வைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..?

வைகோ சார் பேசாம ஒருவாரம் தினகரனிடம் டியூஷன் போகலாம். அல்லது அவர் பயிற்சிபெற்ற இடத்தில் சக வகுப்பு தோழனா சேர்ந்து கொள்ளலாம். இதை விடுத்து பித்தன் எழுதியதுதான என்று புறக்கணித்தால் எனக்கு ஒன்றும் கவலை இல்லை.
 | 

வைகோ சார் தினகரனிடம் டியூஷன் போலாமே..?

தமிழக அரசியலில் பொன்விழா கண்டவர் வைகோ. இது வரை ஊழல் வழக்கு, கட்சியில் சிக்கல்(கட்சி இருந்தால்தானே) என்று எந்தவிதமான பிரச்னைகளும் இல்லாதவர். முதல்வர் நாற்காலியில் அமருவதை விட யாரையாவது உக்கார வைக்கும் வரை துடியாக துடிப்பதை விட வைகோவிற்கு வேறு வேலை சமீப ஆண்டுகளில் இல்லை.

முல்லை பெரியாறு பிரச்னை, மதுவிலக்கு போராட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று போட்டியே இல்லாத களத்தில் விளையாடுவது வைகோவின் பொழுது போக்கு. ஜெயலலிதா இருந்தாலாவது ஐயோ பாவம் என்று சிறையில் துாக்கிப் போட்டு ஓய்வு கொடுப்பார். இப்போது அதற்கும் வழியில்லை. நடப்பது, நடப்பது மேலும் நடப்பது என்று மட்டுமே வாழும் வைகோ அரசியலில் எந்த கவலையும் இல்லாமல் வாழலாம். ஆனால் அவரோ உணர்ச்சிகளின் உறைவிடமாக வாழ்வதால் பல விவகாரங்களில் சிக்கி கொள்கிறார். உணர்ச்சி வசப்படும்படி பேசலாமே தவிர்த்து தான் உணர்ச்சி வசப்பட்டு விடக் கூடாது என்பது தலைவர்களின் அடிப்படை இலக்கணம். இதை அறியாதவர் வைகோ. அவர் பேசும் பேச்சு பலருக்கு புரியவே புரியாது. அதனால் யாரும் உணர்ச்சி வசப்படமாட்டார்கள்.  சின்ன மீம்ஸ் கூட வைகோவை உணர்ச்சியில் நடுநடுங்க வைத்துவிடும்.

இதனால் மட்டுமே ஊடங்கள் அவரை துாண்டிவிட்டு அன்று முழுவதும் தன் டிஆர்பி ரேட்டை உயர்த்திக் கொள்ளும், பேட்டியின் பாதியிலேயே மைக்கை துாக்கி எறிந்து விட்டு வெளியேறி; ஊடங்கள் எதிர்பார்க்கும் நடிப்பை வெளிப்படுத்தி தன்னை காமெடியான மாற்றிக் கொள்வதில் வைகோவிற்கு நிகர் வைகோதான்.

இப்படிப்பட்ட வைகோ, அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று டியூஷன் படிக்க வேண்டியவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் டிடிவி தினகரன் தான்.

வைகோ அரசியலில் அடியெடுத்துவைத்து அதிகபட்சம் ஓராண்டு கழித்து பிறந்தவர்தான் தினகரன். பெரியகுளம் எம்பியாக இருந்த காலத்தில் மட்டுமே வெளிப்படையாக அரசியல் செய்தவர் தினகரன். அன்னிய செலாவணி வழக்கு ஒருபுறம் அழுத்துகிறது. மற்றொரு புறம் தப்பான அடிமையை தேர்வு செய்த சிக்கல், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 5வது குற்றவாளி. இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு கொடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்பட்ட வழக்கு என்று தமிழக அரசியலில் அதிக வழக்குகளில் சிக்கியவர் நம் தினகரன் சார் தான். இவற்றில் எல்லாம் தப்பினால் கூட ஆர்கே நகரில் பலர் கிழிந்த 20 ரூபாயுடன் எஸ்கியூஸ்மி தினகரன் சார் வந்தாரா? இந்த தினகரன் அட்ரஸ் தெரியுமா என்று ஆயிரக்கணக்கனாவர்கள் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி வாழ்க்கையே பிரச்னை என்று வாழும் தினகரன் எவ்வளவு சாந்த சொருபியாக காட்சி அளிக்கிறார். கடந்த ஆண்டு வருமானவரித்துறையினர் ஜெயாடிவி, ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் கம்பெனி, தினகரன் வீடு, அலுவலகம் உட்பட 150 இடங்களில் ரெய்டு நடத்துகிறார்கள். இதை படம் பிடித்துக் காட்ட வேண்டிய ஊடங்களில் இருந்த பரபரப்பு, சாதாரண தொண்டனிடம் ஐயோ என்ன நடக்குமோ என்ற அச்சம் என எதுவும் சம்பந்தப்பட்ட தினகரனிடம் சுத்தமாக இல்லை. அன்று மனைவியுடன் கோபூஜை வேறு.  இதே சம்பவம் வைகோவிற்கு நடந்திருந்தால் அவர் கத்தும் கத்துக்கு ரஷ்ய, பிரான்ஸ் அதிபர்கள் கூட ரெய்டை நிறுத்த சொல்லி உத்தரவு போட்டிருப்பார்கள். 

சமீபத்தில் மீம்ஸ் பிரச்னையில் தன் உறவினரை இழந்ததும் வைகோ வெளிப்படுத்திய உணர்ச்சியையும், தன் சின்னம்மா சசிகலா ஜெயலில் இருக்கும் நிலையில் அரசியல் செய்யும் நிலையையும் பார்த்தால் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

இதன் உச்சம் சமீபத்தில் செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தது பற்றி தினகரன் அளித்த பேட்டி. தினகரனை தவிர்த்து இதர தலைவராக இருந்தால் நிச்சயம் மிகப் பெரிய கூச்சல் குழப்பம் ஏற்பட்டிருக்கும். ஆனால் தினகரனோ எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துவதும், செந்தில் பாலாஜியை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக பேசாததும், செந்தில் பாலாஜி செய்த உதவிகளை நன்றியோடு பார்ப்பதும், வேறு யாரிடமும் எதிர்பார்க்க முடியாது. ஊடகங்கள் தோல்வி இது. நல்லா பாத்துக்கோங்க வைகோ சார்பில் தினகரன் இடத்தில் உங்களை நினைத்து பாருங்கள் நீங்க கத்தும் கத்துக்கு மதிமுக தொண்டன் எவனாவது தற்கொலை செய்து கொண்டிருப்பான்.

செந்தில் பாலாஜியை திமுகவில் சேர்ந்தது குறித்து, கழட்டிபோட்ட கோமணம் என்று சொல்லிவிட்டு பின்னர் கெளபீனம் என்று வார்த்தையை மாற்றியது. 

இதனால் தான் வைகோ சார் பேசாம ஒருவாரம் தினகரனிடம் டியூஷன் போகலாம். அல்லது அவர் பயிற்சிபெற்ற இடத்தில் சக வகுப்பு தோழனா சேர்ந்து கொள்ளலாம். இதை விடுத்து பித்தன் எழுதியதுதான என்று புறக்கணித்தால் எனக்கு ஒன்றும் கவலை இல்லை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP