கழுவி ஊத்தறாங்களே கமல்...வச்சு செஞ்சுட்டாங்களே கமல்!

வாழ்க்கையில ஒர் திருக்குறளுக்கு இலக்கணமா இருக்க எல்லோரும் ஆசைப்படுவாங்க கமல், ஆனால் நீங்க எப்படி ஒரு அதிகாரத்திற்கே இலக்கணமா மாறி வாழ்ந்து வர்ரீங்க. கல்லாமை என்று ஒரு அதிகாரமே இருக்கு கமல். அதை படிச்சு பாருங்க 10 குறளும் உங்களுக்கு பொருத்தமா இருக்கும்.
 | 

கழுவி ஊத்தறாங்களே கமல்...வச்சு செஞ்சுட்டாங்களே கமல்!

வாழ்க்கையில ஒர் திருக்குறளுக்கு இலக்கணமா இருக்க எல்லோரும் ஆசைப்படுவாங்க கமல், ஆனால் நீங்க எப்படி ஒரு அதிகாரத்திற்கே இலக்கணமா மாறி வாழ்ந்து வர்ரீங்க. கல்லாமை என்று ஒர் அதிகாரமே இருக்கு கமல்.. அதை படிச்சு பாருங்க, 10 குறளும் உங்களுக்கு அப்படியேபொருத்தமா இருக்கும்.

அறிவுஜீவியான நீங்க தமிழ்ல பேசுறதை கேட்கவே ஒரு அகராதி வேண்டும், அப்படி இருக்கும் போது ஆங்கிலத்திற்கு எப்படி ஒப்புக் கொண்டிங்க. அதை புரி்ந்து கொள்ளும் அளவிற்கு நாங்கள் யாரும் புத்திசாலி இல்லை.

தேசியகீதம் பாடுவது தான் தேசபக்தியின் வெளிப்பாடு என்று ஸ்மிருதி ஈரானியும், ஆர்னாபும் பேசும்போது, நீங்க உடனே எனக்குள் ஒருவன் கதையை முழுசா சொல்லி இருக்க வேண்டாமே கமல். அதை விடுத்து நேரு கதையை சொல்லி குழப்பிட்டீங்களே சரியா? நல்லவேளை நீங்க எழுந்து நின்றதும் அர்னாப் உக்கார சொல்லிவிட்டார். இல்லை பாடுங்க என்று சொல்லிருந்தா ஒன் டூ திரி சொல்ல ஆளே இல்லை, நமக்கு டியூன் போட்டாத்தானே பாட்டே வரும்.

கழுவி ஊத்தறாங்களே கமல்...வச்சு செஞ்சுட்டாங்களே கமல்!

மாவோயிட்டுகளிடம் பேச  சொன்னது சரியான டுவிஸ்ட் கமல்.. ஆனால் பாருங்க நம்ம ஊர்காரங்க போல வெறும் போஸ்டர் ஒட்டி கோஷம் போடுறவுங்கன்னு வடஇந்தியாவுல இருக்கிற மாவோயிஸ்டுகளை நினைத்து விட்டீங்களா கமல். அவுங்க துப்பாக்கியால மட்டுமே பேசுவாங்க! தெரியுமா உங்களுக்கு. அதனால் தன் நம்ம சமாதான முயற்சியை அவங்க புரிஞ்சுக்கவே இல்லை. நீங்க உடனே சீமான்போல, வைகோபோல திருமுருகன் காந்திபோல செயற்பாட்டாளர்களான நம்ம ஊர் காரங்க பேர் பட்டியலை எடுத்து விட்டு இருந்தா அசந்து போயிருப்பாங்க

தீவிரவாதம், பயங்கரவாதம் விளக்கம் சொன்னதும் பாருங்க நான் டிவி முன்னாடி உக்காந்து தட்டோ தட்டுண்ணு கையை தட்டினேன். நீங்க உடனே அந்த அம்மா மாதிரி தமிழில பாஞ்சு ஏற்கனவே டிவிட் பண்ணின விஷங்களை கரகர குரலில் சொல்லி இருக்கணும், அவங்க அதை புரிந்து அடுத்த கேள்வி வரத்துக்குள நம்ம புரோகிராமே முடிந்து போய் இருக்கும்.

சபரிமலை கோயிலில் பெண்கள் உள்ளே நுழைய முடியாதற்கு தலித்துக்களை கோயிலில் நுழையவிடாதது பற்றி சொன்னீங்க பாருங்க, டிக்கெட் காசு அதுக்கே சரியா போச்சு; அது மாறியது போல இதுவும் மாறியது என்றீங்களே நீங்க அரசியல்வாதியா மாறீட்டிங்க என்பதை உங்களோட அந்த வாதம் எடுத்துக் காட்டிருச்சு கமல், அப்படியே விவாகரத்து, பால்யவிவாகம், மதுவிலக்கு கொள்கை என்று மூக்காலேயே பேசியிருந்தா அங்க இருந்த ஆடியன்ஸ் அசந்து போய் இருப்பாங்க.

என்ஜிஓவினர் வசூல் பத்தி சொன்ன உடனே நீங்க என்ன சொல்லி இருக்கணும், அப்போது இந்துகள் இதை செய்யனுமே, நீங்க சேவை அமைப்பு தொடங்கினீங்களா, என எதிர்கேள்வி கேட்டு மடக்கீ இருக்கணும், ஏழைகள் மீது உங்களுக்கு அக்கரை இல்லை என கூவி இருக்கணும், அதை விடுத்து நான் நேர்மையானவன் எனக்கு நேர் வழியில் தான் பணம் வருது அப்படி என்று ஏன் சொன்னீங்க கமல். அப்புறம் இன்கம்டாக்ஸ் காரனுக்கு யார் பதில் சொல்லுறது என்று கேட்கிறீங்களா.

கழுவி ஊத்தறாங்களே கமல்...வச்சு செஞ்சுட்டாங்களே கமல்!

இந்துக்கள், இந்து அல்லாதவர்கள் என்று நாட்டை துண்டாட நினைக்குது பாஜகன்னு சொன்னதோட விடாம நீங்க ரம்ஜானுக்கு ஏன் கஞ்சி குடிக்கவில்லை. கிறிஸ்துமஸ்சுக்கு ஏன் கேக் தின்னவில்லை என்று அடுக்கி இருந்தால் அவர்கள் திணறி இருப்பார்கள்.

பாருங்க கமல் நீங்கதான் ஓவ்வொருத்தரா போய் பார்த்துவிட்டு வர்ரீங்க; ஆனா அவங்க உங்களோட கூட்டணி வச்சுட்டதா நினைக்கிறாங்க, பாஜககாரங்க அவ்வளவு ஏமாளி என்பதை சட்டு நீங்க புரி்ந்து கொண்டிருந்தா இவ்வளவு தயக்கம் வந்து இருக்கவே இருக்காதே. 

ஏன் பாஸ் நியூயார்க்கில் சொன்னவன் பாஜ காரன் என்று நீங்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டீர்களே இனி பாருங்க நீயூயார்க்கில் கூட பாஜக இருக்கு அப்படின்னு கமல் ஒப்புக் கொண்டார் என்று சொல்லிவிடுவாங்க

நம்ம ஊர் சீமான், திருமுருகன் காந்தி இன்ன பிற அறிவு ஜீவிகளை பாருங்கள் இங்கே தான் கூச்சல் போடுவாங்க, வேண்டும் என்றால் ஒருமையில் கூட திட்டி உசுப்பு ஏற்றுவார்கள் ஆனால் வடக்கு பக்கம் தலை கூட வைத்து படுக்கமாட்டாங்க. நாமளும் அறிவஜீவிகள் தான் கமல், ஆனால் சென்னையைத் தாண்டி யோசிக்கவே கூடாது. இப்ப பாருங்க அடித்த கமலுக்கே இவ்வளவு கிழிஞ்சு இருக்கு என்றால் அடிவாங்கினவன் கதி ? என்று நம்ம மய்யத்தில பேசிக்கிறாங்க.

கழுவி ஊத்தறாங்களே கமல்...வச்சு செஞ்சுட்டாங்களே கமல்!

உங்க அறிவுக்கும் ஆற்றலுக்கும் இந்த நாடு சரிவராது கமல், நம்ம ஹேராம், விஸ்வரூபம் 2 குருதிபுனல் ஆகியவற்றையே புரிந்து கொள்ளாதவர்கள் நம் மக்கள். இவுங்க கிட்ட நாம ஏன் பேசனும், அதுவும் இங்கிலீசுல பேசனும், நம்ம அறிவுக்கும் ஆற்றலுக்கும் பேசாம டிரப்பை விவாததற்கு கூப்பிடுவோம், இங்கிலீஸ் எக்சாமை கூட தமிழில் எழுதும் நம்ம பசங்க மாதிரி தமிழிலேபேசுவோம், அவரு என்ன பேசுறார் என்று தெரியாம முழிப்பார். நம்ம மய்யத்துல இருக்குறவங்க அதை, ட்ரம்ப் விபரம் .தெரியாம முழிக்கிறார் என்று மாற்றிவிடுவார்கள்.  அதனால் நமக்கு பேரும் புகழும் கொட்டோ கொட்டு என்று கொட்டும். அதை விடுத்து இப்படி எங்கோ போய் வாய குடுத்தா வச்சு செஞ்சுருவாங்க கமல், அதைத்தான் செஞ்சு இருக்காங்க , சட்ட கிளிஞ்சு இருக்கே அடி கொஞ்சம் பலமோ.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP