திருவாரூர் தந்த திருமகன்: கருணாநிதி நினைவலைகள்!

தமிழக முதலமைச்சர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் கலைஞர் என அன்போடு அழைக்க்கப்படும் கருணாநிதி. 1924ம் ஆண்டு ஜூன் 3ம் நாள் திருக்குவளை எனும் கிராமத்தில் பிறந்த இவர், இளம் வயது முதலே தமிழ் மீது காதல் கொண்டவராய் இருந்தார்.
 | 

திருவாரூர் தந்த திருமகன்: கருணாநிதி நினைவலைகள்!

தமிழக அரசியல் தலைவர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் கலைஞர் என அன்போடு அழைக்கப்படும் கருணாநிதி. 1924ம் ஆண்டு ஜூன் 3ம் நாள் திருக்குவளை எனும் கிராமத்தில் பிறந்த இவர், இளம் வயது முதலே தமிழ் மீது காதல் கொண்டவராய் இருந்தார். 

ஈவேரா, அண்ணா போன்றோரின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, சிறு வயதிலேயே சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் வளம் வந்தார். தன் அசாத்திய பேச்சாற்றலால், மக்கள் மனங்களில் இடம் பிடித்து, திமுக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்றார். 

கட்சியில் மெல்ல மெல்ல முக்கியத்துவம் பெற்ற இவர், அண்ணாதுரை மறைவுக்குப்பின் கட்சித்தலைவர் ஆனார். பின் தமிழக முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். கதை, கட்டுரை, கவிதை எழுதுவதில் வல்லவரான கருணாநிதி, பல்வேறு திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். கடைசி வரை கட்சி தலைவர் பொறுப்பு வகித்த இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மதம் 7ம் நாள் வயது முதிர்வால் இயற்கைக்கு எய்தினார். 

சுதந்திர தினத்தன்று அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றலாம் என்ற உரிமையை பேர்டு தந்ததில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழை பெரிதும் நேசித்த இவர், தன ஆட்சி காலத்தில்,  உலக தமிழ் மாநாட்டையும் நடத்தினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP