இசைப்பயணம்-8... தவிலின் சிறப்புகள் !

இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியான தவில் குறித்து தான். நாதசுவரக் கச்சேரி தொடங்கும்போது தவில் வாசிப்போடு தான் தொடங்கும். இது தவில் வாத்தியத்தின் தனிச் சிறப்பு.
 | 

இசைப்பயணம்-8... தவிலின் சிறப்புகள் !

இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியான தவில் குறித்து தான்.  

கர்நாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் தவில் பயன்படுத்தப்படுகிறது. இக்கருவி தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும், திருமணம், சுப நிகழ்ச்சிகளிலும் தவில் அதிகாமாக பயன்படுத்தப்படுகிறது. விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், ஒரு பக்கம் சிறியதாகவும், மறு பக்கம் சற்று பெரியதாக இருக்கும். சிறிய பக்கத்தில் போர்த்திய மரத்தால் செய்யப்பட்ட குச்சியினாலும் பெரிய பக்கத்தை விரல்களாலும் வாசிப்பர். விரல்களில் கவசங்கள் அணிந்திருப்பார்கள். பெரும்பாலான தவில் கலைஞர்கள் சிறிய பக்கத்தை வலது கையால் குச்சி கொண்டும் பெரிய பக்கத்தை இடது கையால் கவசம் அந்த விரல்களைக் கொண்டும் பயன்படுத்துவர். 

இசைப்பயணம்-8... தவிலின் சிறப்புகள் !

தவிலின் உருளை வடிவிலான பகுதி, பலா மரத்தினால் செய்யப்படுகிறது. இதன் சிறிய பக்கத்தில் இருக்கும் தோல் வளந்தலை என  கூறப்படுகிறது. பெரிய பக்கம் உள்ள தோலை தாங்கிப் பிடிக்க இருபக்கமும் மூங்கிலால் செய்யப்பட்ட வளையங்கள் உண்டு. மூங்கில் வளையங்கள் சீக்கிரம் உடைந்து போவதால், தற்போது மூங்கிலுக்கு பதிலாக உருக்கு உலோகம் பயன்படுத்தப்படுகிறது. உருக்கு உலோகத்தால் செய்யப்பட்ட இரு வளையங்களிலும் 22 துளைகள் உள்ளன. ஒரு வளையத்தில் 11 துளைகள் இருக்கும். ஒன்று சிறிய பக்க தோலைத் தாங்கி பிடித்து இருக்கும் மற்றொன்று பெரிய பக்கத் தோலைப் பிடித்து இருக்கும். இதனால் அவற்றில் ஏதாவது ஒரு பக்கம் கிழிந்துவிட்டால் கூட எளிதில் மாற்றலாம். 

இசைப்பயணம்-8... தவிலின் சிறப்புகள் !

தவில் இசைக்கருவி எப்போது உருவானதுஎன்பது குறித்து எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் 15-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் 12 இடங்களில் தவில் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இசைப்பயணம்-8... தவிலின் சிறப்புகள் !
கர்நாடக இசைக் கச்சேரிகளில் பிரதான பாடகர் தான் முதலில் தொடங்குவார். பக்கவாத்தியம் பின்தொடரும். வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களின் தனிக் கச்சேரியிலும் அந்தந்த வாத்தியங்கள் தான் தொடங்கும். நாதசுவரக் கச்சேரிகளில் நாதசுவரம் தான் பிரதான வாத்தியம்; தவில் பக்கவாத்தியம். ஆனால் நாதசுவரக் கச்சேரி தொடங்கும்போது தவில் வாசிப்போடு தான் தொடங்கும். இது தவில் வாத்தியத்தின் தனிச் சிறப்பு.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP