தொடர வேண்டும் இந்த நேர்மை!

அதிமுக, திமுக கட்சிகள் வாக்கு தவறாதவர்கள் நாங்கள் என்று நிரூபித்துவிட்டன. இந்த நேரத்தில் அன்புமணி, வைகோ ஆகியோர் தங்கள் பங்கிற்கு நேர்மை, நன்றி. விஸ்வாசம் போன்றவற்றை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
 | 

தொடர வேண்டும் இந்த நேர்மை!

வைகோ, அன்புமணி ஆகியோர் மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் சில நாட்களுக்கு முன்பு தான் நிம்மதியாக துாங்கி இருப்பார்கள்.  சமீப காலங்களில் "கையில காசு வாயில் தோசை" என்று கூட்டணி அமைக்காமல் சட்டசபை, மக்களவைத் தேர்தல் கூட்டணி பேசும் போதே இலவச இணைப்பாக ராஜ்யசபா தேர்தல் கூட்டணியும் பேசப்படுகிறது. 

இவ்வாறு பாமக, அதிமுக கூட்டணியில் முடிவு செய்து ஜெயலலிதா தலைமையில் தேர்தலில் நின்றபோது, பாமக தோல்வியை தழுவ, அக்கட்சி ஒத்துழைப்பு தரவில்லை என்று ராஜ்யசபா ஒப்பந்தத்தை ஜெயலலிதா முறித்துக் கொண்டார். பாமக ஏமாற்றம் அடைந்தது.

இந்த முறை கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத பெரிய தேர்தல். மக்களவைத் தேர்தல் முடிந்த 2 மாதங்களில் ராஜ்யசபா தேர்தல் நடக்கும் வாய்ப்பு இருந்தது. இந்த சூழ்நிலையில் பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் லோக்சபா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே இலவச இணைப்பாக ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடம் வழங்க வேண்டும் என்று பேசி முடித்தார்கள்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரு இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் தோல்வியை தழுவியது. ஜெயலலிதா கூறியதைப் போலவே இப்போதும் பாமக ஒத்துழைப்பு  தரவில்லை என்று ராஜ்யசபா உடன்பாட்டை ஊத்தி மூடியிருக்கலாம். திமுக கூட்டணி கூட துரைமுருகனை துாண்டிவிட்டு வைகோவை அம்போவாக்கிவிட்டு இருக்கலாம். 

ஆனால் அதிமுக, திமுக தலைவர்கள் அவ்வாறு நடக்காதது பாராட்டுக்குரியது. இத்தனைக்கும் அதிமுக எம்பிக்கள் தான் தற்போது ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு இழப்பு என்று தெரிந்தும் கூட பாமகவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த இடத்தில் மைத்ரேயனுக்கு இடம் கொடுத்திருந்தால் மத்தியில் லாபி செய்ய அந்த கட்சிக்கு ஒரு வாய்பாக அமையும். அதையும் அவர்கள் இழந்திருக்கிறார்கள்.

தொடர வேண்டும் இந்த நேர்மை!

திமுக அணியில் கனிமொழி, டிஆர் பாலு, தயாநிதிமாறன் என்று ஜாம்பவான்கள் கை லோக்சபாவில் ஓங்கிய நிலையில், ராஜ்யசபாவிலும் தான் வலுப்பெற வேண்டும் என்ற நினைப்பில் வைகோ அனுப்பி வைத்திருக்கலாம். அல்லது நாம் சீட்டு கொடுப்போம், தேர்தல் கமிஷன் தள்ளுபடி செய்துவிடும் என்ற நம்பிக்கையில் சீட்டு ஒதுக்கியிருக்கலாம். ஆனால் வைகோ கும்பிடும் பெரியார்  (ஆன்மீகவாதியாக இருந்தால் கடவுள் என்று சொல்லியிருக்கலாம்) அவரை காப்பற்றிவிட்டார்.

இப்படி அதிமுக, திமுக கட்சிகள் வாக்கு தவறாதவர்கள் நாங்கள் என்று நிரூபித்துவிட்டன. இந்த நேரத்தில் அன்புமணி, வைகோ ஆகியோர் தங்கள் பங்கிற்கு நேர்மை, நன்றி. விஸ்வாசம் போன்றவற்றை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

 2014-இல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தது. அதில் அன்புமணி மட்டுமே வெற்றி பெற்றார். சில மாதங்களில் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார் அன்புமணி. 

அதன் பிறகு பாஜக ஆட்சிக்கும் அவரால் உதவியில்லை, தமிழக மக்களுக்கும் எந்தவிதமான பலனும் இல்லை. 5 ஆண்டுகள் அவர் எம்பியாக இருந்தது தான் மிச்சம். பாமகவின் வளர்ச்சிக்கு அவர் உதவியிருந்தால் கூட இந்த முறை அவராவது லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று இருக்க முடியும். இதுபோன்று வரும் காலங்களில் அன்புமணி இருக்க கூடாது.

தொடர வேண்டும் இந்த நேர்மை!

வைகோவும் கூட தேர்தலுக்கு தேர்தல் அணிமாறிக் கொண்டுதான் இருந்தார். ஆனாலும் வெற்றி அவருக்கு தொலைவில் இருந்தது. மணல் கொள்ளை, ஸ்டெர்லைட் ஆலை, முல்லை பெரியாறு பிரச்னை, காவிரி நீர் பிரச்னை என்றெல்லாம் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்த அவருக்கு தற்போது ராஜ்யசபா எம்பி பதவி கிடைத்திருக்கிறது. இப்போது கிடைத்த பதவியை கொண்டு அவற்றை தீர்வு காண முயற்சியாவது செய்ய வேண்டும்.

திமுக, அதிமுக கட்சிகள் தாங்கள் சொன்ன சொல்லை தட்டாதவர்கள் என்று தங்கள் செயலால் நிரூபித்துவிட்டன. இந்த இரு கட்சிகளின் புதிய தலைமை பாராட்டும் விதத்தில் செயல்பட்டு இருக்கிறார்கள். அதன்படியே நாங்களும் இருக்கிறோம் என்று நிரூபிக்க வேண்டிய கடமை வைகோ, அன்புமணி ஆகியோருக்கு உள்ளது. செய்வார்களா என்பது வரும் காலங்களில்தான் தெரியும்.

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP