பெண்கள் நிலை குறித்த யதார்தத்தை அறிவோம்!

தக்கார் என்பதும் தகவிலர் என்பதும் அவர் அவர் எச்சத்தால் காணப்படும் என்பது எல்லாவற்றிக்கும் பொருந்தும். அது ஏற்ப எந்த எச்சம் நம்முடையது என்று பார்த்து வாழ்ந்தால் போதும்.
 | 

பெண்கள் நிலை குறித்த யதார்தத்தை அறிவோம்!


ஆண்கள் பெறும் அதே வெற்றியை பெண் பெறும் போது அவள் திறமையைக் காட்டிலும் பாலினமே முன் நிற்கிறது.  அதுபற்றிய விமர்சனம் கூட, அந்த பெண்ணின் நடத்தையை சுற்றியே இருக்கிறது. 

அதே நேரம், சமுதாயத்தில் தன்னை வெளிப்படுத்தும் விதம், இது போன்ற விமர்சனங்களை சிறிது சிறிதாக குறைத்து, ஒரு கட்டத்தில் விமசனம் செய்பவன் நடத்தையை கேள்வி எழுப்பும். 

கடந்த காலத்தில் திரைப்பிரபலங்களை விட, எழுத்தாளர்கள் மத்தியில் தான் இந்த போக்கு மிக அதிகம் இருந்தது. ஒரு பெண் எழுத்தாளர் புதுமை புரட்சியாக எழுதுவார். பாரம்பரியத்தை விட தனி மனித தைரியம், துணிச்சல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து எழுதுவார். 

ஒரு கட்டத்தில், ஆண் நண்பர்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என பரபரப்பு கட்டுரை எழுதி, இந்த வாசங்கள் மட்டுமே இடம் பெற்ற போஸ்டர் தமிழகம் முழுவதும் பரபரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் லட்சுமி போன்ற பெண் எழுத்தாளர்கள் இது போன்றவற்றில் இருந்து தப்புவதற்கு அவர்கள் எழுத்துதான் காரணம். 

இதே காலகட்டத்தில் வேலைக்கு போகும் பெண்களின் ஒழுக்கம் பற்றிய விமர்சனங்கள், வீட்டில் இருக்கும் பெண்களிடம் கூட இருந்தது. 

தற்போது இது திரைத்துறைக்கு பரவி உள்ளது. திரைப்படம் பார்ப்பவன், எந்த நடிகையும் தன் சகோதரியாக, தாயாக பார்ப்பதில்லை. மனைவியிடம் எதிர்பார்க்காத விஷயங்களை கூட கற்பனையில் நடிகையுடன் நினைத்து வாழ்கின்றனர். 

இதனால் தான், தான் விரும்பும் நடிகை கடித்த எச்சல் ஆப்பிளைக் கூட பெரிய தொகை கொடுத்து ஏலம் எடுக்கிறான். வசதி இருந்தால் கோயில் கட்டுகிறான். இப்படி எல்லா நடிகையுடன் கற்பனையில் குடும்பம் நடத்துபவன், அவரை நேரில் சந்திக்கும் போது தன் சுயநினைவை இழக்கிறான். 
இது எல்லா நடிகைகளுக்கும் பொருத்தம் என்றால் கூட, புதுமை, புரட்சி பேசும் நடிகைகள் அனுபவிக்கும் தொல்லை அதிகம். திருமணத்திற்கு முன்பு உடல் உறவு கொள்வதில் தவறு இல்லை என்று ஸ்டேட்மெண்ட் விடுவது, படுத்தால் தான் நடிக்க சான்ஸ் கிடைக்கிறது என்று பேட்டியளிப்பது போன்றவை, நடிகைகள் மீது உள்ள மரியாதையை முற்றிலும் குறைத்துவிடுகிறது. 

இது போன்ற சூழ்நிலையில், நடிகைகள் வெளியே வரும் போது தேவையற்ற சங்கடங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. இது ஆண், பெண் என்ற அடிப்படையில் நடப்பது என்பதை உணர்ந்து கொள்ளலாமல், அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை, திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று கூச்சல் போடுவது மறைமுகமாக தவறு செய்பவனுக்கு உதவி புரியும்.
 
பொள்ளாட்சி சம்பவத்திலும், பின்னர் அதே ஊரில் நடந்த மற்றொரு சம்பவத்திலும் பெண்கள் மிரட்டப்பட்டோ, அல்லது போலி காதல் மூலமாகவோ இணங்கி தான் செல்கிறார்கள். அதன் பின்னர் வழக்கத்துக்கு மாறாக பிரச்னை திசை திரும்பும் போது தான் அவளால் வெளியே வர முடியவில்லை. 

இந்த சம்பவம் நடப்பதற்கு பின்னால், அந்த பெண்கள் பற்றிய நமது பார்வை வேறு. இதையே அவர் வெறும் காதலில் மட்டும் விழும் போது பெற்றோர், உறவினர்கள் அறிவுரை சொல்லி இருந்தால் யார் கேட்டு இருப்பார்கள். 

இதன் காரணமாகத்தான் பெண்களை அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் வற்புறுத்துகிறார்கள். இதை பூர்ஷ்வாதனம் என்று வர்ணித்தால், எல்லாவற்றையும் துாக்கி எறிந்து விட்டு, ஆமா தப்பு நடந்து போச்சு, சாணத்தில் கால் வைத்துவிட்டதால் காலையா வெட்டி விட முடியும் என்று அதிரடிக்கும் துணிவு வேண்டும். இரண்டும் கெட்டானா இருந்து கொண்டு புரட்சி பேசுவதால் தான் பிரச்னையே. 

தக்கார் என்பதும் தகவிலர் என்பதும் அவர் அவர் எச்சத்தால் காணப்படும் என்பது எல்லாவற்றிக்கும் பொருந்தும். அது ஏற்ப எந்த எச்சம் நம்முடையது என்று பார்த்து வாழ்ந்தால் போதும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP