விவேகானந்தர் பாறையில் இருந்த சிலுவை...!

விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டியதற்க்கு முன் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான சிலுவை ஒன்று இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா… கிறித்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் இது கிறித்தவர்களுக்குத் தான் சொந்தம்மானது என்று சொல்லி...
 | 

விவேகானந்தர் பாறையில் இருந்த சிலுவை...!

தமிழ்நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில்  பல சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் விவேகானந்தர் நினைவு மண்டபம். இந்த விவேகானந்தர் நினைவு மண்டபம் விவேகானந்தர் பாறை  மீது அமைந்துள்ளது. 

விவேகானந்தர் பாறையில் இருந்த சிலுவை...!

சுவாமி விவேகானந்தர் 1892ம் ஆண்டு கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது  கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, ஸ்ரீ பகவதியம்மன், சிவபெருமானை மணப்பதற்காக இந்தப் பாறையில் நின்று மூன்று நாட்கள் தவம் செய்ததாகவும் அதனால் இந்தப் பாறையில் அவரது பாதத்தின் தடம் பதிந்துள்ளது என்றும் இந்து சமயத்தவர்கள் கூறுகின்றனர்.  இந்து சமயத்தவர்களால் அம்மன் பாதம் என்று கருதப்படும் இடத்தை கண்ணாடியில் வைத்து மக்களுக்கு தெரியும்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. 

விவேகானந்தர் பாறையில் இருந்த சிலுவை...!

இந்தப் பாதத்தைச் சுற்றிக் கோயில் போன்ற அமைப்பில் திருபாத மண்டபம் எனும் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.  முதலில் இந்தப் பாறைக்கு ஸ்ரீ பாதப் பாறை என்றுதான் பெயர் இருந்ததாம். பின்னர் விவேகானந்தர் பாறை என்று மறுவியதாக கூறப்படுகிறது. விவேகானந்தர் நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அம்மன் பாதக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன.  

விவேகானந்தர் பாறையில் இருந்த சிலுவை...!

இந்த விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டியதற்க்கு முன் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான சிலுவை ஒன்று இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா… 

விவேகானந்தர் பாறையில் இருந்த சிலுவை...!

1963 ஆம் ஆண்டில் இந்திய அரசு விவேகானந்தருடைய நினைவைப் போற்றும் வகையில் இங்கு நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க முடிவு செய்தது. அப்போது  கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த மீனவர்களில் ஒரு குழுவினர் இந்தப் பாறை கிறித்தவர்களுக்குத் தான் சொந்தம்மானது என்று சொல்லி, அந்த அப்பாறையில் சிலுவைச் சின்னம் ஒன்று நிறுவப்பட்டது. இதனால் சமயம் சார்ந்த புதிய பிரச்சனை ஒன்று ஆரம்பம்பானது . இதில் உண்மையைக் கண்டறிய அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் விசாரணை முடிவில், இப்பாறை கிறித்தவர்களுக்குச் சொந்தமில்லை என்று கூறி புதிதாக அமைக்கப்பட்ட சிலுவைச் சின்னம் அகற்றப்பட்டது. அதன் பிறகு இந்த பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டது. 

விவேகானந்தர் பாறையில் இருந்த சிலுவை...!

கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையின் மேல் அமைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தினுள் விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பின் பகுதியில் மண்டபத்தின் கீழே ஒரு தியான மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இது விவேகானந்த கேந்திரம் எனும் அமைப்பின் சார்பில் பராமரிக்கப்படுகிறது.  

விவேகானந்தர் பாறையில் இருந்த சிலுவை...!

கன்னியாகுமரிக் கடலின் கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் படகுப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த படகில் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கொண்டு பாதுகாப்பான பயணத்தோடு விவேகானந்தர் பாறைக்கு செல்லலாம். இந்த படகில் பயணம் செய்ய சாதாரணக் கட்டணம், சிறப்புக் கட்டணம் என இரண்டு வழிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரு வகையான கட்டணம் என்றாலும் பயணம் அனைவருக்கும் சமமானதுதான்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP