'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்!

கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன் சுல்தான்களால், வேலூர் கோட்டை கைப்பற்றப்பட்டது. அப்போது அவர்கள் ஹிந்து கோவில்களை சிதைத்து தங்கள் வெற்றி சின்னத்தை நிலைநாட்டி வந்தனர். வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்த 8 அடி உயரமுள்ள சிவலிங்கம் சிதைக்கப்படலாம் என அஞ்சிய ஹிந்துக்கள், அதை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தி, அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்துவார்சேரி என்ற இடத்தில் உள்ள கோவிலில் வைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.
 | 

'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்!

பன்னெடுங்காலமாய் ஹிந்துக்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் இடையே நிலவி வந்த ராமஜென்மபூமி - பாபர் மசூதி நில பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வெறும் நம்பிக்கை அடிப்படையில் மட்டுமின்றி, வரலாற்று ஆதாரங்கள், அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கைகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மொகலாயர்கள் படையெடுப்புக்கு முன் இங்கு வாழ்ந்த அனைவருமே சனாதன தர்மத்தை கடைபிடித்தவர்களே. மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என வெளிநாட்டினர் இங்கு வந்த பிறகுதான், கட்டாயத்தின் பேரிலும், சூழ்நிலை காரணமாகவும், சிலர் தங்கள் தாய் மதத்திலிருந்து தடம் மாறி, அவர்களின் மதத்தை பின்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

அப்படி வந்து குடியேறிய மாற்று மதத்தினர், முதலில் தங்கள் மத கருத்துக்களை பரப்புவதற்கு முன், சனாதன தர்மத்தின் அடையாளங்களை அழிக்க துவங்கினர். கோவில்கள் சூறையாடப்பட்டன. அந்த இடங்களில், மாற்று மத வழிபாட்டுத்தலங்கள் நிறுவப்பட்டன. 

அப்படி நிறுவப்பட்டதுதான், அயோத்தியில் ராமஜென்மபூமியில் கட்டப்பட்ட பாபர் மசூதி. மொகலாயர்கள் செய்த தவறை நியாயப்படுத்த, பாரத தேசத்தில் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து வந்த ஆங்கிலேய அரசு, மசூதியை அங்கீகரித்தது. 

'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்!

ராமஜென்மபூமியை மீட்கவேண்டும் என ஒரு பிரிவினர் முயன்று வந்த நிலையில், தான் தமிழகத்தில் வேலூரில் நடைபெற்ற கோவில் மீட்பு பேரணி, பொதுமக்கள் ஆதரவுடன் மக்கள் பேரணியாக மாறியது. அதன்படி, மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் அபகரிக்கப்பட்டு, திருப்பணிகள் நடக்காமல் இருந்த வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் புத்துயிர் பெற்றது. 

கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன் சுல்தான்களால், வேலூர் கோட்டை கைப்பற்றப்பட்டது. அப்போது அவர்கள் ஹிந்து கோவில்களை சிதைத்து தங்கள் வெற்றி சின்னத்தை நிலைநாட்டி வந்தனர். வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்த 8 அடி உயரமுள்ள சிவலிங்கம் சிதைக்கப்படலாம் என அஞ்சிய ஹிந்துக்கள், அதை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தி, அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்துவார்சேரி என்ற இடத்தில் உள்ள கோவிலில் வைத்து வழிபாடு நடத்தி வந்தனர். 

சுல்தான்கள் ஆட்சி காலத்தில், திப்பு, ஹைதர், பேகம் மாளிகையாக பயன்படுத்தப்பட்ட ஜலகண்டேஸ்வரர் கோவில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் செயின்ட் ஜார்ஜ் சர்ச் ஆக மாறியது. இது அப்பகுதி ஹிந்துக்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின், நம் ஆட்சியாளர்களான ராஜாஜி, காமராஜர் போன்றோரும், ஆன்மிகவாதியான கிருபானந்த வாரியார் போன்றோரும் கோவிலை மீட்க எடுத்த நடவடிக்கைகள் பலன் அளிக்கவில்லை. 

அதன் பின் வந்த ஆட்சியாளர்கள் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொங்கி எழுந்த வேலூர்வாசிகள் ஜலகண்டேஸ்வரரை மீண்டும் வேலூர் கோட்டை கோவிலில் எழுந்தருள செய்வது என முடிவு செய்தனர். இந்த இயக்கம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. 

'அயோத்தி' ராமனுக்கு வழிகாட்டிய 'வேலூர்' ஜலகண்டேஸ்வரர்!

1981 ஜனவரியில் துவங்கிய இந்த பணி, அதே ஆண்டு மார்ச் மதம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி, சத்வார்சேரியிலிருந்து லிங்கத்தை எடுத்து வந்து கோட்டை கோவிலில் நிர்மாணித்தார். அதன் பின் கோலாகலமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அப்போதைய காஞ்சி மடாதிபதி அந்த கோவிலுக்கு எழுந்தருளி 2 நாட்கள் தங்கி பூஜைகள் மேற்கொண்டார். 

ஆக்கிரமிப்பாளர்கள், மாற்று மதத்தினர் ஆகியோரிடம் சிக்கிய கோவில்கள், கோவில் நிலங்களை மீட்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த விஎச்பி எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிற்கு வேலூர் கோவில் மீட்பு பணி ஓர் முன்னுதாரணமாக அமைந்தது. 

1984ம் ஆண்டு ராமஜென்மபூமி மீட்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அது மிகப்பெரிய இயக்கமாக உருவெடுத்தது. அதன் பின்தான் அவ்விடத்தை மீட்பதற்கான சட்டப் போராட்டங்களும் வலுத்தன. தீராத வேட்கை, விடா முயற்சியுடன், தக்க ஆவணங்கள் ஆதாரங்களை சமர்ப்பித்து உச்சநீதிமன்றத்தில் வாதாடி, சட்ட ரீதியில் நியாயமான முறையில் ராமஜென்மபூமி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. 

மொகலாயர் பிடியில் இருந்த ராமஜென்மபூமி, நாட்டின் சுதந்திரத்திற்குப்பின் இஸ்லாமியர்களின் மசூதியாக இருந்து வந்தது. பலகட்ட போராட்டங்களுக்குப்பின், ஹிந்துக்களின் புனித பூமி ஹிந்துக்களின் வழிபாட்டிற்கே சொந்தம் என நியாயமான தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அயோத்தி நிலம் மீட்கப்பட்டதில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் நில மீட்பு போராட்டம் பிள்ளையார் சுழியாய் அமைந்தது, தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக, வேலூர் மக்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP