வைகோ சார்... வேலை வந்துவிட்டது !

அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டதை தீவிரப்படுத்த வேண்டும் என்றால் அதை வைகோ முன்னெடுத்தால் தான் முடியும். சார் துண்டை இழுத்துவிட்டுக் கொண்டு நடைப்பயணம் தொடங்குங்கள் வேலை வந்துவிட்டது.
 | 

வைகோ சார்... வேலை வந்துவிட்டது !

ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்மஸ்,பொங்கல், போன்ற பண்டிகைகளுக்கு இணையாக தமிழகத்தில் புதிதாக இணைந்தது காவிரி பிரச்னை. இதற்காக மே மாதம் தொடங்கி சுமார் 3 மாதம் காலம் வீராவேசமான போராட்டங்கள் நடக்கும். அரசியல்வாதிகள் அட்டைக்கத்தியை வீசி தெருத்தெருவாக அலைவார்கள். அரசும் தன் பங்கிற்கு உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டிவிட்டு ஓய்ந்து விடுகிறது. பின்னர் அடுத்த ஆண்டு வரை காவிரியை பற்றி நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள்.

வைகோ சார்... வேலை வந்துவிட்டது !

தமிழகத்தின் இந்த நிலைப்பாடுதான் கர்நாடகா அரசுக்கு தைரியத்தை கொடுத்து வருகிறது. அதன் விளைவுதான் மேகதாது அணை கட்டும் திட்டமாக தற்போது முன்வந்து நிற்கிறது.
வைகோ சார்... வேலை வந்துவிட்டது !
கடந்த 1991 முதல் 15 ஆண்டுகளில் 4 முறை காவிரியில் 300 டிஎம்சிக்கு அதிகமாக தண்ணீர் வந்துள்ளது. நடப்பு ஆண்டில் 3 முறை மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இதில் மேட்டூர் நீர்மட்டம் 93.5 அடிக்கு அதிகம் வந்த தண்ணீர் எல்லாம் வீணாக கடலில் கலந்து விட்டது. இதே போல தமிழகத்தின் இதர ஆறுகளின் கதியும் இது தான். போராடி பெற்ற தண்ணீர் வீணாக கடலில் கலக்க தொடங்கும் போதே அதை தடுக்க வேண்டிய தமிழக அரசு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது. ஆனால் கர்நாடக அரசு அப்படி வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் கிடையாதல்லவா, தற்போது மேகதாது அணை கட்டி தானே தேவையான நீரை சேமிக்கிறேன் என்று களம் இறங்கி உள்ளது.

கர்நாடக மாநிலம் குடகுமலையில் காவிரி உற்பத்தியாகி வரும் போதே மைசூர் அருகில் கிருஷ்ணாராஜசாகர் அணையில் தண்ணீர் தேக்கப்படுகிறது. அது நிரம்பிதான் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பின்னர் மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளா கர்நாடக எல்லையில் மானந்தவாடி அருகே கபினி உற்பத்தியாகி தமிழ்நாட்டிற்கு வருகிறது. இதனை தடுத்து கபினி அணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்படுகிறது.

திருமாகடல் நரசிங்கபுராவில் காவிரியும், கபினியும் ஒன்றாக இணைந்து தமிழகத்தை வளப்படுத்தி வருகிறது. அதன் பின்னர் பல சிற்றாறுகள் தமிழ்நாட்டிற்கு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தளவில் மேட்டூர் தான் சொல்லிக் கொள்ளும் வகையில் உள்ள அணை. இதனால் தான் தேவைக் அதிகமான தண்ணீர் நேராக கடலில் சென்று கலக்கிறது. உபரி நீரை கடலுக்கு அனுப்பி அதை நீங்கள் கடலுக்கு வழியனுப்புவதை நாங்களே சேமிக்கிறோம் என்று மேகதாது அணை கட்ட கர்நாடகம் களம் இறங்கி உள்ளது.

பில்லிக்குண்ட் பகுதியை காவிரி அடையும் முன்பே மேகதாது என்ற இடத்தில் ஒரு அணைகட்ட கர்நாடக அரசு முயற்சி செய்கிறது. இது காவிரியில் உள்ள மற்ற அணைகளை விட அதிக உயரம் கொண்டதாகவும், அமையும் என்று கூறப்படுகிறது. அப்படி அமைந்தால் தமிழகத்திற்கு உபரி நீரும்வராது, உள்ள நீரும் வராது. இதனால் தான் தமிழக அரசு இதை எதிர்க்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகி்ன்றனர்.

அதை மீறிமத்திய அரசு காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டவும், குடிநீர் திட்டங்களை செயல்படுத்தவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கி உள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் முதற்கூட்டம் நடந்து முடிந்த பின்னர் பேச்சே இல்லை. அந்த ஆணையத்தில் மேகதாசு அணை பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கணிசமாக இல்லாவிட்டாலும் ஒன்றிரண்டு இடங்களையாவது பிடிக்கும் வகையில் பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதற்கு ஏற்ப கர்நாடக மாநிலத்தில் அனைத்து கட்சிகளும் இந்த திட்டத்திற்கு தங்கள் ஆதரவை தரும். ஆனால் தமிழகத்தில் பாஜக கன்யாகுமரி, கோவை, திருப்பூர் போன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றாலே பெரியது. அதனால் அவர்கள் தமிழகத்தை பற்றி கவலைப்பட வில்லை. ஆனால் சுமார் 50எம்பிக்களை வைத்துள்ள அதிமுக, தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சியான திமுக போன்றவைகள் இந்த திட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் களம் இறங்காதது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூடி மேகதாது திட்டம் குறித்து விவாதிப்பது காலத்தின் கட்டாயம். அதே போல தமிழக அரசு விரைவில் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும்.
வைகோ சார்... வேலை வந்துவிட்டது !
மேலும் இந்த திட்டங்களை நிறைவேற்றினால் மட்டம் போதாது, தமிழகத்தில் நீர் வழிப்பாதை, தடுப்பு அணைகள் அமைத்து உபரிநீர் கடலில் கலப்பதை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்.

வைகோ சார்... வேலை வந்துவிட்டது !

அதிமுக ஆட்சியில் இருந்து இந்தப் பணிகளை செய்தால் திமுகவும், திமுக ஆட்சியில் நடந்தால் அதிமுகவும் எதிர்ப்பது தமிழகத்தின் சாபக் கேடு. அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டதை தீவிரப்படுத்த வேண்டும் என்றால் அதை வைகோ முன்னெடுத்தால் தான் முடியும். சார் துண்டை இழுத்துவிட்டுக் கொண்டு நடைப்பயணம் தொடங்குங்கள் வேலை வந்துவிட்டது.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP