாக பள்ளிகள் உதவி செய்கின்றன. இதற்கு பதிலாக அவர்கள் எதைப் பெருகிறார்கள் என்று ஆராய்ந்தாலே அவர்களின் மாணவர்கள்  பெறும் தேர்வு வெற்றியின் நம்பகத்தன்மையில் கரை படிகிறது.

இதற்காக மாநில அரசு தேர்வு நடத்தினாலும், அது நாடு முழுவதும்­­­­­­­­ உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கு இயலாத நிலையில் தான் உள்ளது. தற்போது கூட வேலுார் சிஎம்சி, ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துக்கல்லுாரிகளின் சேர்க்கைக்கு தனியே தான் தேர்வு நடத்தப்படுகிறது. இதே போல நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகள் தனித் தனியாக தேர்வு நடத்தும் போது பல மரம் கண்டவன் ஒரு மரமும் வெட்டமாட்டான் என்ற பழமொழிக்கு ஏற்ப எந்த கல்லுாரியிலும் இடம் கிடைக்காமல் போவதற்கு தான் வாய்ப்பு அதிகம்.

இவர்கள் மரணத்தில் என்ன வேறுபாடு கண்டீர்கள் தலைவர்களே!

இது போன்ற சூழ்நிலையில் தான், காங்கிரஸ் ஆட்சி செய்த போது, நாடு முழுவதற்கும் ஒரே தகுதித் தேர்வு நடத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் பாஜக வேறு வழியில்லாமல் நீட் தேர்வை அறிமுகம் செய்தது. இதை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். அதன் பின்னர் ஒரு சில ஆண்டுகள் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அதே நிலை தொடர முடியாத சூழ்நிலையில் தமிழகத்திலும் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் அரியலுார் மாவட்டம் அனிதா தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை தொடங்கியது. அரசியல் கட்சித் தலைவர்கள் இரவு பகல் பாராமல் அனிதா வீட்டிற்கு படை எடுத்து நிதி உதவியுடன் கூடிய ஆறுதல் அளித்தனர். 

அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல போகாவிட்டால் தமிழக தலைவரே இல்லை என்ற நிலை உருவானது. பின்னர் நாம் தமிழர் கட்சி தலைவர்கள் சீமான் குறிப்பிடத்தைப் போல 2ம், 3ம் கட்டத் தலைவர்கள் வற்புறுத்தல் காரணமாக அனிதா வீட்டிற்கு சென்றவர்களும் இருக்கிறார்கள். 

அனிதா ஏதோ காந்தி நகரில் வசிக்கும் அறிவு குறைந்த தலித் சிறுமி கிடையாது. அவர்கள் வீட்டில் இரண்டு அல்லது 3 பொறியியல் பட்டதாரிகள் இருக்கிறார்கள். திமுகவினரை சந்தித்து உதவி பெற்று, ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் ஆதரவைப் பெற்று, சுப்ரீம் கோர்ட்டில் நீட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர். 

இந்த பணியை செய்து பார்த்தால் தான் ,அதில் இருக்கும் இடையூறுகள் தெரியும். அதை எளிதாக செய்தன் மூலம் அவர் எத்தனை மன உறுதியும், போராட்டத்திற்கான வழிமுறையும் அறிந்தவர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இவ்வளவு தகுதியும், திறமையும் கொண்டவர் தற்கொலை செய்து கொண்ட பின்னர், நம்ம ஊர் சேரி மாணவியைப் போலவே அடையாளப்படுத்தப்பட்டார். அதை மக்களும் நம்பினார்கள். இது எதுவுமே தவறில்லை. விஷயமே இனிதான்.

இவர்கள் மரணத்தில் என்ன வேறுபாடு கண்டீர்கள் தலைவர்களே!

இந்த ஆண்டும் நீர் தேர்வு நடந்தது நாடு முழுவதும் 7 லட்சத்து 95 ஆயிரத்து 031 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதில் 315 பேர் வெளிநாட்டினர், 1,209 பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய குடிஉரிமை கொண்ட வெளிநாட்டினர் 441 பேர், இந்திய பாரம்பரியம் கொண்டவர்கள் 46பேர். தேர்வின் மொத்த மதிப்பெண்ணான 720க்கு 2 பேர் 700 மதிப்பெண் பெற்றனர்.

தமிழகத்தை பொறுத்தளவில் 1,38,997 பேர் விண்ணப்பித்து 1,23,078 பேர் தேர்வு எழுதி 48.57 சதவீதம் பேர் வெற்றி பெற்றனர்.

கடந்த ஆண்டு அனிதா போலவே இந்த ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்த 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ ஒரு மதிப்பெண் குறைந்தாதல் தோல்வி அடைந்துள்ளார். பட்டுக்கோட்டை வைஷ்யா, கூனிமேடு மோனிஷா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். தாய் இல்லாத மோனிஷாவின் தந்தை மீன் பிடிக்கும் தொழில் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த ஆண்டு அனிதாவிற்கு நடந்த போராட்டங்கள் போல எதுவும் வெடிக்கவில்லை. தலைவர்கள், நடிகர்கள் என்று எந்த பட்டாளமும் இவர்கள் வீட்டிற்கு படைஎடுத்து சென்று ஆறுதல் கூற துடிக்கவில்லை. இதர சம்பவங்கள் போலவே இதுவும் ஒரே நாளில் கடந்து சென்றது.

இதன் மூலம் நம் தலைவர்கள் மனம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். தங்களுக்கு தேவை என்றால் மரணத்தை கூட தலையில் துாக்கி வைத்துக் கொண்டு போராடுவார்கள். அதனால் பலன் கிடைக்கவில்லை என்றதும் கண்டு கொள்ளாமல் அறிக்கை அழுகையுடன் கடந்து செல்வார்கள். 

இவர்களுக்கு தான் அனிதாவின் மரணத்திற்கும், ரிதுஸ்ரீ, வைஷ்யா, மோனிஷா ஆகியோர் மரணத்திற்கும் வேறுபாடு கண்டுபிடிக்க முடியும். இவர்களுக்கு உண்மையிலேயே மாணவர்கள் மீது அக்கரை இருந்தால் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கி இருப்பார்கள். அல்லது மருத்துக்கல்லுாரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்றோ, மாற்றுமுறை வைத்தியமான ஆயுர்வேதம், சித்தா, யுனானி போன்றவை படிக்க 5 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக்கல்லுாரிகள் இருந்த அளவிற்கு திறக்க வேண்டும் என்று போராடி இருக்க வேண்டும். 

அதை செய்யாமல் காவிரி தண்ணீர் திறப்பு போராட்டம் என்பது போல நீட் தேர்வு போரட்டமும் கடந்து சென்று விட்டனர். இது போன்ற தலைவர்கள் எப்போதும் மக்களுக்கு நல்லது செய்யப் போவதில்லை. இவர்களை நம்பி நகைக்கடன் தள்ளுபடி செய்வார்கள் என்று காத்திருப்பது போல காத்திருக்காதீர்கள். கடைசியில் ஏமாற்றம் மக்களுக்கு தான். அதே நேரத்தில் மருத்துவ படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அது தான் வருங்கால தலைமுறையினரை வாழ வைக்கும்.

neewstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP