வாத்தியார் பிள்ளை...! சரி, இப்போ வாத்தியாரே....!?

இப்படி தேர்வு இல்லாத தேசமாக மாறும் இங்கு இளைஞர்கள் டாஸ்மாக் வாசலில் தவம் செய்கிறார்கள். இப்படியே போனால் எதிர்காலத்தில் போர் இல்லாமல் நாடு கைமாறிவிடும். அந்த காலம் விரைவில் வரும்.
 | 

வாத்தியார் பிள்ளை...! சரி, இப்போ வாத்தியாரே....!?

சந்தை, திருவிழா போன்றவற்றில் உயரமான இடத்தில் நின்று கொண்டு சராசரி உயரத்தை விட அதிக உயரம் கொண்டவர்களைப் பிடித்துச் சென்று போலீஸ் வேலையில் சேர்த்த காலமும் உண்டு. அதேபோலதான் கல்வித்துறையும். இந்த துறைகளில் பணிநியமன தடைசட்டம் வேலை செய்யாததால், கிடைக்கும் நபர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. காவல்துறையிலாவது தகுதி இல்லாவிட்டால் உடனே வெளியே தெரியும். கல்வித்துறையில் அப்படிக்கிடையாது. ஆசிரியர்களுக்கு தகுதி இல்லாவிட்டால் கூட அது வெளியே தெரியாது.  பணியில் சேரந்தது முதல் வெளியேறும் வரை ஒரே புத்தக்கத்தை மனப்பாடம் செய்து  வாழ்க்கையையே ஓட்டி விடுகிறார்கள் ஆசிரியர்கள் . 

இதனால் தான் பாடத்திட்டங்கள் மாறும் போதும், பணி நியமனத்திற்கான நிபந்தனைகள் மாறும் போதும் சிரமம் ஏற்படுகிறது. 1980களின் முற்பகுதி வரை கைத் தொழில் ஆசிரியர் 10ம் வகுப்பு கூட படிக்க வேண்டியது இல்லை. அதன் பின்னர் 10ம் வகுப்பு கட்டாயம் என்று மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் பத்தாம்வகுப்பு தேர்வு எழுதி பாஸ் செய்தார்கள். கல்லுாரி பேராசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுகலை பட்டம் பெற்றவர்கள், இளம் கலை பட்டதாரிகளுக்கு பாடம் எடுத்தனர். இந்த கல்வித தகுதி கொண்டர்கள் ஓய்வு பெற பெற இன்றைக்கு பிஎச்டி வரை படித்தவர்களும், ஸ்டெட், பாஸ் செய்தவர்களும் அந்த இடத்தை நிரப்புகின்றனர். 

இன்றைக்கு வரை இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பாடம் எடுக்கும் பேராசியர்களுக்கு கல்வி கற்பித்தல் தொடர்பான எந்த பட்டமும் அவசியம் இல்லை. 

இது போன்ற காலச்சூழலில் தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் தகுதித் தேர்வில் பாஸ் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. இதற்காக பல ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1500 ஆசிரியர்கள் சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கட்டாயம் தகுதித் தேர்வில் பாஸ் செய்ய வேண்டும் என்று நீதிமன்றமும் கூறிவிட்டது. ஒரே ஒரு தேர்வில் பாஸ் செய்ய முடியாத இவர்களை நம்பி மாணவர்கள், மாணவிகள் தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்கிறார்கள் என்பதை நினைத்தால்தான் நெஞ்சம் பகீர் என்கிறது. 

இன்னொருபுறம் பணி நியமனம் என்பது தேர்வில் பாஸ் செய்தாலோ, பட்டப்படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்றாலோ மட்டும் போதாது, பணம் அவசியம். பணம் இருந்தால் போதும், மற்றவை இல்லாவிட்டால் கூட வேலை கிடைத்து விடும். இவர்கள் மற்ற தொழில் செய்து கொண்டு 5 ஆயிரம், 10 ஆயிரம் சம்பளத்தில் ஆள் போட்டு வகுப்பு எடுக்க சொல்லி சமாளிக்கிறார்கள். இது போன்றவர்கள் தான் தேர்வு என்றால் தவியாய் தவிக்கிறார்கள். சரி ஆசிரியர்கள் தான் அப்படி என்றால் நீதித்துறையும் அப்படிதான் உள்ளது. 

எங்காத்துகாரரும் கச்சேரிக்கு போறார் என்று ஒரு பழமொழி இருக்கு. வழக்கு இருக்கோ, இல்லையோ கறுப்பு கோட் போட்டுக் கொண்டு கோர்ட்டில் சென்று பெஞ்ச் தேய்துவிட்டு வரும் வக்கீல்களை தான் இப்படிக் கூறுவார்கள். நம்ம ஊர் வக்கீல்கள், நீதிபதிகளின் தகுதியை சமீபத்தில் மாவட்ட நீதி நியமனத் தேர்வு நடந்தது. இதில் ஓருவர் கூட பாஸ் செய்யவில்லை. கேள்வி கடினம், எதிர்மறை மதிப்பெண் வழங்கப்பட்டதால் தோல்வி ஏற்பட்டது என்று சமாதானம் சொல்கிறார்கள். 

இப்படிப்பட்ட சமுதாயத்தில் எப்படி நீட் தேர்வு நடத்த அனுமதிப்பார்கள். 8ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்கல் போன்று சட்டங்கள் தான் வரவேற்பு பெறும். 

இப்படி தேர்வு இல்லாத தேசமாக மாறும் இங்கு இளைஞர்கள் டாஸ்மாக் வாசலில் தவம் செய்கிறார்கள். இப்படியே போனால் எதிர்காலத்தில் போர் இல்லாமல் நாடு கைமாறிவிடும். அந்த காலம் விரைவில் வரும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP