ஜால்ரா பாட்டு புத்தகம் அல்ல பாடபுத்தகங்கள்!

கடந்த திமுக ஆட்சியில் எத்தனை பள்ளிகளில் கல்வி வளர்ச்சி தினம் கொண்டப்பட்டது, தற்போது எத்தனை பள்ளிகளில் அவை கொண்டாப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளில் எத்தனை பள்ளிகளில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது, தற்போது அவற்றின் எண்ணிக்கை எவ்வளவு என்று பார்த்தால், நம்மவர்கள் எந்த அளவிற்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என்பது விளங்கும்.
 | 

ஜால்ரா பாட்டு புத்தகம் அல்ல பாடபுத்தகங்கள்!

ஆசிரியர் பணி அறப்பணி அதற்கு நீ அர்பணி என்பார்கள். வேலை நியமன தடைச்சட்டம் இருந்தாலும், இந்த தலைமுறையை காப்பாற்றும் மருத்துவத்துறையும், வருங்காலத் தலைமுறையை சரியான முறையில் உருவாக்கும் ஆசிரியர் நியமனமும் எவ்விதத் தடையும் இல்லாமல் தொடரும். 

அப்படிப்பட்ட ஆசிரியர்கள்கள், ஆளும் கட்சியினர் கூட விரும்பாத போதே, அவர்களுக்கு துதிபாடும் போது வருங்காலத் தலைமுறை தடுமாறித்தான் போய்விடும். இதில், தமிழ் ஆசிரியர்கள் பங்கு அதிகம். மன்னர் ஆட்சிக்காலத்தில் அவர்களை புகழ்ந்து பாடியே பரிசு பெற்ற பழக்கத்தால், அதையே ஜனநாயக நாட்டிலும் தொடர்ந்து வருகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு முன்பாக தமிழாசிரியர்கள் ஆன்மீக நம்பிக்கை கொண்டே இருந்தனர். அவர்கள் பாடத்திட்டத்தில் இருந்த ராமாயணத்தையோ, மகாபாரதம், திருக்குறள் போன்றவற்றை மாணவர்களுக்கு உணர்வு பூர்வமாக சொல்லிக் கொடுத்தார்கள். இதனால், ‛நான் அந்த ஆசிரியரிடம் தமிழ்படித்தவன்’ என்று சம்பந்தப்பட்ட மாணவர்கள் பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டார்கள். 

திராவிடர் கழகம் பரவ பரவ பெரும்பாலான தமிழாசிரியர்கள் நாத்திகத்தில் ஊறிவிட்டனர். ஆனால், அப்போதும் கூட கம்பராமாயணம், திருக்குறள், நாலடியார் என்று தான் பாடங்கள் தொடர்ந்தன. பெரியாரைப் பற்றியோ, நாத்திகம் பற்றியோ பாடங்கள் இல்லை. இதனால் தமிழாசிரியர் பரீட்சைக்கு ஒன்று, வாழ்க்கைக்கு ஒன்று என்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்து கல்வி கற்றுத்தந்தார்கள்.

பொதுவாக மொழிப்பாடங்கள் தான் மனிதனை மனிதனாக்கும். ‛படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, நாத்திக சிந்தனை கொண்ட ஆசிரியர், ஆத்திக பாடங்கள் எடுத்ததால் மாணவர்கள் வாழ்க்கையில் அவற்றை கடைபிடிப்பதற்கு பதிலாக, வெறும் மதிப்பெண்ணிற்காக மட்டுமே அவற்றை படித்தார்கள். இதனால், படிக்கும் போது மதிப்பெண் பிரதானம், படித்து முடித்த பின்னர் பணமே பிரதானம் என்று மாறிவிட்டனர்.

இப்படி உருவான தலைமுறையினர் பணம் சம்பாதிக்க, ஆள்பவரை ஆண்டவராகவே பாடுவதை வாழ்வியல் கீதமாகவே மாற்றிவிட்டனர். இவர்கள் தான் தகுதி உள்ளவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, அனைத்து பதவிகளிலும் அமர்ந்து கொள்கின்றனர். இது, கல்வித்துறையில் அதிகம். 

கடந்த திமுக ஆட்சியில் எத்தனை பள்ளிகளில் கல்வி வளர்ச்சி தினம் கொண்டப்பட்டது, தற்போது எத்தனை பள்ளிகளில் அவை கொண்டாப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளில் எத்தனை பள்ளிகளில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது, தற்போது அவற்றின் எண்ணிக்கை எவ்வளவு என்று பார்த்தால், நம்மவர்கள் எந்த அளவிற்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என்பது விளங்கும்.

ஜால்ரா பாட்டு புத்தகம் அல்ல பாடபுத்தகங்கள்!

இதுவரையில், கல்விசாராத செயல்பாடுகளில் மட்டுமே தங்களின் கைவரிசை காட்டிய இவர்கள், இந்த முறை பாடப் புத்தகங்களிலும் அதனை காட்ட தொடங்கி விட்டனர். மத்தியில், பாஜக அரசு வந்ததும், இவர்களுக்கு தேசத்தின் மீது பற்று பொங்கி ஊற்றத் தொடங்கிவிட்டது. பாரதியார் படத்தில் தேசிய கொடியில் உள்ள வர்ணங்கள் வரும்படி வெளியிட்டு சர்ச்சையை தொடங்கி விட்டனர். நம் மதசார்பற்றவர்கள் பாரதியார் படத்தில் பச்சை இருப்பதை விட்டு விட்டு காவி இடம் பெற்றதே நியாயமா என்று கேள்வி எழுபினர்.

கடந்த காலங்களில் பாடபுத்தகங்களில் பாடங்கள் இருக்கும், நீதி, நேர்மை, ஒழுக்கம் ஆகிவற்றை வலியுறுத்தும் விஷயங்கள் துணைப்பாடங்களில் இருக்கும். அவற்றை கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால் அவை தேர்வுக்கு பலன் தராது. இந்த முறை நேரடியாகவே பாடபுத்தகங்களிலேயே நடிகர்கள் முதல், சாதாரண மக்கள் வரை பாடங்களாக வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் தேர்வு செய்த பட்டியலைப் பார்த்தால் உண்மையில் அமைச்சர் இதை பார்த்தாக தெரியவில்லை. பாடத்திட்ட உறுப்பினர்கள் ஜால்ரா கும்பல் போலவே தெரிகிறார்கள். பிரபல நடிகர் ஒருவரை பாடபுத்தகத்தில் இணைத்து இருக்கிறார்கள். அவர் சினிமாவை பார்த்தே பால் அபிஷேகம் செய்யும் அளவிற்கு இளைஞர்கள் மாறிவிட்டனர். அதே வேளையில் அவர் பாடபுத்தகத்திலும் இடம் பெற்றால் அவர் சினிமாவில் செய்யும் அனைத்துமே சரி என்றாகிவிடும்.

பொதுவாக உயிரோடு இருப்பவரை சமுதாயத்தின் மிகப் பெரிய அந்தஸ்து தருவதில்லை. காரணம் அவர் எப்போது வேண்டுமானாலும் சிறிது தடம் மாறலாம். ஆனால், இப்போது பலர் சாதாரண மனிதர்கள், தற்போது பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். வருங்காலத்தில் அவர்கள் தடம் மாறினால் சமுதாயத்தில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்.

அதே போல, 7வது சமூக அறிவியல் பாடத்தில், இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி, சுந்திரத்திற்கு பிறகு இஸ்லாயத் தலைவர்கள் முஸ்லீம் ஆட்சியை நிறுவ முயன்றனர் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரிகளை தமிழக அரசு நீக்கி விட்டது. 

ஆனால் இது எப்படி உருவானது, இதை அனுமதித்தது யார், ஏன் அனுமதித்தார்கள் என்று ஆய்வு செய்து மற்றவர்களுக்கு பயம் ஏற்படும் வகையில் தண்டிக்க வேண்டும். இதை அனுமதித்தவர்கள் இரு பிரிவாகத்தான் இருப்பார்கள். மத்திய, மாநில அரசுகளை துதிபாடினால் தங்களுக்கு நல்லது என்று நினைப்பவர்கள் அல்லது, இது போன்ற ஒரு சில வரிகளை பாடப்புத்தகத்தில் நுழைத்து விட்டால், இது கட்டாயம் மத்திய, மாநில அரசுகள் மீது வெறுப்பை வளர்க்கும் என்று திட்டமிட்டு நுழைத்து இருப்பார்கள். 

எப்படி இருந்தாலும் அது அரசுகளுக்கு எதிரானது. அதையும் தாண்டி மாணவ சமுதாயத்திற்கு தீங்கு விளைவிப்பது. இவற்றை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP