டிக்-டாக்'கில் நீடிக்கும் பஞ்சாயத்து... சிக்கித் திணறும் பெண்கள்...!

யார் வேண்டுமானாலும் டிக்டாக் பயன்படுத்தலாம். தனது குடும்பத்துடன். நடிப்பும், நகைச்சுவையும், நல்ல தகவல்களும் இடம் பெறலாம். மணிக்கணக்கில் பயன்படுத்தாமல் ஒரு பொழுதுபோக்கிற்காக சில நிமிடங்கள் பயன்படுத்தலாம்.
 | 

டிக்-டாக்'கில் சிக்கித் தவிக்கும் பெண்கள்...!

நடந்து செல்வோர், வாகனத்தில் செல்வோர் என சுமார் 100க்கும் மேற்பட்டோரை இன்று நாம் கண்காணித்தோம். அதில் 90 சதவீதம் பேர் மொபைல் போனை உபயோகித்துக் கொண்டு தான் சென்று கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு மொபைல் போன் அனைவரையும் அடிமைப்படுத்தியுள்ளது. 

பல்வேறு புதிய புதிய செயலிகள் வந்துகொண்டுள்ள நிலையில், முகநூலையே முந்தி வருகிறது டிக்-டாக் செயலி.  ‘டிக் டாக்’ எனப்படும் செயலியில் இசை, பாடல்கள், வசனங்களுக்கு முகபாவனைகளை செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். கல்லூரி மாணவ-மாணவிகள் இதில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்றாலும், இதில் 30 வயதிற்கு மேல் உள்ள திருமணம் ஆன பெண்கள் அதிகம் உபயோகப்படுத்துவதாகத் தெரிகிறது. பெரும்பாலும் இரவு 9 மணிக்கு மேல் அதிகாலை 2 மணிவரை டிக் டாக் உபயோகித்து வருவதாக கூறப்படுகிறது. 

இதில் பலர் தான் உள்ளடக்கி வைத்துள்ள திறமைகளை வெளிப்படுத்தி வந்த போதிலும், சிலர் அரைகுறை ஆடை வீடியோக்களையும், அபாயகரமான வீடியோக்களையும் வெளியிடுகின்றனர். ஏனென்றால் இங்கு சென்சார் என்பது இல்லை. 

டிக் டாக் அபிராமியின் கதை அனைவரும் அறிந்ததே. இதனால் குழந்தைகளின் உயிர் பறிபோனது. அபிராமி கம்பிகளுக்குப் பின்னால்.  ஒரு அபிராமி போனாள் என்று பார்த்தால், அது தான் இல்லை. வெட்ட வெட்ட வளரும் என்பது போல பல ஆயிரம் அபிராமிக்கள் உருவாகி வருகிறார்கள். 

டிக்-டாக்'கில் சிக்கித் தவிக்கும் பெண்கள்...!

தற்போது டிக்டாக்கில் நடிப்புகளும், நடனங்களும் குறைந்து பஞ்சாயத்து தான் அதிகமாக பகிரப்படுகிறது. ஒரு பெண் அரைகுறை ஆடையுடன் ஆடினால், அவரை மற்றொருவர் திட்டி, மற்றொரு வீடியோவை பகிர்கிறார். அந்தப் பெண்ணும் விடுவதாக இல்லை. நான் எப்படி ஆடினா உனக்கென்ன, உன் வேலையைப் பார் என்று பதிலடி வீடியோவும் பகிரப்படுகிறது. இருபுறமும் சப்போர்ட் பண்ண பல வீடியோக்கள் வலம் வருகின்றன. ஒரு சிலரே நல்ல தகவல்களை மக்களுக்கு பகிர்கின்றனர். 

டிக்-டாக் செய்யும் பெரும்பாலான பெண்கள் தங்களை சுற்றியுள்ள சொந்தம் பந்தங்களை பிளாக் செய்து விட்டு முகம் தெரியாத நண்பர்களுடன் தங்களுடைய வீடியோ பகிரப்படுவதாக தெரிகிறது. ஆனால் திடீரென  அவரது பெற்றோருக்கோ அல்லது கணவருக்கோ தெரியவரும் போது கடும் பிரச்னைகள் உருவாகி குடும்பமே சின்னாபிண்ணமாகிறது. அதையும் சில பெண்கள் வீடியோ எடுத்து போடுகின்றனர். 'அசிங்கமான கமெண்ட்டை என் வீட்டுக்காரர் பார்த்துவிட்டார். இதனால் பிரச்னை ஆகி விட்டது. ஏன் இப்படி போடுகிறீர்கள்'  என அழுதவாறே வீடியோ வெளியிடுகிறார். 

டிக்-டாக்'கில் சிக்கித் தவிக்கும் பெண்கள்...!

யார் வேண்டுமானாலும் டிக்டாக் பயன்படுத்தலாம். தனது குடும்பத்துடன். நடிப்பும், நகைச்சுவையும், நல்ல தகவல்களும் இடம் பெறலாம். மணிக்கணக்கில் பயன்படுத்தாமல் ஒரு பொழுதுபோக்கிற்காக சில நிமிடங்கள் பயன்படுத்தலாம். 

ஆபாசங்கள் வெளியிடப்படுகிறதா? நீங்களே அந்த நபரை ரிப்போர்ட் செய்து பிளாக் பண்ணுங்கள். அதை பெரிதாக்கி, அவர்களை ஹீரோயின்களாக்கி விடாதீர்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP