வேலுார் லோக்சபா தேர்தல்: பழைய மொந்தையில் புதிய கள்!

இப்படிப்பவர்கள், அரசியல் கட்சிகளிடம் எந்த கேள்வியும் எழுப்ப முடியாது. அதனால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுக்க தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள். ஆக மாெத்தத்தில், ஓட்டுக்குப் பணம் வாங்கும் வாக்காளர்கள் திருந்தாதவரை, இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போவதை யாராலும் தடுக்க முடியாது.
 | 

வேலுார் லோக்சபா தேர்தல்: பழைய மொந்தையில் புதிய கள்!

தன்னைத் தானே இழிவு படுத்திக்கொள்ள ஓர் அமைப்பு இருக்கிறது என்றால், அது தேர்தல் கமிஷனாகத் தான் இருக்க முடியும். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, ஓட்டு எண்ணிக்கை முடியும் நாள் வரை, தேர்தல் கமினஷன் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும். 

வருங்கால பிரதமர் கூட, தேர்தல் கமிஷனருக்கு அடிமைதான். ஓட்டு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டால், தேர்தல் கமிஷனரை ஒரு கவுன்சிலர் கூட மதிக்க மாட்டார். தேர்தல் கமிஷன் பல் பிடுங்கிய பாம்பாகிவிடும். இதை மற்றவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ, தேர்தல் கமிஷன் நன்றாக உணர்ந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கைளை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் வரிப்பணம் வீணாகாது.

ஆர்.கே., நகர், அரவாக்குறிச்சியில் நடந்த தேர்தல்களில், பணப்பட்டுவாடா நடைபெற்றது. இதை கண்டுபிடித்த தேர்தல் கமிஷன், காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கையை தொடர்ந்து இருக்க வேண்டும். அதை செய்ததோ இல்லையோ உடனே தேர்தலை நிறுத்தியது.  இந்த தண்டனை நியாயம் தான். 

ஆனால், மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் யார் பணம் கொடுத்தாத புகார் எழுந்ததோ, அவர்களே மீண்டும் போட்டியிட்டனர். அதில், 2 பேருமே வெற்றி பெறறனர். ஆனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு கூறப்பட்ட காரணங்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. இதில் கொடுமையான விஷயம் ஆர்கே நகரில் தினகரனும், அரவாக்குறிச்சியில் செந்தில் பாலாஜியும் தேர்தல் ரத்து செய்ய காரணமாக கூறப்பட்டனர். ஆனால் மக்கள் அவர்களை வெற்றி பெற செய்து அனைவர் முகத்திலும் கரியை பூசியினர்.

இதே நிலைதான் வேலுார் லோக்சபா தேர்தலிலும். திமுக வேட்பாளர்கள் கதிர் ஆனந்த் தொர்புடைய இடங்களில் கோடி கோடியாக பணம் அள்ளப்பட்டது. இதை காரணம் காட்டி, இந்தியாவிலேயே இந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்தலை ரத்து செய்த தேர்தல் கமிஷன் மீண்டும் கதிர் ஆனந்த் போட்டியிடக் கூடாது என்று உத்தரவிட்டு இருக்க வேண்டும். 

அதை மீறி அவரையே முன்நிறுத்தினால் சம்பந்தப்பட்டவரின் வேட்புமனுவை ரத்து செய்து வேறு ஒரு வரை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கட்டாயப்படுத்தி இருக்கலாம். திமுக அதை கேட்காவிட்டால் அந்த கட்சியின் அங்கீகாரத்தை தற்காலிமாக முடக்கலாம். இதையெல்லாம் விட்டு, தன்னால் எதுவுமே ஆகாது என்று தெரிந்து கொண்டு வேலுார் தேர்தலை நிறுத்தியது, தேர்தல் கமிஷன் நடத்திய மிகப்பெரிய தவறு.

தண்டிக்க அதிகாரம் இல்லாத ஒரு அமைப்பு, தேர்தலை ரத்து செய்யும் என்றால், மக்கள் வரிப் பணத்தை வீணடிப்பதை அரசு துறையே கவலைப்படவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும், அதே வேட்பாளர்கள். ஒரு தேர்தலையே நிறுத்தும் அளவிற்கு நடந்து கொண்டவர்களை மீண்டும் போட்டியிட வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட கட்சிகள்,  தேர்தல் கமிஷனை மட்டும் அல்ல, தேசத்தையே முட்டாள் என்று நினைப்பதைத்தான் இது காட்டுகிறது.

இப்படிப்பட்ட அரசியல் கட்சிகள் ஆட்சி செய்தால், மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இந்த தொகுதியில், சுயேட்டை வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் அனைவருக்கும் பாடம் கிடைக்கும். மக்கள் கடந்த முறை வாங்கிய காசுக்கும் தற்போதுள்ள தேர்தலுக்கும் தொடர்பு இல்லை மீண்டும் பெட்டியை திறங்க என்று காத்திருக்கிறார்கள்.

இப்படிப்பவர்கள், அரசியல் கட்சிகளிடம் எந்த கேள்வியும் எழுப்ப முடியாது. அதனால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுக்க தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள். ஆக மாெத்தத்தில், ஓட்டுக்குப் பணம் வாங்கும் வாக்காளர்கள் திருந்தாதவரை, இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போவதை யாராலும் தடுக்க முடியாது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP