டிக் டாக் லைக் மோகம்; தூண்டிலில் சிக்கிய மீன்களாய் பெண்கள்!

இலவம் பஞ்சு காயாக இருக்கும் போது அதன் உள்ளே பாதுகாப்பாக இருக்கும் பஞ்சு, அது மரத்திலேயே வெடிக்கும் போது ஊர் முழுவதும் பரவி விடும். அப்புறம் யாராலும் மீண்டும் அதை அந்த மரத்திற்கு கொண்டு செல்ல முடியாது. அதைப் போன்ற சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது என்பதை சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்.
 | 

டிக் டாக் லைக் மோகம்; தூண்டிலில் சிக்கிய மீன்களாய் பெண்கள்!

பல தார மணங்கள் அனுமதிக்கப்பட்ட மதத்தில் அதன் நிறுவனத் தலைவரை  ஒரு பெண் சந்தித்தாள்.  ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது தானே விதி முறை; அதில் என்ன பால் வேறுபாடு. ஒரு ஆண் பல பெண்களை  திருமணம் செய்து கொள்ளலாம் என்றால், ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்வதும் தானே சரியாக இருக்கும். இதில் பெண்ணுக்கு மட்டும் ஏன் விதி விலக்கு என்று அவள் கேட்டாலாம். 

இதற்கு அந்த மதத்தலைவரின் மனைவி நாளை ஒரு பெரிய பானையும், 5 சிறிய பானைகளில் தயிரும் எடுத்து வர சொன்னார்களாம். அந்தபடியே அவரும் அடுத்த நாள் வந்தார். மதத் தலைவரின் மனைவி பெரிய பானையில் 5 சிறிய பானைகளில் உள்ள தயிரையும் ஊற்றி கலக்க சொன்னார். அவரும்  அப்படியே செய்தார். அதன் பின்னர், எந்த எந்த பானையில் இருந்து தயிரை ஊற்றினாயோ, அதை மீண்டும் அதிலேயே  என்ற போது கேள்வி கேட்டவர் திகைத்தார். 

இது போல தான் பெண் பலதார மணம் முடிந்தால் நிகழும். அவர் யார் வாரிசை வயிற்றில் சுமக்கிறார் என்பது கண்டு பிடிக்கவே முடியாது. அதனால் தான் பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று மதத்தின் நிறுவனத் தலைவரின் மனைவி விளக்கினார்.

போர்களில் கூட தோற்ற நாட்டின் ஆண்களை வெற்றி பெற்றவர்கள் கொலை செய்வார்கள். அதே நேரத்தில் அங்கு வசிக்கும் பெண்களை பலாத்காரம் செய்வார்கள், அல்லது அவர்களை தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்று தங்கள் பாலியல்  ரீதியாக வடிகால்களாக பயன்படுத்தி கொள்வார்கள்.

இந்த சூழ்நிலையில் தான், பெண்கள் பாதுகாப்பிற்காக வீட்டிற்குள் அடைக்கப்பட்டனர். சிறையில் விசாரணைக் கைதிக்கும், தண்டனைக் கைதிக்கும் வேறு பாடு இருந்தால் கூட பார்க்கிறவர்களுக்கு 2 பேரும் சிறையில் இருந்ததாகத்தான் தெரியும். இதைப் போலதான், பெண்கள் வீட்டிற்குள் அடங்கி இருந்ததும். 

இது பாதுகாப்பு என்பதை விட அடிமைத்தனமாகவே பார்க்கப்பட்டது.  இந்த நாட்டில் அது போன்ற வழக்கம் இல்லை என்றால் கூட, மற்ற மதங்களின் தாக்கத்தில் சர்வ சுதந்திரமான இந்து மதத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்யப்பட்டார்கள்.

மனதுக்குள் தன்னை பெண்ணாக கருதும் ஆண்களை திருநங்கைகள் என்று பேசும் சமுதாயம், ஆண் வேடமிட்டு அலைபவர்களை புதுமைப் பெண் என்று விமர்சனம் செய்தது. என் பெண்ணை ஆம்பிளை மாதிரி வளர்த்து இருக்கேன் என்று பெற்றவர்கள் பெருமிதம் அடைந்தனர்.

அதே நேரத்தில், குடும்பங்களில் பெண்கள் மீது அக்கரை காட்ட வேண்டும் என்று ஆண் பிள்ளைகளுக்கு சொல்லித் தரவோ, வழிகாட்டவோ இல்லை. இதனால் பெண்கள் தங்கள் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டனர். அவர்கள் தகுதியும், திறமையும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேடைகளில் அவற்றை வெளிப்படுத்தவும் வாய்ப்பு இல்லை. 

இந்த சூழ்நிலையில் தான் டிக்டாக், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செயலிகள் அவர்களின் வடிகாலாக மாறியது. இதை பார்ப்பவர் தங்களை தொடர்ப்பு கொள்ள முடியாது. அவர்கள் விமர்சனங்களும் தங்களை பாதிக்காது என்ற சூழ்நிலை பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொண்டனர்.

டிக்டாக் செயலி அறிமுகமான புதிதில் பெண்கள் பாடும் திறமையை வெளிப்படுத்தினர். லைக்குகள் வந்தன. ஆடத் தொடங்கினர். லைக்குள் அதிகரிக்க தொடங்கின. ஆடைகளை நெகிழவிட்டு குத்தாட்டம் போட்டார்கள் லைக்கோ லைக் என்று கொட்டத் தொடங்கின. தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் பெண்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் ஆணாதிக்க சக்தியாக பார்க்கப்பட்டார்கள். பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள். பூர்ஷ்வாக்கள் என்று விமர்சனம் செய்யப்பட்டார்கள்.

இதனிடையே பொள்ளாச்சியில் ஆபாச வீடியோ எடுத்து பெண்களை சீரழித்த செய்தி வெளியானது. இது அந்த பெண்களின் திமிரு, டிக்டாக்கில் அப்படி எல்லாம் நடக்காது என்று நம்பி பலர் டிக் டாக் குத்தாட்டத்தை தொடர்ந்தனர். அதன் விளைவு இப்போது வெளிப்பட்டுள்ளது. 

சேலம் பகுதியை சேர்ந்த 28 பெண்களின் டிக்டாக் தளத்தில் வெளியிட்ட வீடியோக்கள் சிறிது மாற்றப்பட்டு ஆபாச தளங்களில் உலாவருகிறது. இதை பார்த்து அதிர்ந்த பெண்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதை முழுமையாக நீக்க முடியுமா என்பது கேள்விக்குறி. அதே நேரத்தில் இது வரை எத்தனை பேர் இந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து இருப்பார்கள்.; அவர்கள் எப்போது இதை பரவ விடுவார்கள் என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள்.

இலவம் பஞ்சு காயாக இருக்கும் போது அதன் உள்ளே பாதுகாப்பாக இருக்கும் பஞ்சு, அது மரத்திலேயே வெடிக்கும் போது ஊர் முழுவதும் பரவி விடும். அப்புறம் யாராலும் மீண்டும் அதை  அந்த மரத்திற்கு கொண்டு செல்ல முடியாது. அதைப் போன்ற சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது என்பதை சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த சம்பவத்திற்கு பிறகாவது மற்றவர்கள் இது போன்ற விஷயங்களில் தலையை கொடுக்காமல் இருக்க வேண்டும். மேலும் ஆபாச படங்களில் நடிக்க வென்றே நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் முழு உடலை காட்டி கூட டிக் டாக் வீடியோ போடுவார்கள். செயற்கையாக பல லட்சம் லைக்குகள் வந்து விழும். அது நம்மவர்களுக்கு போடப்படும் துாண்டில் புழு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதை தாண்டி தாங்களும் ஆடைகளை அவிழ்க்க தொடங்கினால் புழுவை தின்ன முயன்ற மீனுக்கு சாவு தான் எப்பதை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP