வசந்த மாளிகையில் வாழும் விஜயபிரபாகரன் !

வசந்த மாளிகை....அரசியல் கட்சி பொதுக் கூட்ட மேடையும் அங்கு உள்ள கும்பலைப் பார்க்கும் போது தமிழகமே தன் பின்னால் நிற்பது போல தெரியும். கூட்டம் முடிந்ததும் தான் அவ்வளவும் பிரமை என்று தெரியும்.
 | 

வசந்த மாளிகையில் வாழும் விஜயபிரபாகரன் !

திமுக, அதிமுக இரண்டுக்கும் மாற்றத்தை தேடி மக்கள் அலைந்தனர். அந்த சூழ்நிலையில் களம் இறங்கினார் விஜயகாந்த். கட்சி தொடங்கும் முன்பே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மனங்களை கொள்ளையடித்தார். 

மக்கள் நினைத்ததை அவர் பேசியதால் அடுத்த தலைவராக அவரை ஏற்றனர். அதனால் தான் தனித்து நின்று தேர்தலில் அவரால் வெற்றி பெற முடிந்தது. 

அதே நேரத்தில் யதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பதை போல வெளியே நடிக்கத் தெரியாத விஜயகாந்த் ஊடகங்களால் காமெடி நடிகராக மாற்றிவிட்டனர். அதன் பின்னர் அவர் உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. 

வசந்த மாளிகையில் வாழும் விஜயபிரபாகரன் !

இந்த சூழ்நிலையில் கேப்டன் மகன் விஜய பிரபாகரன் தற்போது களம் இறங்கி உள்ளார். கட்சியை காப்பாற்றுவார் என்று நினைத்தால் அவர் பேச்சு அரசியலின் அடிச்சுவட்டை கூட அறியாமல் இருப்பதைத் தான் காட்டுகிறது. 

கடந்த சிலநாட்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் விஜயபிரபாகரன், கூட்டணிக்காக பலர் மறைமுகமாக காலில் விழுந்து கிடப்பதாக கூறியது அவர் பக்குவப்படாத பாலகனாக இருப்பதையே காட்டுகிறது. 

வசந்தமாளிகை திரைப்படத்தில் சிவாஜி, தன் வசந்தமாளிகைக்கு வாணிஸ்ரீயை அழைத்து செல்வார்கள். அந்த கண்ணாடி மாளிகை உள்ளே சென்று பார் நான் காதலிப்பவர் தெரிவார் என்று உள்ளே அனுப்பி வைப்பார். அவர் உள்ளே சென்ற போது அங்குள்ள கண்ணாடிகள் அவரை அறை முழுவதும்  இருப்பதாக காட்டும். 

வசந்த மாளிகையில் வாழும் விஜயபிரபாகரன் !

அதே போலதான்  அரசியல் கட்சி பொதுக் கூட்ட மேடையும் அங்கு உள்ள கும்பலைப் பார்க்கும் போது தமிழகமே தன் பின்னால் நிற்பது போல தெரியும். கூட்டம் முடிந்ததும் தான் அவ்வளவும் பிரமை என்று தெரியும். 

என் பேச்சை கேட்க வருகிறீர்கள். ஆனால் ஓட்டு மட்டும் போட மறுக்கிறீர்கள் என்று காசு கொடுக்காமல் கூடிய கூட்டத்தின் முன்பு தலைவர் ஒருவரை கதறவிட்ட தமிழகம் இது. 

இங்கு தான் எங்கு இருக்கிறோம் என்றே தெரியாமல் பேசுவது விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும் 2014ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமைத்து தான் தேமுதிக போட்டியிட்டது. கூட்டணி கட்சிகள் 2 இடங்களில் வெற்றி பெறுகிறது. ஆனால் 17 இடங்களில் தோல்வியை தழுவியது. இது தான் அரசியல். 

இதை எந்த அளவிற்கு விஜயபிரபாகரன் புரிந்து கொள்வார் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

வசந்த மாளிகையில் வாழும் விஜயபிரபாகரன் !

இவருக்கு சில காலம் முன்பு அரசியலி்ல் குதித்தவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது எதிர்கட்சி தலைவரின் மகன், முதல்வராக வருவரா என்று எதிர்பார்க்கப்படுவரின் மகன் எவ்வளவு பண்பட்ட அரசியல்வாதி போல பேசுகிறார். ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஒரு பெண் தனக்கு செட்டாப் பாக்ஸ் கொடுக்கப்பட்டும், கூடுதல் பணம் கட்டவில்லை என்று செயல்படாமல் செய்துவிட்டார்கள். உங்கள் ஆட்சியில் தானே டிவி கொடுத்தீர்கள்,கேபிளும் கொடுங்கள் என்று உணர்வு பூர்வமாக கருத்து சொல்கிறார். சிரி்த்துக் கொண்டே எங்க தாத்தா தானே டிவி கொடுத்தார், எங்கப்பா வந்ததும் கேபிள் கொடுப்பார் என்று அந்த பெண்மணியை கடந்து செல்கிறார். இதே கேள்வியை ஸ்டாலினிடம் கேட்டால் நிச்சம் இந்த பதிலை கூறாமல் ஆக ஆக என்று தடுமாறியிருப்பார். 

திரைப்படங்களில் மற்ற படங்களின் சிடியை பார்த்து காப்பி அடிப்பது போல உதயநிதி, தினகரன் சிடிக்களை வாங்கி பார்த்து விஜயபிரபாகரன் மேடை ஏறுவது நல்லது. இவர்களை நம்பி கூட்டணி வைக்கும் கட்சிகளை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP