அத்திவரதரும், அறிய முடியாத பாடங்களும்..!

இந்துக்கள் மட்டும் பொதுவாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்று வாழ்கிறார்கள் என்பதை அத்திவரதர் தரிசன வைபவம் எடுத்துக்காட்டி உள்ளது. இந்த வாழ்க்கை முறை மிகவும் அபாயகரமானது. பொதுவாழ்க்கை நன்றாக இருந்தால் தான் குடும்பம் அமைதியாக இருக்கும். நம்மை ஆள்பவர்கள் நமக்கு எதிரான கொள்கை கொண்டவர்களாக இருந்தால் அதன் பாதிப்பும் ஒவ்வொருவருக்கும் வரும்.
 | 

அத்திவரதரும், அறிய முடியாத பாடங்களும்..!

பாரதி பித்தன்

கும்பகோணம், காஞ்சிபுரம் தமிழகத்தில் கோயில்கள் அதிகம் கொண்ட ஊர்கள். அன்றாடம் இவற்றிக்கு சென்று வருபவர்கள் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால்  திடீரென்று  ஜூன் மாதம்  அத்திவரதர்  40 ஆண்டுகளுக்கு ஒரு முறை  வெளியே வந்து தரிசனம் தரப் போறாராம். 48 நாள் இருப்பாராம் என்று தகவல் பரவியது.  

தமிழகம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பூமி  என்று பேசியவை பொய்யாய் பழங்கதையாக மாறி இது பகுத்தறிவு பூமி, ஈரோட்டு மண் என்றெல்லாம் பேசப்படும் நிலையில் அத்திவரதர் வந்தார் சென்றார் என்று தான் இருக்கும். கடந்த முறை 10 லட்சம் பேர் வந்தார்கள் இந்த முறை  20 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தால் சுமார்  ஒரு கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். 

அத்திவரதரும், அறிய முடியாத பாடங்களும்..!

அண்ணாதுரை பிறந்த  ஊரில் அத்திவரதர் இவ்வளவு வரவேற்பு பெறுவார் என்பதை யார் தான் அறிவார். நாக்கு தழும்பு ஏற நாத்திகம் பேசியவர்கள் கட்டியது சீட்டுக் கட்டு மாளிகை என்று அத்திவரதர்  வாய் அசைக்காமலேயே களைத்து விட்டார். இத்தனை பக்தியாளர்கள்  உள்ள மாநிலத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவும், நெற்றி நிறைய  விபூதி பூசி வலம் வரும் ஆளும் கட்சியினர்  வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் நெற்றியில் ரத்தம் வழிகிறதா என்று கேலி பேசிய கட்சியினர் வெற்றி பெறுகிறார்கள். 

மக்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. வீட்டிற்கு அத்திவரதர் அருள் வேண்டும், நாட்டிற்கு நாத்திகம் பரவாயில்லை.  இந்த மக்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அப்படியென்றால் 48 நாட்களும் சுயநலம் தான் அனைவரையும் காஞ்சிபுரம் நோக்கி உந்தி தள்ளியதா?. இந்த கேள்விக்கு ஆம் என்று பதில் சொன்னால் இவர்களுக்கு என்ன செய்து என்ன பலன் கிடைக்கும்.

அவாள் நம்மை அடிமைப்பத்துகிறார்கள். நாம் தமிழ் இனம் இந்த தெய்வங்கள் ஆரிய வந்தேரிகள் புகுத்தியது என்று எல்லாம் பேசியவர்களின் மனைவி விவிஐபியாக சென்று தரிசிக்கிறார்கள். அவர் பக்தியை மட்டும் வெளிப்படுத்தவில்லை. என் கணவர் உள்ளிட்டவர்கள் உங்களை எவ்வளவு ஏமாற்றுகிறார்கள். நீங்கள் எத்தனை முட்டாள்கள் என்று எடுத்துக் காட்டி உள்ளார். 

நடிகை நயன்தாரா சென்று பார்த்ததை விமர்சனம் செய்த தமிழர்களில் ஒரு சிலராவது, திமுக தலைமையை இனி நாத்திகம் பேசாதீர்கள், பகுத்தறிவு என்று ஊரை ஏமாற்றாதீர்கள், நாங்கள் ஏமாளிகளோ, கோமாளிகளோ இல்லை என்று யாரும் எடுத்துக் கூறவோ, விமர்சனம் செய்யவோ இல்லை.

அத்திவரதரும், அறிய முடியாத பாடங்களும்..!

இந்துக்கள் மட்டும் பொதுவாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்று வாழ்கிறார்கள் என்பதை அத்திவரதர் தரிசன வைபவம் எடுத்துக்காட்டி உள்ளது. இந்த வாழ்க்கை முறை மிகவும் அபாயகரமானது. பொதுவாழ்க்கை நன்றாக இருந்தால் தான் குடும்பம் அமைதியாக இருக்கும். நம்மை ஆள்பவர்கள் நமக்கு எதிரான கொள்கை கொண்டவர்களாக இருந்தால் அதன் பாதிப்பும் ஒவ்வொருவருக்கும் வரும். 

1979-ஆம் ஆண்டு நாம் பார்க்கவில்லை, 2059-ஆம் ஆண்டில் நாம் இருப்போமா என்று தெரியவில்லை அதனால் அத்திவரதர் தரிசன வைபவத்திற்கு இவ்வளவு பேர் வந்து குவிந்தனர். அதாவது இன்றைக்கு 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அடுத்த முறை அத்திவரதரை பார்ப்பது அவ்வளவு எளிதான செயல் இல்லை. அதாவது இந்த பூமியில் இன்னும் 40 ஆண்டுகள் தான் வாழப் போகிறோம் என்று வாழ்க்கையின் நிலையாமையை எடுத்துக் காட்டி உள்ளார். 

அத்திவரதரும், அறிய முடியாத பாடங்களும்..!

இந்த முறையே அத்திவரதரை தரிசனம் செய்ய எவ்வளவு சிரமப்பட்டோமோ அதை விடகொஞ்சம் கூடுதலா சிரமம் தான் நேர்மையாக, உண்மையாக, லஞ்சம் வாங்காமல் வாழ்வது. இவ்வாறு அதிகபட்சமாக 40 ஆண்டுகள் செய்துவிட்டால் போதும் அத்திவரதர் மட்டும் அல்ல முப்பத்து முக்கோடி தேவர்களும், சுமார் 110 கோடி இந்தியர்கள் நேரில் வந்து சந்திப்பார்கள். 

இந்த வகையில் இந்த கால நடுத்தரவயதினர் சிந்திப்போமா. இவர்கள் ஒரு கோடி பேர் என்றால் நாடு உலகின் குருவாக மாறிவிடும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP