பிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை” 

மதுரை மாவட்டம் என்றதும் நம் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான். ஆனால் மதுரையில் பல சிறப்புகள் உள்ளது. அதில் ஒன்றுதான் திருமலை நாயக்கர் அரண்மனை அல்லது திருமலை நாயக்கர் மகால். இது குறித்த சிறப்புக் கட்டுரை இதோ...
 | 

பிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை” 

மதுரை மாவட்டம் என்றதும் நம் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான். ஆனால் மதுரையில் பல சிறப்புகள் உள்ளது. அதில் ஒன்றுதான் திருமலை நாயக்கர் அரண்மனை அல்லது திருமலை நாயக்கர் மகால். 
பிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை” 
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த அரண்மனை. திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியிலிருந்து தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார். தமிழக மக்கள் மறவாது நினைக்குமாறு மதுரையை விழாநகரமாகவும், கலைநகரமாகவும் மாற்றியமைத்தார்.  திருமலை நாயக்கர், கட்டடக்கலை மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார்.  பழைய கோயில்களைத் திருத்தி அமைத்தார். இங்கு இந்து, முஸ்லிம் கட்டடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த இந்தோ சரசனிக் பாணியில் திருமலை நாயக்கர் மஹால் கட்டப்பட்டுள்ளது. 
பிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை” 
இத்தாலியக் கட்டடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1860-ஆம் ஆண்டுக்கு பிறகு ஆங்கிலேயர்களால் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் அன்றைய திருமலை நாயக்கர் மஹாலின் நான்கில் ஒரு பகுதியே தற்போது உள்ளது. இந்த அரண்மனை, 58 அடி நீள்மும் 5 அடி விட்டமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த அரண்மனையை 248 பிரமாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கி இருந்தன. 
பிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை” 
அரண்மனை முகப்பு, நாட்டிய அரங்கம் மற்றும் பிரதான மண்டபம் போன்றவை இந்த அரண்மனையின் முக்கிய அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. ஆனால் தற்போது ஒரு சில பகுதிகள் மட்டுமே உள்ளன. அக்காலத்தில் இந்த அரண்மனை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றொன்று ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. இதில்  சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.

பிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை” 

திருமலை நாயக்கர் மஹால் 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1981 ஆம் ஆண்டுமுதல் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. சுற்றுலா வளர்சிக் கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி கட்சி நாள்தோறும்  ஆங்கிலத்திலும்,  தமிழிலும் நடைபெறுகின்றன. இந்த மஹாலை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலை தூக்கி நிறுத்துகின்றன. 
பிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை” 
மஹாலின் சிறப்பம்சமே அங்கு இருக்கும் பிரமாண்ட தூண்கள்தான். இங்கு உள்ள பல தூண்களை நீங்கள் கட்டிபிடிக்க நினைத்தாலும் முடியாத அளவிற்கு பெரிய தூண்கள். மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்களால் கட்டப்பட்டுள்ளது. மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் வெள்ளைக் கலவை கலந்து பூசப்பட்டுள்ளது. தூண்களில் செதுக்கப்பட்டுள்ள அழகிய சிற்பங்களை காணலாம். தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்ட மஹால் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மஹாலில் உள்ள சிம்மாசனம் திருமலை நாயக்கரின் சிம்மாசனம் ஆகும். யானைத் தந்த சிற்பங்கள் திருமலை நாயக்கர் மஹால் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதோடு பழமையான கல்வெட்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 
பிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை” 
தற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் இந்த மஹால் இயங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகே இந்த அரண்மனை அமைந்திருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளிநாட்டினர் இந்த அரண்மனையை சுற்றிப் பார்த்து ரசித்துவிட்டுச் செல்கின்றனர். அரண்மனையைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள், சிறிதுநேரம் ஓய்வெடுத்துச் செல்ல, அரண்மனை வளாகத்தில் பூங்கா ஒன்று செயல்படுகிறது. 
பிரம்மாண்ட தூண்கள் கொண்ட ”திருமலை நாயக்கர் அரண்மனை” 
கடந்த காலத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பூங்காவை, தற்போது மாநகராட்சி பராமரிக்கிறது. திருமலை நாயக்கர் அரண்மனை மஹாலை பராமரிக்க போதிய ஆட்கள் இல்லாமல் உள்ளது. தொல்லியல்துறையின் இந்த விதிமுறைகளை மீறி, திருமலை நாயக்கர் அரண்மனை தற்போது வணிக வளாகம் போலவும், வாகனக் காப்பகம் போலவும் செயல்படுகிறது. பாரம்பரிய கட்டடங்களை பராமரிக்க வேண்டிய தொல்லியல்துறை இப்படி அலட்சியமாக இருப்பது வேதனையாகத்தான் உள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP